search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதார்"

    • ஜான் லான்டௌ உயிரிழப்பை அவரது மகன் உறுதிப்படுத்தினார்.
    • இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பர் ஆவார்.

    உலகளவில் புகழ்பெற்ற திரைப்படங்களான டைட்டானிக் மற்றும் அவதார் உள்ளிட்டவைகளை தயாரித்த தயாரிப்பாளர் ஜான் லான்டௌ (63) உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ஜேமி லான்டௌ உறுதிப்படுத்தினார்.

    இவரது உயிரிழப்புக்கு காரணம் தெரிவிக்கப்படவில்லை. எனினும், இவர் கடந்த வெள்ளிக்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உயிரிழந்துள்ளார். இவர் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் நீண்டகால நண்பரும், தயாரிப்பாளரும் ஆவார்.

    கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லான்டௌ முதல் முறையாக ஜேம்ஸ் கேமரூனுடன் பணியாற்றுவது பற்றி பேசினார். அப்போது அவர் கூறும் போது, "ஜிம் கொஞ்சம் சந்தேக குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். இதனால், நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன்," என்றார்.

    ஜூலை 23, 1960 ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர் ஜான் லான்டௌ. இவரது பெற்றோர் எலி லான்டௌ மற்றும் எடி லான்டௌ அமெரிக்க ஃபிலிம் தியேட்டரை துவங்கி படங்களை தயாரித்து வந்தனர். இவர் பாராமௌன்ட் உடன் இணைந்து கேம்பஸ் மேன் படத்தின் மூலம் 1987 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் ஆனார்.

    இதைத் தொடர்ந்து இவர் டிஸ்னியுடன் இரண்டு படங்களை இணைந்து தயாரித்துள்ளார். இவர் கடைசியாக அவதார் படத்தின் அடுத்த பாகங்களை தயாரிப்பதில் தீவிரம் காட்டி வந்தார்.

    • "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
    • மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்

    சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.

    வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.

    மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.

    மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.

    சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.

    "வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.

    வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'அவதார்-த வே ஆப் வாட்டர்'.
    • புதுவையில் இப்படம் வெளியான திரையரங்கில் ஊழியர்கள் அவதார் வேடம் அணிந்து ரசிகர்களை வரவேற்றனர்.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் வெளியாகி உலக அளவில் சினிமா ரசிகர்களை வியக்க வைத்த திரைப்படம் 'அவதார்'. சயின்ஸ்-பிக்சன் படமான அவதார் உலகின் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. அவதார் திரைப்படத்தின் 2-ம் பாகமான 'அவதார்-த வே ஆப் வாட்டர்' கடந்த 16-ந் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 52 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான அவதார் 2 தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.

     

    அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

    அவதார் வேடம் அணிந்த ஊழியர்கள்

    புதுவையிலும் அவதார் திரைப்படம் சில திரையரங்குகளில் வெளியான நிலையில், புதுவை கடலூர் சாலையில் உள்ள வணிக வளாகத்தில் உள்ள தனியார் திரையரங்கில் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் அவதார் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் போன்று வேடம் அணிந்து திரையரங்குக்கு வரும் ரசிகர்களை வரவேற்கின்றனர். இது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அவதார் போல் வேடம் அணிந்துள்ள தியேட்டர் ஊழியர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்'.
    • இப்படம் இன்று (டிசம்பர் 16) திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' இன்று (டிசம்பர்16) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.


    அவதார் -2

    இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 52 ஆயிரம் திரையரங்குகளில் மொத்தம் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் அவதார் 2 வெளியானது.


    அவதார் -2

    இந்தியாவில் இப்படம் முன்பதிவில் மட்டும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேலாக வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பில் உருவான 'அவதார்-2: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சமுத்திரக்கனி தனது சமூக வலைதளப் பக்கதில் அவதார் புகைப்படத்தை பகிர்ந்து, " அசுர உழைப்பு அதிருது" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.


    • இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் ‘அவதார்’ அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகின்றன.
    • அவதார்: தி வே ஆப் வாட்டர் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், 2009-ல் திரைக்கு வந்த அவதார் படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில் நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன. தற்போது அவதார் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. படத்துக்கு அவதார்: தி வே ஆப் வாட்டர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய இந்திய மொழிகள் உள்பட 160 மொழிகளில், டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாகவுள்ளது.


    அவதார்: தி வே ஆப் வாட்டர்

    சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் ஆச்சரியப்படுத்தும் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்று ரசிர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 'அவதார்' திரைப்படம் 5 பாகங்களாக வெளியாகும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தினை மூன்று பாகங்களோடு முடித்து கொள்ளும் எண்ணம் உள்ளது என்றும் ஆனால், அது பாக்ஸ் ஆபீஸ் வசூல் செயல்பாட்டை பொறுத்தே இருக்கும் என்றும் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கேட் வின்ஸ்லெட் அவதார் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • தற்போது இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    உலகப் புகழ் பெற்ற டைட்டானிக் படத்தின் கதாநாயகி கேட் வின்ஸ்லெட் தற்போது ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் டிசம்பர் 16-ஆம் தேதி உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    இதனை தொடர்ந்து நடிகை கேட் வின்ஸ்லெட், எலன் குராஸ் இயக்கத்தில் 'லீ' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு குரோஷியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அப்போது கேட் வின்ஸ்லெட் எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


    இதனிடையே தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் இந்த வாரம் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு வெளியான படம் அவதார்.
    • அவதார் முதல் பாகம் 4கே தொழில்நுட்பத்துடன் மீண்டும் திரைக்கு வரவிருப்பதாக ஜேம்ஸ் கேமரூன் அறிவித்துள்ளார்.

    2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் அமைந்திருந்த இப்படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' என்ற பெயரில் பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

     

    இப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணியில் தீவிரம் காட்டி வருகிறது. அவதார் 2 படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் டிசம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    அவதார்

    அவதார்

    இந்நிலையில் இரண்டாம் பாகம் வெளியாவதற்கு முன்பாக 4கே தொழில்நுட்பத்துடன் ரீமாஸ்டர் செய்யப்பட்ட அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகும் என்று அவதார் திரைப்படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார். வருகிற செப்டம்பர் மாதம் 23-ம் தேதி மீண்டும் அவதார் திரைப்படம் 4கே, 3டி, எச்.டி.ஆர் தரத்தில் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ×