என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏன்?"
- பரபரப்பு தகவல்கள்
- 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது.
கன்னியாகுமரி:
இரணியல் அருகே வில்லுக்குறி கீழப்பள்ளம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு (வயது 46), பெயிண்டர். இவரது சகோதரிகள் ஸ்ரீதேவி (44), உஷா பார்வதி (38).
இவர்கள் 3 பேருக்கும் திருமணம் ஆகவில்லை. ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை இவர்களது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாபு, ஸ்ரீதேவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தனர். உஷாபார்வதி தரையில் பிணமாக கிடந்தார். 3பேர் உடலும் அழுகிய நிலையில் இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட தகவல் அந்த பகுதியில் காட்டுதீபோல் பரவியது.
இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். குளச்சல் டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்து கொண்ட பாபு கடந்த திங்கள்கிழமை தான் வீட்டின் உரிமையாளரிடம் வாடகை பணத்தை கொடுத்து உள்ளார்.
அதன் பிறகு கடந்த 2 நாட்களாக வீட்டில் எந்த நடமாட்டமும் இல்லாமல் இருந்தது தெரியவந்துள்ளது. எனவே திங்கள்கிழமையே இவர்கள் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறா ர்கள். பிணமாக கிடந்த 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. 3 பேர் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேருக்கும் திருமணமாகாத நிலையில் உஷா பார்வதி கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார். இதனால் மனவருத்தத்தில் இருந்துள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை கடன் பிரச்சினை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பலியான 3 பேரின் பெற்றோரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் இவர்களது உடலை ஒப்படைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. உற வினர்கள் யாரும் வாரதால 3 பேரின் உடலை ஒப்படைப்பது குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளார்.
- கணவர் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார்.
- தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நான்காம் திட்டுவிளை செறுகோல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (வயது (57). இவர்களுக்கு ஸ்டாலின் ஜோஸ் (23) என்ற மகனும், ஷைனி (28) என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஸ்டாலின் ஜோஸ் கேரளாவில் கட்டிட வேலை பார்த்து வருகிறார். வாரம்தோறும் வீட்டுக்கு வருவது வழக்கம்.
வீட்டில் செல்வராஜ் அவரது மனைவி செல்வி, மருமகள் பென்சிறோஸ் ஆகியோர் வீட்டில் வசித்து வந்தனர். சமீபகாலமாக செல்வி உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன அழுத்ததில் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் வீட்டின் பின்புற தோட்டத்தில் செல்வி தன் மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ மளமளவென பிடித்து உடல் முழுவதும் பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் செல்வி உடல் கருகி பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரனை மேற்கொண்டனர்.
மேலும் தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் சம்பவம் நடந்த இடத்தை பார்த்து ஆய்வு செய்தார். மேலும் போலீஸ் மோப்ப நாய் குக்கி வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. செல்வியின் கணவர் செல்வராஜ் திருவட்டார் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வி தற்கொலை செய்தது ஏன்? என்பது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உருக்கமான தகவல்கள்
- கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
நாகர்கோவில், மே.31-
நாகர்கோவில் மேலரா மன்புதூர் எம்.ஜி.ஆர். சிலை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன். வெல்டிங் தொழி லாளி. இவரது மனைவி நாகர்கோவிலில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது மூத்த மகன் ஸ்டெபின் (வயது 13).
நேற்று காலையில் கணவன்-மனைவி இருவரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். மாலையில் ஸ்டெபினும் அவரது சகோதரரும் வீட்டில் இருந்தனர். அப் போது ஸ்டெபினின் சகோ தரர் வெளியே விளையாட சென்றார். வீட்டில் ஸ்டெபின் மட்டும் இருந்தார். இந்த நிலையில் இரவு ஸ்டீபன் வீட்டிற்கு வந்த போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.
இளைய மகன் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், மூத்த மகன் ஸ்டீபன் வீட்டுக்குள் இருப்பான் என அழைத்துள்ளார். நீண்ட நேரம் அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஸ்டெபின் துப்பட்டாவில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கிக் கொண்டு இருந்தார்.
இதனைப் பார்த்து பார்த்து அதிர்ச்சி அடைந்த ஸ்டீபன், நேசமணி நகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஸ்டெபினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஸ்டெபின் தற்கொ லைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
ஸ்டெபின் தற்போது அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளிகள் 7-ந் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அவரை விடுதி யில் சேர்க்க பெற்றோர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு விடுதியில் சேர்ந்து படிக்க விருப்ப மில்லாததால் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்க லாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பலியான ஸ்டெபின் உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடக் கிறது. பள்ளி மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
- போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலிவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67), மினி பஸ் அதிபர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என விஜயகுமாரின் மகன் விக்னேஷ், போலீசில் புகார் அளித்தார். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திருவட்டாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் கந்துவட்டி கொடுமையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அது சாதாரண தற்கொலை என்றும் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே உள்ள ஞாலம் அந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகள் சுபிதா கிரேஸ் (வயது21).
இவர் திடல் பகுதியில் உள்ள ஒரு நர்சிங் கல்லூரி யில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த சில நாட்களாக சுபிதா கிரேஸ் கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார். அவரை குடும்பத்தினர் மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சை க்காக சுபிதா கிரேஸ் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுபிதா கிரேஸ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்ப ட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி னர். முதல் கட்ட விசாரணை யில் மாணவி சுபிதா கிரேஸ் கல்வி கட்டணம் செலுத்த வில்லை என்று கூறப்படு கிறது.
இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
சுபிதாகிரேஸ் உடல் பிரேத பரிசோதனை ஆசாரிப்பள் ளம் ஆஸ்பத்திரியில் இன்று நடக்கிறது.இதை யடுத்து உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு உள்ளனர்.
- வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
- இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ெபண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.
4 மாணவிகள்
இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள் தங்கி, வாழப்பாடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வருகின்றனர். இந்த நிலையில் விடுதியில் நேற்று காலை 4 மாணவிகளும் திடீரென வாந்தி எடுத்தவாறும், மயங்கிய நிலையிலும் இருந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள், 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு தகவல்
இந்த சம்பவம் குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் 4 மாணவிகளும் விஷம் குடித்தது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த 19-ம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், 4 மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு செல்லாமல் மாணவிகள் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
கடந்த 22-ந்தேதி வீட்டில் இருந்து விடுதிக்கு வந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லவில்லை. இதனிடையே 4 மாணவிகளில் ஒரு மாணவியின் பெற்றோர் கடந்த 22-ந்தேதி விடுதிக்கு வந்துள்ளனர். அப்போது அங்கு மாணவி இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் விசாரித்தபோது மாணவி, சக மாணவிகளுடன் சேர்ந்து யாருக்கும் தெரிவிக்காமல் ஏத்தாபூரில் உள்ள கோவிலுக்கு சென்றிருப்பது தெரியவந்தது. மேலும் விடுமுறை நாளில் நேராக வீட்டிற்கு வராமல் தங்களின் தோழி வீட்டிற்கு சென்றுள்ளதும் தெரிந்தது. இதையடுத்து பெற்றோர் நீண்ட நேரம் விடுதியில் காத்திருந்து விட்டு வீட்டிற்கு திரும்பினர்.
விஷம் குடித்தனர்
இந்த நிலையில் கோவிலுக்கு சென்று விட்டு விடுதிக்கு திரும்பிய மாணவிகள், விடுதிக்கு பெற்றோர் வந்து விட்டு சென்றதை கேள்விப்பட்டனர். பெற்றோர், தங்களை அடித்து விடுவார்கள் என பயந்து நேற்று முன்தினம் மாலை எலிபேஸ்ட் வாங்கிக்கொண்டு விடுதிக்கு வந்து இரவு உணவு சாப்பிட்டு விட்டு எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றிருப்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது
விடுதி ஊழியர்களிடம் விசாரணை
மேலும் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர், போலீஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் விடுதியில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்