search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை வீடு"

    • வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
    • தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, சாலியமங்களம் மேலத்தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 65) இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர்.

    ஏகாம்பரம் சுமை தூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது கூரை வீட்டில் திடீரென தீ பிடித்தது எரிய தொடங்கியது. பின்னர் வீட்டில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதனால் வீடு முழுவதும் தீ பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இதனால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தீயை அணைக்க முடியவில்லை.

    அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்த பாபநாசம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் வீட்டில் இருந்த தளவாட சாமான்கள், மின் சாதனங்கள், கட்டில் பீரோ, புடவை என ரூ. 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

    தீவிபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
    • வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கீழ் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.

    சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசைமுழுவதும் பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள குருவரெட்டியூர் தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது 60). விவசாயி. இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

    இவரது மனைவி குழந்தையம்மாள். இவர்க ளுக்கு செல்வகுமார், தர்ம லிங்கம் என்ற 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமார் கோவையில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை செய்து வருகிறார், தர்ம லிங்கம் டிரைவராக உள்ளார். இவர்கள் அனை வரும் அந்த பகுதியில் குடிசை வீட்டில் தங்கி வரு கிறார்கள்.

    இந்த நிலையில் சம்பவ த்தன்று செல்வகுமார் கோவைக்கு வேலைக்கு சென்று விட்டார். இதை யடுத்து வீட்டில் இரவு சந்திரசேகரன், குழந்தையம்மாள் தர்மலிங்கம் ஆகியோர் படுத்து தூங்கி கொண்டு இருந்தனர்.

    அப்போது வீட்டின் கூரையில் இருந்து புகை வந்தது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.

    அதற்குள் வீடு எரிந்து விட்டது. இதில் வீட்டில் வைத்து இருந்த பள்ளி சான்றிதழ்கள், மார்க் சீட், ஆதார் கார்டு மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள விவசாய பொருட்கள் எரிந்து சாம்பலானது.

    இது பற்றி தகவல் கிடை த்ததும் கிராம நிர்வாக அலு வலர் தமிழரசன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் நந்தீஸ்வரன் சம்பவ இடத்து க்கு வந்து பார்வையிட்டனர்.

    இதை தொடர்ந்து தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
    • அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி ஊஞ்சபாளையம் பகுதியில் வசிப்பவர் சிவக்குமார்(வயது 42). இவர் அந்தப் பகுதியில் குடிசை வீட்டில் மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. லேசாக பற்றிய தீ குடிசை வீடு என்பதால் மளமளவென பற்றி எரியத் துவங்கியது. இதில் வீட்டிலிருந்த பொருட்கள், கட்டில் போன்றவை எரிந்து சாம்பலாகின. இதற்குள் அக்கம் - பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர். இதற்குள் குடிசை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. வீட்டில் இருந்த அனைவரும் வெளியே சென்று இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே தீ விபத்தால் பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு பல்லடம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்.

    • திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.
    • இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி அருகே உள்ள நஞ்சை ஊத்துக்குளி அடுத்த சாவடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தராம்பாள் (85).

    இவரது கணவர் பொன்னுசாமி, மகன் மணி, மகள் லட்சுமி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டனர். இவரது மருமகள் பூவாய் நாமக்கல் மாவட்டம் வேலூரில் வசித்து வரு கிறார்.

    இந்நிலையில் சுந்தராம்பாள் சாவடிபாளையம் பகுதியில் தனியாக குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இரவு சுந்தராம்பாள் இரவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென குடிசை வீட்டில் தீ விபத்து ஏற்பட்டு தீப்பற்றி எரிந்தது.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்த சுந்தரா ம்பாளை மீட்டனர். இதையடுத்து தீயணைப்பு நிலையத்தக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்தனர்.

    இதில் மூதாட்டி சுந்தராம்பாள் அதிர்ஷ்ட வசமாக காயம் இன்றி உயிர் தப்பினார். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×