search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உண்டியல் வருமானம்"

    • திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.
    • 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல்லாயிக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பல மணி நேரம் காத்திருந்து ஏழுமலையான தரிசித்து வருகின்றனர்.

    ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். திருப்பதி உண்டியல் வருமானம் மலைக்க வைக்கும் அளவில் இருந்து வருகிறது.

    கடந்த மாதம் 21 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் ரூ.116.46 கோடி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். 1.03 கோடி லட்டு விற்பனையானது.

    7 லட்சத்து 5 ஆயிரம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி உள்ளனர். 46.46 லட்சம் பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது.
    • தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி கடந்த மாத உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக கோவில் வசந்த மண்டபத்தில் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் ஆகியோர் முன்னிலையில் காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்த பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்து 70 ஆயிரத்து 541-ம், தங்கம் 1100 கிராம், வெள்ளி 29,300 கிராம், பித்தளை 80 கிலோ, செம்பு 6 கிலோ 500 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 417-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.

    நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், கண்காணிப்பாளர் ஆனந்தராஜ், ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத்தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன் ஆகியோரும், பொதுமக்கள் பிரதிநிதிகளாக சுப்பிரமணியன், கருப்பன், மோகன் ஆகியோர் பார்வையாளர்களாகவும் பங்கேற்றனர்.

    • கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.
    • வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.

    இதன்படி செப்டம்பர் மாதம் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன் தலைமையில் இணை ஆணையர் கார்த்திக் முன்னிலையில் நேற்று கோவில் வசந்த மண்டபத்தில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர்கள், தூத்துக்குடி ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர்கள் ஈடுட்டனர்.

    இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ.2 கோடியே 76 லட்சத்து 88 ஆயிரத்து 763, ஆவணி திருவிழா தற்காலிக உண்டியல் மூலம் ரூ.25 ஆயிரத்து 520, மேல கோபுர திருப்பணி உண்டியல் மூலம் ரூ.875, கோசாலை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.19 ஆயிரத்து 711, யானை பராமரிப்பு உண்டியல் மூலம் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 89, கோவில் அன்னதானம் மூலம் ரூ.15லட்சத்து 8 ஆயிரத்து 214, மேல கோவில் உண்டியல் மூலம் ரூ.15 ஆயிரத்து 113, நாசரேத் கோவில் மூலம் ரூ. 1,315, கிருஷ்ணாபுரம் கோவில் மூலம் ரூ.7ஆயிரத்து 432ம் என மொத்தம் ரூ.2 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரத்து 32 கிடைத்தது.

    இதுபோக தங்கம் 2 கிலோ100 கிராம், வெள்ளி 19 கிலோ, பித்தளை 35 கிலோ, செம்பு 4 கிலோ, தகரம் 3 கிலோ, மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 424 கிடைக்கப்பெற்றது.

    உண்டியல் எண்ணும் பணியில் அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில் முருகன், தூத்துக்குடி உதவி ஆணையர் சங்கர், திருச்செந்தூர் ஆய்வாளர் செந்தில் நாயகி, பொதுமக்கள் பிரதிநிதியாக மோகன், சுப்பிரமணிய மணியன், அயல் பணி மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் ஈடுபட்டனர்.

    • நேற்று முன்தினம் 68 ஆயிரத்து 467 பக்தர்கள் சாமி தரிசனம்.
    • 35 ஆயிரத்து 506 பக்தர்கள் தலைமுடி காணிக்கை.

    திருமலை:

    கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கோவிக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஆந்திரா, தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர்.

    மேலும் அவர்கள் அதிக அளவில் உண்டியல் காணிக்கையும் செலுத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் மட்டும் 68 ஆயிரத்து 467 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானம் ரூ.4 கோடியே 67 லட்சம் கிடைத்துள்ளது. மேலும் 35 ஆயிரத்து 506 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியதாகவும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×