என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கரைப்பு"
- இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஒவ்வொரு வருடமும் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு தினந்தோறும் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பின்னர் 5-ம் நாள் விநாயகர் சிலை கள் ஊர்வலமாக எடுத்து சென்று பரமத்தி வேலூர் காசி விஸ்வநாதர் கோவில் காவிரி கரையில் உள்ள காவிரி ஆற்றில் கரைப்பது வழக்கம்.
அதேபோல் இந்த வருட மும் நாமக்கல் மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் 118 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு ஆங்காங்கே நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. 5-ம் நாளான நேற்று மாலை வேலூரில் இருந்து காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் கடைவீதி, காத்தாக்கண்டர் பிரிவு சாலையில் இந்து முன்னணி சார்பில் இந்து எழுச்சி ஒற்றுமை பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கு பரமத்தி ஒன்றிய தலைவர் ராஜவேல் தலைமை வகித்தார். பரமத்தி ஒன்றிய கேசவன் முன்னிலை வகித்தார். பரமத்தி ஒன்றிய ரமேஷ் வரவேற்றார். இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார் எழுச்சியுரையாற்றினார். மாவட்ட பொதுச்செய லாளர் கோபிநாத், மாவட்ட செயலாளர்கள் சரவணன், ஜெகதீசன், மாவட்ட பொருளாளர் பிரபாகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
அதனை தொடர்ந்து பரமத்தி வேலூர் தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்குமார் கொடியசைத்து விநாயகர் சிலை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
கடைவீதி பகுதியில் இருந்து தொடங்கிய விநா யகர் விசர்ஜன ஊர்வலம் திருவள்ளுவர் சாலை, பழைய பை- பாஸ் சாலை, சந்தை பகுதி, பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகர் கோயில், பஸ்நிலையம், அண்ணா சாலை மற்றும் காவிரி சாலை வழியாக சென்று காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் உள்ள காவிரியாற்றில் விநாயகர் சிலைகள் நேற்று இரவு ஒவ்வொரு சிலையாக வரிசையாக கரைக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமையில், பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜமுரளி மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- நாகராஜா திடலுக்கு கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகள்
- மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று சிவசேனா, இந்து மகா சபா, இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 4000-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேலைகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவ சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று ஊர்வல மாக எடுத்துச் செல்லப்பட்டு கன்னியாகுமரி கடலில் கரைக்கப்படுகிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று காலையில் டெம்போக்களில் நாகர்கோவில் நாகராஜா கோவில் திடலுக்கு கொண்டு வந்தனர். நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரி கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைக் கப்படுகிறது. இதையடுத்து நாகர்கோவிலில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித் துள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின்போது அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே செல்ல வேண்டும். பட்டாசுகள் வெடிக்க கூடாது. பிறர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக் கூடாது என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் ஊர்வலத்தையடுத்து முக்கிய சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர். நாளை (23-ந்தேதி) இந்து மகாசபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட் டுள்ள விநாயகர் சிலைகளும், நாளை மறுநாள் (24-ந்தேதி) இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது.
- விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சிலைகள் கரைக்கும் இடங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
- கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதலமைச்சரின் சீரிய நல்லாட்சியில் சுற்றுச் சூழலை பாதுகாப்பதில் தொன்று தொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூ–ழல் பாதுகாப்பில் மக்களா–கிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர் நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடி–நீர் ஆதாரத்தை தருகி–றது.
நீர் நிலைகளை பாதுகாக் கும் வகையில் வருகிற விநா–யகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநா–யகர் சிலைகளை நீர் நிலைக–ளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங் க–ளில் மட்டும் கரைத்து, சுற்றுச்சூழலை பாது–காக்க ஒத்துழைப்பு வழங்கு–மாறு கேட்டுக்கொள் கிறேன்.
எனவே, பொதுமக்கள் களிமண்ணால் செய்யப்பட் டதும் மற்றும் பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்ற துமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட் களால் மட்டுமே செய்யப் பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங் கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப் படலாம். மேலும், சிலை களை பளபளப்பாக மாற்று வதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப் படலாம்.
ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர் மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படாது. நீர் நிலைகள் மாசு படுவதை தடுக்கும் பொருட்டு, வைக் கோல் போன்ற சுற்றுச்சூழ லுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல் கள்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணை வண்ணப்பூச்சு களை கண்டிப்பாக பயன்ப டுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப் படையாக கொண்ட வண் ணப்பூச்சுகளை பயன்ப–டுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுகுகந்த நீர் சார்ந்த, மட்கக்கூடிய, நச்சு கலப்பற்ற இயற்கை சாயங் களை மட்டுமே பயன்ப டுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட் கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட் டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலை களை மாவட்ட நிர்வாகத்தி னால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைக ளின்படி கரைக்க அனு மதிக்கப்படும். மதுரை மாவட்டத்தில் விநாயகர் சிலைகளை கீழ்வரும் நீர் நிலைகளில் கரைக்கலாம்.
மதுரை வைகை, கீழ் தோப்பு, ஒத்தக்கடை குளம், வாடிப்பட்டி, குமாரம் கண்மாய், மேலக்கால், அய்ய னார் கோவில் ஊரணி, குண்டாறு, மறவன்குளம் கண்மாய், மொட்டைக்குளம், சாப்டூர் கண்மாய், தேவன் குறிச்சி கண்மாய், மண்கட்டி தெப்பக்குளம், வைகை தைக்கால் பாலம், திருப்ப–ரங்குன்றம் செவந்திக்குளம் கண்மாய், அவனியாபுரம் அயன் பாப்பாகுடி கண் மாய், திருமங்கலம் சிவரக் கோட்டை கமண்டலநதி, மேலூர் கொட்டாம்பட்டி சிவன் கோவில் தெப்பம் ஆகிய இடங்களில் கரைக்க–லாம்.
விநாயகர் சதுர்த்தி விழா வினை சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு கொண்டா–டும்படி பொதுமக்கள் கேட்டுக்கொள்ள ப்படுகி–றார்கள். மேலும் விபரங்க–ளுக்கு மாவட்ட கலெக்டர், மதுரை காவல் துறை கண் காணிப்பாளர், மதுரை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை அணுகலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை
- ஊர்வலம் வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கியது.
கன்னியாகுமரி:
தக்கலை ஒன்றியம் பத்மநாபபுரம் நகரம் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி அன்று 153 ஊர்களில் விநாயகர் சிலைகள் பூஜையில் வைக்கப்பட்டது.
இந்த சிலைகள் குமாரபுரம், விலவூர், கோத நல்லூர், சடையமங்கலம், திருவிதாங்கோடு, இரணியல், முளகு மூடு, திக்கணங்கோடு,வாழ்வச்ச கோஷ்டம், மருதூர்குறிச்சி, கல்குறிச்சி, முத்தல குறிச்சி, கப்பியறை ஆகிய உள்ளாட்சி பகுதிகளில் உள்ள ஊர்களில் வைக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சங்கரன்காவு பகுதியில் 7 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை பூஜையில் வைக்கப்பட்டிருந்தது.
நேற்று ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் பூஜையில் வைக்கப்பட்டி ருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் அலங்கரிக்கப் பட்ட வாகனங்களில் ஏற்றி ஊர்வலமாக வைகுண்டபுரம் ஸ்ரீ ராமர் ஆலய வளாகம் கொண்டுவரப்பட்டது.
அங்கு தொடங்கிய ஊர்வலமானது மணலி, மேட்டுக்கடை , தக்கலை பழைய பஸ் நிலையம் , கல்குறிச்சி , இரணியல், திங்கள் சந்தை , லட்சுமிபுரம் வழி மண்டைக்காடு கடற்க ரையை வந்து அடைந்தது. பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், சுதேசன் உட்பட ஏராளமான போலீ சார் பங்கேற்று இருந்தனர். தொடர்ந்து அனைத்து விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டது.
- குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக நடந்தது.
- கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நாகர்கோவில்:
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி குமரி மாவட்டத்தில் 1200-க்கும் மேற்பட்ட இடங்களில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இதேபோல் வீடுகள், கோவில்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தது.
பிரதிஷ்டை செய்யப்ப ட்ட சிலைகளுக்கு காலை, மாலை நேரங்களில் பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டு வருகிறது.
முதல் நாள் சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டது. நேற்று 2-வது நாளாக இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்தவிளை கடலில் கரைக்கப்பட்டது.
3-வது நாளான இன்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் 10 இடங்களில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது. நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இன்று மதியம் விநாயகர் ஊர்வலம் புறப்படுகிறது. பீச் ரோடு வழியாக சங்குத்துறை கடலில் சிலைகள் கரைக்கப்படுகிறது.
இதையடுத்து நாகராஜா கோவில் திடல் மற்றும் சங்குத்துறை கடற்கரை பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு ள்ளது. சுசீந்திரத்தில் இருந்து மாலை 3 மணிக்கே விநாயகர் சிலை ஊர்வலம் புறப்படுகிறது. அங்கிருந்து புறப்படும் ஊர்வலம் வழுக்கம்பாறை, ஈத்தன்காடு, ஒற்றையடி, கொட்டாரம், மகாதா னபுரம், பழத்தோட்டம் வழியாக கன்னியாகுமரி திருவேணி சங்கமம் கடற்க ரையில் கரைக்கப்படுகிறது.
இதேபோல் வைகுண்ட புரம், திங்கள் நகர், பார்வதிபுரம், தோவாளை, மேல்புறம் மிடாலம், குலசேகரம், கருங்கல் உள்பட 10 இடங்களில் இருந்து இன்று விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் ஊர்வலத்திற்கு போலீசார் ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பட்டாசு வெடிக்கக்கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகள் கரைப்பு பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
- 300 விநாயகர் சிலைகள் கொள்ளிடம் ஆற்றில் கரைக்கப்பட்டது.
- பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர்
அரியலூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த 31 ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் 300 சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் தனியாரால் வைக்கப்பட்டு பக்தர்கள் பூஜை செய்து வழிப்பட்டனர். கடந்தாண்டு போலவே நிகழாண்டு புதிய இடங்களில் சிலைகள் வைக்க காவல்துறையினர் அனுமதியளிக்க வில்லை. இதையடுத்து விசர்ஜனம் எனும் சிலைகள் கரைப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதற்காக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தப்பட்டு, கொள்ளிடம் ஆறு மற்றும் நீர்நிலைகளில் விசர்ஜனம் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, ஆண்டிமடம், உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அணைக்கரையில் கரைக்கப்பட்டன. திருமானூர், கீழப்பழுவூர், திருமழபாடி,தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் கொள்ளிடம் ஆற்றிலும், அரியலூர் பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் மருதையாற்றிலும், செந்துறை, பொன்பரப்பி பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் அந்தந்த பகுதியிலுள்ள ஏரி,குளங்களில் விசர்ஜனம் செய்யப்பட்டது.மீதமுள்ள சிலைகள் நாளை விசர்ஜனம் செய்யப்படுகிறது.
விசர்ஜனம் நிகழ்ச்சியையொட்டி, சிலை ஊர்வலத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.சிலை ஊர்வலம் நடக்கும் பகுதிகள்,பதற்றமான பகுதிகள்,மசூதிகள் உள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது
- அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன.
கரூர்:
விநாயகர் சதுர்த்தியையொட்டி கரூர் மாவட்டத்தில் 277 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன. இவற்றில் முதல் நாளான கடந்த 31ம் தேதி 9, 2வது நாளான நேற்று முன்தினம் கரூரிலிருந்து 38, இதர பகுதிகளிலிருந்து 155 என மொத்தம் 193 என இரு நாட்களில் 202 சிலைகள் காவிரி, அமராவதி ஆறுகளில் விசர்ஜனம் செய்யப்பட்டன. 3வது நாளான நேற்று அரவக்குறிச்சி மற்றும் சின்னதாராபுரம் பகுதிகளில் தலா 18 என மொத்தம் 36, வேலாயுதம்பாளையம் பகுதியில் 27, குளித்தலையில் 8 என மொத்தம் 35 என ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முறையே முதல் இரு பகுதிகளில் அமராவதி ஆறு, அடுத்த இரு இடங்கள் காவிரி ஆற்றில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. ஊர்வலத்தை போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருதன.
- ஊர்வலத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்
- ஊர்வலத்தின் போது பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது.
நாகர்கோவில்:
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று மாவட்ட முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அரை அடி முதல் 10 அடி வரை உயரத்திற்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
வீடுகளிலும், கோவில்களி லும் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு பொரி கொழுக்கட்டை படைத்தும் வழிபாடு செய்தனர். இன்று காலையில் விநாயகர் சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது. காலை மாலை இரு வேளை களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை முதல் 3 நாட்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நி லைகளில் கரைக்கப்படு கிறது. சிலைகளை கரைப்ப தற்கு மாவட்ட நிர்வா கம் 10 இடங்களில் அனுமதி வழங்கி யுள்ளது. கன்னியாகுமரி சொத்தவிளை, சங்குத்துறை, பள்ளிகொண்டான் தடுப் பணை, குழித்துறை தாமிர பரணி ஆறு, திற்பரப்பு, மணவாளக்குறிச்சி, சின்ன விளை, மண்டைக் காடு, வெட்டுமணி, தேங்காய் பட்டிணம் மற்றும் மிடாலம் ஆகிய பகுதிகளில் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிலைகள் கரைக்கப்பட உள்ள பகுதிகளில் முன்னேற்பாடு பணிகளை பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அந்த பகுதிகளில் மின்விளக்கு வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. சிவசேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாளை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படுகிறது.
நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து புறப்படும் விநாயகர் சிலை ஊர்வலம் கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு, கொட்டாரம் வழியாக கன்னியாகுமரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் கடற்கரையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய் யப்பட்டு அதன் பிறகு கடலில் கரைக்கப்படும். இதே போல் மேற்புறத் திலிருந்து கொண்ட செல்லப் படும் விநாயகர் சிலைகள் குழித்துறை ஆற்றிலும் கரைக்கப்படுகிறது.
நாளை மறுநாள் 3-ந்தேதி இந்து மகா சபா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சொத்த விளை கடலில் கரைக்கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து சிலைகள் ஊர்வல மாக எடுத்துச் செல்லப் பட்டு கரைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
4-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நாகராஜா திடலில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சங்குத்துறை கடலில் கரைக் கப்படுகிறது. இதே போல் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதி களில் வைக்கப் பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஆங் காங்கே இருந்து ஊர்வல மாக எடுத்து செல்லப்பட்டு கரைக்க ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகிறது.
சிலைகள் ஊர்வலம் நடைபெறும் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடை களை மூடுவதற்கும் நடவ டிக்கையை எடுக்கப்பட்டுள் ளது. விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். விநாயகர் சிலைகளை அதற்காக ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும்.
ஊர்வலத்தின் போது கூம்பு வடிவ ஒலிபெருக்கி களை பயன்படுத்தக்கூடாது. பிற மதத்தை புண்படுத்தும் வகையில் பேசக்கூடாது. விநாயகர் சிலைகளை மினி டெம்போக்கள் மற்றும் டிராக்டர்கள் மட்டுமே கொண்டு செல்ல வேண்டும். விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள் துணிகள் அழகு சாதன பொருட்களை கரைப்பதற்கு முன்னதாக பிரிக்கப்பட வேண்டும்.
விநாயகர் சிலை ஊர்வ லத்தின்போது பட்டாசு கள் வெடிக்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. மேலும் சிலைகளை குறிப்பிட்ட நேரத்திற்குள் கிடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள்
- மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது
நாகர்கோவில் :
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும்.
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.இதையடுத்து இந்து முன்னணி, இந்து மகா சபா, பாரதிய ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி வருகிறார்கள். வீடுகளிலும், பொது இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் மட்டும் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள் 30-ந் தேதி சில இந்து அமைப்புகள் சிலைகளை பிரதிஷ்டை செய்ய உள்ளனர். மேலும் 31-ந் தேதி காலையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளுக்கு காலை, மாலை இரு வேளைகளில் பூஜைகள் செய்யவும் இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்து உள்ளனர். பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகள் அடுத்த மாதம் 2,3,4-ந்தேதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. சிலைகளை கரைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கன்னியா குமரி, சொத்தவிளை, சின்னவிளை சங்குதுறை, பள்ளிக்கோணம், வெட்டுமடை, மிடாலம், தேங்காப்பட்ட ணம், கடற்கரை பகுதிகளிலும் திற்பரப்பு அருவி, குழித்துறை தாமிரபரணி ஆறு ஆகிய 10 இடங்களில் அனுமதி வழங்கி உள்ளது.
விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு ஊர்வலங்கள் செல்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலைகளை ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே பிரதிஷ்டை செய்ய வேண்டும். புதிதாக இடங்களில் சிலைகளை பிரதிஷ்டை செய்யக்கூடாது. சிலைகளை கரைக்க ஊர்வலமாக எடுத்து செல்லும்போது அதற்கென ஒதுக்கப்பட்ட வழியாக மட்டுமே செல்ல வேண்டும்.அடுத்தவர் மனதை புண்படுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்பக்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர். ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையில் நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணியில் 2000 போலீசாரை ஈடுபடுத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்