என் மலர்
நீங்கள் தேடியது "அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே நில அளவை அலுவர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ஏழுமலை, திருவண் ணாமலை கோட்ட கிளை தலை வர் தரணிவாசன், ஆரணி கோட்டை கிளை தலைவர் அசோக்குமார், செய்யாறு கோட்ட கிளை தலைவர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத்தலைவர் வாசுதேவன் வரவேற்றார். மாநில தலைவர் ராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
இதில் நில அளவை கள அலுவ லர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவ டிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குன ரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்தும், நவீன நில அளவை உடனடியாக வழங்கிட கோரியும், ஒப்பந்த சர்வேயருக்கு அரசு வேலை வழங்கிட கோரியும், காலி பணியிடங்களை நிரப்பக் கோரி யும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சையத்ஜலால், தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் அண்ணா துரை, நெடுஞ்சாலை பணியா ளர் சங்க மாநில செயலாளர் மகாதேவன், அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சந்துரு உள்பட நில அளவை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் கன்னி வேல் நன்றி கூறினார்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டைஅணிந்து ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது.
ஒருங் கிணைப்பாளர் கே.எம்.நேரு தலைமை வகித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளையராஜா வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை ஒருங்கி ணைப்பாளர் ராஜா தொடங்கி வைத்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட் டத்தை அமல்படுத்த வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் நடைமுறைக்கு சாத்தியமற்ற இலக்குகளை விதித்தும், முறை யான திட்டமிடல் இன்றி திட்டப் பணிகளை நடை முறைப்படுத்தி ஊரக வளர்ச்சித்துறை திட்டங்களை பாழ்படுத்தும் அதிகாரிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங் களை எழுப்பினர்.
இதல் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராமன், வசந்தி, மாலதி உள்படபலர் கலந்து கொண்டனர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபு கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் பாரி கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் முறையீடுகளின் போது நிர்வாகம் ஒப்புக்கொண்ட ஊராட்சி செயலாளர் பணி விதிகள் மற்றும் சிறப்பு நிலை தேர்வு நிலை அரசாணை வழங்க வேண்டும்.
மேலும் கணினி உதவியாளர் பணி வரன்முறை மற்றும் ஊழிய மாற்ற அரசாணை வெளியிட வேண்டும். 2023 பொங்கல் பண்டிகைக்கு முன்பு வழங்குவதாக ஒப்புக்கொண்ட உதவி பொறியாளர், உதவி இயக்குனர், உதவி செயற் பொறியாளர் பதவி உயர்வு ஆணைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஜல் ஜீவன் திட்டத்தில் முறைகேடு புகாரை கண்டித்து நடந்தது
- வீடுகளுக்கு சென்று குடிநீர் இணைப்பு குறித்து அதிகாரி ஆய்வு
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, ஊராட்சி ஒன்றியம் இந்திரவனம், கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தில் 52 வீடுகளுக்கு ரூ.3 லட்சத்து65 ஆயிரம் மதிப்பீட்டில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணியில் முறைகேடு நடந்திருப்பதாக அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் முகநூலில் பதிவில் வீடியோவாக பதிவிட்டிருந்தார் இதை அடுத்து அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர்.
பின்னர் நேற்று சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாமலை, தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சங்கர், முன்னிலை வகித்தார்
இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் பாரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சம்பத், சேத்துப்பட்டு தமிழ்நாடு அனைத்து அரசு ஊழியர் சங்க வட்ட தலைவர் பாபு, மாநில பொறியாளர் பிரிவு தலைவர் மதுசூதனன், ஆகியோர் கலந்து கொண்டனர். இந்திரவனம், கிராமத்தில்திட்டப்பணி ஆரம்பித்த 3 நாட்கள் தான் ஆகிறது.
மேலும் திட்டத்திற்கான தொகை எதுவும் எடுக்கப்படவில்லை திட்டப்பணி நடைபெற்று தான் வருகிறது.
இதை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் திட்டப் பணி முடிந்து விட்டதாகவும் இதற்கான தொகை எடுத்து விட்டதாகவும் கூறி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளார்.
ஆகவே அவர் மீது புகார் அளித்துள்ளோம் போலீஸ் நிலையத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
இதில் வேளாண்மை துறை சத்துணவுத்துறை வருவாய்த்துறை கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் உட்பட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊழியர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
முடிவில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணை செயலாளர் முத்துவேலன், நன்றி கூறினார்.
முறைகேடு புகார் குறித்து நேற்று மாநில தலைமை பொறியாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் இந்திரவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் மிஷன் குடிநீர் திட்டம் குறித்து குடிநீர் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ள வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் பெயர் விபரம் மற்றும் திட்டம் குறித்து ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது உதவி இயக்குனர் ஊராட்சிகள் சுரேஷ்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் வேணுகோபால் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது
- 40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு, போளூர், சாலையில் உள்ள தாலுகா அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மோகன்ராஜ், தலைமை தாங்கினார்.மாவட்ட போராட்ட குழு தலைவர் ரகுராமன், வட்ட பொருளாளர் ராஜசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்ட செயலாளர் ஜான்சன், வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் போராட்டத்தை வரைமுறைப்படுத்த வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் அனைத்து பணி சார்ந்த பதிவேட்டில் விடுபட்டுள்ள அனைத்து பணிகளையும் பதிவேட்டில் ஏற்ற வேண்டும், மேலும் 2 மாதங்களுக்கு முன்பு ஜமாபந்தி நடைபெற்றது.
இதற்கான கிராம நிர்வாக அலுவலருக்கான படியை உடனடியாக வழங்க வேண்டும், உள்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது, சேத்துப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் 40மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட இணை செயலாளர் சதீஷ், நன்றி கூறினார்.