search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "6 பேர் மீது வழக்கு"

    • விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி யில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என ஈரோடு டவுன், கோபி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது சென்னி மலை, தாளவாடி,பவானி சாகர், கவுந்தப்பாடி ஆகிய பகுதி களில் அனுமதியின்றி மது விற்று கொண்டிருந்த ஈரோடு அன்னை சத்யா நகரை சேர்ந்த செல்வம் மகள் சிவகாமி (வயது 42), சூரம்பட்டி காமராஜ் தெரு வை சேர்ந்த பழனிசாமி மகன் தினேஷ் குமார் (37),

    சென்னிமலை ராசம்பாளையத்தை சேர்ந்த ராம சாமி மகன் பூபதி (41), தாள வாடியை சேர்ந்த மாதேஷ் (48), அண்ணா நகரை சேர்ந்த நாகராஜ் மகன் செல்வம் (60),

    கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்த சின்னியப்பன் என்ற தங்கராஜ் மகன் கேசவமூர்த்தி (32) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 39 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • கருங்க ல்பாளையம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.
    • போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    ஈரோடு:

    கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் அபூபக்கர் தலைமையி லான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது கருங்க ல்பாளையம் அழகரசன் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டி ருந்தது தெரிய வந்தது.

    அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் அவர்கள் மணிகண்டன் (31), கார்த்திக் (28), பிரகாஷ் (33), மணிகண்டன் (35), பிரகாஷ் (35), ராஜா (32) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தனர்.

    இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அவர்களிட மிருந்து சீட்டு கட்டுகள், பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

    • அழகேசன் (வயது 50). நெசவு தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த ஐயம்மாள் (75) குடும்பத்திற்கும் நிலத்தகறாறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
    • சம்பவத்தன்று இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள ஏகாபுரம், பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 50). நெசவு தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைசேர்ந்த ஐயம்மாள் (75) குடும்பத்திற்கும் நிலத்தகறாறு சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி இரு தரப்பும் கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல், சக்தி, குப்புசாமி, அழகேசன், முருகன், சங்கர் ஆகியோர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் பெற்றுள்ளனர்.
    • வசந்த ராஜ் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    விழுப்புரம்: 

    மரக்காணம் அருகே நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் குடும்பத்திற்கும் நிலப்பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் முத்துராமன் , அவரது மருமகள் மகாலட்சுமி ஆகியோர் அந்த பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சதீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சங்கர் குமார் ஆனந்த் அய்யனாரப்பன் புருஷோத் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் இரும்பு பைப் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்று முத்துராமன் மற்றும் அவரது மருமகளை தாக்கியுள்ளனர்.

    இதில் இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இவர்களை அழைத்து சென்று சிறுவாடியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அங்கிருந்து ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் பெற்றுள்ளனர். இந்த சம்பவ குறித்து முத்துராமனின் உறவினர் வசந்த ராஜ் மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது மரக்காணம் போலீசார் சதீஷ் உட்பட 6பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 

    • பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் ஆசிரியரை கும்பல் தாக்கியது.
    • 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இ. பி காலனியைச் சேர்ந்த செந்தில் மனைவி வஞ்சி க்கொடி (வயது37). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தனது குழந்தைகளை நில க்கோட்டை அருகே உள்ள துரைச்சாமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஆட்டோவில் தினந்தோறும் பள்ளிக்கும் அனுப்பி வந்துள்ளார்.

    இதில் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டு இவர்களுக்குள் கொடுக்கல், வாங்கல் இருந்தது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி வஞ்சிக்கொடி யிடம் மணிகண்டன் கடன் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார்.

    பணத்தை கேட்டு வஞ்சிக்கொடி துரைச்சாமி புரத்தில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது மணிகண்டன், அவரது தம்பி செந்தில் குமார், உறவினர்கள் பூமா, வெள்ளைத்தாய், பாண்டி, ராஜேஸ்வரி ஆகியோர் தாக்கி உள்ளனர்.

    இது குறித்து நில க்கோட்டை நடுவர் நீதிம ன்றத்தில் வஞ்சிக்கொடி புகார் அளித்தார். அதன்பேரில் நிலக்கோட்டை நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் நல்ல கண்ணன் புகார் மீது நடவடிக்கை எடுக்க நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்க ட்ராஜிக்கு உத்தரவிட்டார்.

    அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் பாலமுருகன், ஆசிரியரை தாக்கிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×