search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலாம்நபி ஆசாத்"

    • பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
    • வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும்.

    கொச்சி:

    காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்கி உள்ள குலாம்நபி ஆசாத் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தொழில் அதிபர் அதானியுடன் தொடர்பு வைத்திருப்பதாக ராகுல் காந்தி சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

    ஆனால் அவரும் அவரது மொத்த குடும்பமும் நாட்டின் விரும்பத்தகாத ஒரு தொழில் அதிபருடன் தொடர்பில் உள்ளனர். இதை என்னால் ஆதாரபூர்வமாக சொல்ல முடியும்.

    ராகுல் காந்தி எங்கெங்கு போகிறார், யாரை சந்திக்கிறார் என்று என்னால் முழுமையாக சொல்ல முடியும். வெளிநாட்டுக்கு போய் அவர் யாரை சந்திக்கிறார் என்று என்னால் ஆதாரத்துடன் தகவல் தர முடியும்.

    இந்தியாவில் காங்கிரஸ் கட்சி இல்லை. அந்த கட்சியில் சில தனிநபர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.அவர்களுக்கும் செல்வாக்கு இல்லை. பாத யாத்திரை நடந்து விட்டதால் ராகுல் காந்திக்கு செல்வாக்கு அதிகரித்து விட்டதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி எந்த செல்வாக்கும் ராகுலுக்கு அதிகரித்து விட்டதாக எனக்கு தெரியவில்லை.

    சூரத் கோர்ட்டுக்கு அவர் சென்ற போது ஒருவர் கூட அவரை வரவேற்க வில்லை. இதிலிருந்தே அவரது எம்.பி. பதவி பறிப்பை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

    இவ்வாறு குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.

    • ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கெள்வதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார்.
    • எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும்.

    காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து விலகினார். 73 வயதான அவர் காங்கிரஸ் கட்சி மூலம் ஜம்மு காஷ்மீர் முதல்-மந்திரி, மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

    ராகுல் காந்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக குலாம்நபி ஆசாத் காங்கிரசில் இருந்து வெளியேறினார். அவர் ராகுலை கடுமையாக சாடி இருந்தார். குலாம்நபி ஆசாத்துக்கு ஆதராக காஷ்மீரில் பல காங்கிரஸ் தலைவர்கள் விலகினார்கள்.

    காங்கிரசில் இருந்து விலகிய அவர் புதிய கட்சியை தொடங்கி பா.ஜனதாவுடன் சேர்ந்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. புதிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.

    இந்நிலையில், ஜம்முவில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக் கெள்வதற்காக குலாம்நபி ஆசாத் டெல்லியில் இருந்து இன்று காலை ஜம்மு சென்றார். அவருக்கு அங்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற குலாம்நபி ஆசாத் மக்களிடையே பேசியதாவது:-

    காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் இப்போது பேருந்துகளில் சிறைக்குச் செல்கிறார்கள். டிஜிபி, கமிஷனர்களை தொடர்புக் கொண்டு பெயரை எழுதிக் கொடுத்துவிட்டு ஒரு மணி நேரத்திற்குள் வெளியேறிவிடுவார்கள். அதனால்தான் காங்கிரஸால் வளர முடியவில்லை.

    காங்கிரஸ் நம் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. கணினியால் அல்ல. டுவிட்டரால் அல்ல. ஆனால் காங்கிரஸ் அணுகல் கணினிகள் மற்றும் ட்வீட்களில் மட்டுமே உள்ளது. அதனால்தான் காங்கிரஸை களத்தில் எங்கும் காண முடியவில்லை.

    எனது கட்சி முழு மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் பூர்வீக குடியேற்ற உரிமையை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஜம்மு காஷ்மீர் மக்கள் கட்சியின் பெயரையும் கொடியையும் தீர்மானிப்பார்கள். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எனது கட்சிக்கு இந்துஸ்தானி பெயரைச் சூட்டுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் குலாம் நபி ஆசாத் விலகினார்.
    • அவருக்கு ஆதரவு தெரிவித்து ஜம்மு காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் காந்தி சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார். அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர்.

    எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அவருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியில் இருந்து பல்வேறு தலைவர்கள் விலகி வருகின்றனர்.

    இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு காஷ்மீரில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் 20 பேர் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.

    • ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று மேலும் 3 தலைவர்கள் விலகினர்.
    • முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

    காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், அக்கட்சியில் இருந்து விலகினார். கட்சியின் கட்டமைப்பை ராகுல் சீர்குலைத்து விட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    அவரை தொடர்ந்து அவரது சொந்த மாநிலமான ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 8 காங்கிரஸ் தலைவர்கள் அக்கட்சியைவிட்டு விலகி விட்டனர்.

    எப்போது வேண்டுமானாலும் ஜம்மு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், விரைவில் அங்கு புதிய கட்சி தொடங்க உள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.

    தொடர்ந்து, குலாம் நபி ஆசாத்துக்கு ஆதரவாக கட்சியில் இருந்து நேற்று மேலும் 3 தலைவர்கள் விலகினர். இந்நிலையில், குலாம்நபி ஆசாத்துக்கு ஆதரவாக ஜம்மு- காஷ்மீரில் காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று மேலும் 64 பேர் ராஜினாமா செய்துள்ளனர். இதில், முன்னாள் துணை முதல்வர் தாரா சந்த் உள்பட ஜம்மு- காஷ்மீர் மாநில நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம்நபி ஆசாத் விலகியுள்ளார்.
    • காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார்.

    காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த குலாம்நபி ஆசாத் அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர், 2014-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு அரசியலில் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையே காரணம். காங்கிரசில் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களால் எடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    காங்கிரசில் இருந்த கலந்தாலோசனை வழிமுறையை ராகுல் காந்தி முற்றிலும் அழித்துவிட்டார். காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

    ×