search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ராகுல்காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது- கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் காட்டம்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராகுல்காந்தியின் நடவடிக்கை முதிர்ச்சியின்மையை காட்டுகிறது- கட்சியில் இருந்து விலகிய குலாம்நபி ஆசாத் காட்டம்

    • அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம்நபி ஆசாத் விலகியுள்ளார்.
    • காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார்.

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார்.

    காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இவர் ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர், மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை வகித்தவர்.

    மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த குலாம்நபி ஆசாத் அண்மைக்காலமாக காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர், 2014-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு அரசியலில் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையே காரணம். காங்கிரசில் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களால் எடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    காங்கிரசில் இருந்த கலந்தாலோசனை வழிமுறையை ராகுல் காந்தி முற்றிலும் அழித்துவிட்டார். காங்கிரஸில் பெயரளவில் மட்டுமே சோனியா காந்தி தலைவராக இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×