என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எச்ஐவி"
- பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் ஜாமினில் வெளியே உள்ளார்.
- சவுக்கு சங்கருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது.
பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தற்போது ஜாமினில் வெளியே உள்ள சவுக்கு சங்கருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் அக்டோபர் 12ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த சவுக்கு சங்கர் மருத்துவமனையில் இருந்து கடந்த அக்டோபர் 15ம் தேதி நலம் பெற்று வீடு திரும்பினார் .
இதனிடையே சவுக்கு சங்கருக்கு எச்.ஐ.வி. தொற்று உள்ளது என்று ஒரு மருத்துவ பரிசோதனை அறிக்கை சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இந்நிலையில் தனக்கு ஹெச்ஐவி தொற்று பாதித்து இருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சவுக்கு சங்கர் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக சவுக்கு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, 12.10.2024 அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தனியார் மருத்துவமனையில் இருந்து திருடப்பட்டது. திருடப்பட்ட மருத்துவ அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டு, நான் எச்.ஐ.வி. வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.
இந்த மருத்துவ அறிக்கை போலியானது. நான் எச்.ஐ.வி. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டதாக பரவிய செய்தி முற்றிலும் தவறானது மற்றும் ஆதாரமற்றது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளேன். தவறான தகவல் பரப்புவோர் மீது சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகாக நீதிமன்றத்தை நாடியுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
Announcement. pic.twitter.com/Gs9O7Mhst2
— Savukku Shankar (@SavukkuOfficial) October 29, 2024
- திரிபுராவில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
- எச்ஐவி பாதிக்கப்பட்ட 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.
எச்.ஐ.வி. என்று அழைக்கப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் நோய் மிகவும் கொடிய மற்றும் வேகமாக பரவும் வைரஸ் ஆகும். உலகம் முழுவதும் உள்ள மிக கொடிய நோய்களில் எச்.ஐ.வி.யும் ஒன்று. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் திரிபுரா மாநிலத்தில் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 828 மாணவர்கள் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரிபுராவில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து, திரிபுரா எயிட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் அம்மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அதிரடி சோதனையை மேற்கொண்டது.
சோதனையை தொடர்ந்து இந்த கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களிடையே பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனையில் 828 மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுதொடர்பாக திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,
திரிபுரா மாநிலத்தில் மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் எச்.ஐ.வி பாசிட்டிவ் உள்ள 828 மாணவர்களை நாங்கள் இதுவரை மீட்டுள்ளோம். அவர்களில் 572 மாணவர்கள் உயிருடன் உள்ளனர், 47 பேர் உயிரிழந்தனர்.
பல மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் பிரபல பல்கலைக்கழகங்களுக்கு இங்கிருந்து படிக்க சென்றிருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்ப அறிவுறுத்தி இருக்கிறோம்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு போதை பழக்கம் இருந்திருக்கிறது. அதாவது, ஒரே ஊசியை பலர் பயன்படுத்தியுள்ளனர். இதனால்தான் தொற்று பரவியிருக்கிறது. எனவே அனைவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளோம்.
பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இருவரும் அரசு பணிகளில் இருக்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் தயங்குவதில்லை. தங்கள் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு இரையாகிவிட்டனர் என்பதை பெற்றோர் உணர தாமதமாகி விடுகிறது, என்று அவர் கூறினார்.
- அரசு மருத்துவமனையில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
- 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
லக்னோ:
உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதிராய் அரசு மருத்துவமனையில், தலாசீமியா எனும் மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமியர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட 14 சிறார்களுக்கு தானம் பெறப்பட்ட ரத்தம் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ரத்தம் ஏற்றப்பட்ட 14 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி மற்றும் ஹெபடைடிஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதில் 2 பேருக்கு எச்.ஐ.வி, 7 பேருக்கு ஹெபடைடிஸ் பி, 5 பேருக்கு ஹெபடைடிஸ் சி இருப்பது கண்டறியப்பட்டது.
விசாரணையில் சிறார்கள் அனைவரும் கான்பூர், பரூகாபாத், இட்டாவா மற்றும் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும்,
ரத்தத்தைப் பரிசோதிக்காமல் சிறார்களுக்கு செலுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- 81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
- பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும்.
உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது.
அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 80க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி மையத்தின் அறிக்கையின்படி, "லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு குழந்தைப் பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
81 எச்ஐவி-பாசிட்டிவ் பெண்களில், குறைந்தது 35 பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர்.
ஆன்டி- ரெட்ரோவைரல் தெரபி (ஏஆர்டி) மையத்தின் அறிக்கையின்படி, 2022-23ம் ஆண்டுக்கு இடையில், மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய பாதிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
பிறந்த குழந்தைகளின் உடல்நிலை குறித்து கேட்டதற்கு, ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரியிடம், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை செய்யப்படும் என்றார்.
- இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
- எனக்கு 14-15 வயது இருக்கும் போது மணாலிக்குச் சென்றேன்.
மும்பை:
ஐபிஎல் தொடர் வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை-குஜராத் அணிகள் மோதுகின்றன. இதற்காக இந்திய கிரிக்கெட் வீரர்கள் தற்போது தீவிரமாக தயாரகி வருகின்றனர். இந்த வருட ஐபிஎல் தொடருக்கு பஞ்சாப் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட உள்ளார்.
இந்நிலையில் 14-15 வயதில் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டதாக ஷிகர் தவான் கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
எனக்கு 14-15 வயது இருக்கும் போது, மணாலிக்குச் சென்று, என் குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் முதுகில் பச்சை குத்தியிருந்தேன். நான் அதை சிறிது காலம் மறைத்து வைத்திருந்தேன். சுமார் 3-4 மாதங்களுக்கு பின்னர் என் தந்தைக்கு நான் பச்சை குத்தியது தெரிந்துவிட்டது. அவர் என்னை அடித்தார்.
டாட்டூவைக் குத்திய பிறகு நான் கொஞ்சம் பயந்தேன். எனக்கு டாட்டு குத்திய ஊசியை வைத்து எத்தனை பேருக்கு குத்தப்பட்டது என்ற தகவல் எனக்கு தெரியவில்லை. எனவே நான் எச்ஐவி பரிசோதனை மேற்கொண்டேன். அது இன்று வரை எதிர்மறையாக (நெகட்டிவ்) உள்ளது.
நான் குத்திய முதல் டாட்டு ஸ்கார்பியோ (தேள்) என்னுடைய முதுகில் குத்தினேன். ஏனென்றால் அந்த நேரத்தில், அது என் எண்ணமாக இருந்தது. பிறகு நான் அதை ஒரு டிசைன் செய்தேன். என் கையிலும் சிவபெருமான் பச்சை குத்தினேன். அர்ஜூனன் பச்சையும் குத்தி உள்ளேன். ஏனென்றால் அவர் வில் எய்வதில் மிகச்சிறந்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது.
- அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இதில், இத்தாலியை சேர்ந்த 36 வயது நபர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றார்.
5 நாள் பயணத்தை முடித்து கொண்டு அவர் இத்தாலி திரும்பினார். வீட்டுக்கு சென்ற அவருக்கு காய்ச்சலும், உடல் சோர்வும் ஏற்பட்டது. இதனால் அவர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவரை டாக்டர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். கொரோனா சிகிச்சையில் இருந்தபோது அந்த நபருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டு கொப்புளங்கள் உருவானது. ஜூலை மாத தொடக்கத்தில் இந்த கொப்புளங்கள் உடைந்து அவருக்கு வேதனையை அளித்தது.
எனவே டாக்டர்கள் அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். அதற்கான சோதனையும் அவருக்கு நடத்தப்பட்டது. இதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த நபருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.
கொரோனா, குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அந்த வாலிபர் ஏற்கனவே எச்.ஐ.வி. நோயில் இருந்து மீண்டவர் என்ற தகவல் டாக்டர்களுக்கு தெரியவந்தது.
அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பதால் அவருக்கு மீண்டும் ஒரு முறை எச்.ஐ.வி. பரிசோதனையையும் மேற்கொள்ள டாக்டர்கள் முடிவு செய்தனர். அதன்படி எச்.ஐ.வி. பரிசோதனை செய்தபோது அதுவும் அந்த நபருக்கு இருப்பது தெரியவந்தது.
ஒரே நேரத்தில் கொரோனா, குரங்கு அம்மை மற்றும் எச்.ஐ.வி. பாதிப்புகள் ஒரே நபருக்கு ஏற்பட்டிருப்பது அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்று 3 பெரு வியாதிகள் ஒரே நேரத்தில் ஒரு நபருக்கு ஏற்பட்டிருப்பது உலகிலேயே இதுதான் முதல் முறை என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். 3 நோய்களால் பாதிக்கப்பட்ட நபருக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
அவர் வெளிநாடுகளுக்கு சென்றபோது அங்கு ஓரின சேர்க்கை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக அவர்கள் தொடர்ந்து அந்த நபரை கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் கொரோனாவில் இருந்தும், குரங்கு அம்மை பாதிப்பில் இருந்தும் மீண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்