என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இபிஎஸ்"
- மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.
- இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதுவரை பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 3 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன்.
மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக பதக்கம் வென்றுள்ள தாங்கள், மேலும் பல சிகரங்களைத் தொட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக தகவல் வெளியாகியது.
- எந்தவித நிபந்தனையும் இன்றி, 'சமக்ர சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
சென்னை:
'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது.
இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியா கல்வியில் சிறந்த நாடு. உலகிலேயே மனித வளம் அதிகமுள்ள நாடு. இந்த நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும்.
'ஒரே வார்த்தையில் அழைத்தோம் - மத்திய ராணுவ அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்' என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தன்னுடைய குடும்பப் பெருமையை ஊருக்குப் பறைசாற்ற மத்திய அமைச்சர்களை வருந்தி அழைத்து, பா.ஜ.க-வுடன் சமரசம் செய்துகொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.
'கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை'
என்ற குறளின் பொருளை முழுமையாக உள்வாங்கி, மாணவச் செல்வங்களின் வாழ்க்கையோடு விளையாடுவதை இனியாவது நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களின் நிலையினைக் கருத்திற்கொண்டு, மத்திய அரசு உடனடியாக எந்தவிதமான நிபந்தனையுமின்றி 'சமக்ரா சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ் முதல் தவணை நிதியை விடுவிக்க வேண்டுமென்றும், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2019-2024 காலக்கட்டத்தில் தமிழகத்தின் உரிமைகளுக்குக் குரல் கொடுக்காமல் அமைதியாக இருந்ததுபோய் இல்லாமல், உரத்த குரலில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிதியை போராடிப் பெற வேண்டும் என்று விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
- தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி வீதம் ஜூலை 31 வரை தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்ற காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை ஏற்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
காவிரி ஆறு பாயும் மாநிலங்களின் எண்ணங்களை கருத்திற்கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை கர்நாடக அரசு ஏற்காமல் முரண்டு பிடிப்பது ஏற்கத்தக்கதல்ல.
விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் விடியா திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் விடியா திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது.
டெல்டா விவசாயிகள் நலனைக் கருத்திற்கொண்டு உடனடியாக காவிரி விவகாரத்தில் தீர்க்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு உரித்தான நீரைப் பெறுமாறு விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.
- சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.
- இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது;-
உண்மைக்கு புறம்பான தகவல்களை இபிஎஸ் பரப்பி வருகிறார். உண்மையை விளக்க வேண்டியது திமுகவின் கடமை. இபிஎஸ் தான் உத்தம புத்திரர் போல பேசுகிறார்.
இபிஎஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது.
அது மீது எந்த ஒரு விசாரணையும் நடைபெறாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
சிபிஐ விசாரணை தேவையில்லை. திமுக ஒருபோதும் கேட்டதும் இல்லை.
சிபிஐ விசாரணை இருந்தால் வழக்கு தாமதமாகும் என்பதால்தான் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை செய்யப்பட்டு வருகிறதுற.
இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு விவகாரத்திலும், நாங்கள் சிபிஐ விசாரணை கோரவில்லை.
சிபிஐ என்றால் என்னவென்று எங்களுக்கும் தெரியும். டெண்டர் முறைகேடு விவகாரத்தில் நிரபராதி என விடுவித்தது போல இபிஎஸ் பேசி வருகிறார்.
இபிஎஸ்க்கு வரலாறு தெரிந்திருக்க நியாயமில்லை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
- இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.
பழனி:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.
ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.
பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.
இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.
இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். ’டோன்ட் கேர்’ என விட்டுவிடுங்கள்.
- மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும்
"3% - 4% வாக்கு வங்கி வச்சிருக்க பாஜகவில் நான் சேருவதாகச் சொல்கிறார்கள். இதுக்குபோய் நான் பதில் சொல்லனுமா? Don't Care-னு விட்டுட்டு போயிடணும்" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அதிமுகவின் முன்னாள் மாவட்ட செயலாளர் சிங்கை கோவிந்தராஜனின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவின் அமைப்புச் செயலாளரும், சட்டப்பேரவை கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, "பாஜக ஐடி விங் வெளியிடும் தகவல்களை எல்லாம் பார்க்க நேரமில்லை. தற்போது மக்களவைத் தேர்தல் வந்து விட்டது. உலக அளவில் அதிக தொண்டர்களைக் கொண்ட 7வது கட்சியாக அதிமுக உள்ளது. இந்த கட்சி நமது தாய்வீடு போல. சாதாரணமாக இருந்த நம்மை எம்.எல்.ஏ.,க்களாக, அமைச்சர்களாக உயர்த்தி அழகு பார்த்த கட்சி அதிமுக. எல்லோரும் தாய் வீட்டிற்குத் தான் வருவார்கள். தாய் கழகத்தை விட்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பாஜக ஐடி விங் பரப்பும் தகவல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டு இருக்காதீர்கள். 'டோன்ட் கேர்' என விட்டுவிடுங்கள். கோவைக்கு அதிமுக ஆட்சிக்காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அதை சொல்லியே வாக்காளர்களிடம் மக்களவைத் தேர்தலில் வாக்கு கேட்போம். மீண்டும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருக்க வேண்டும்
சிறப்பான முறையில் 4 ஆண்டுகள் முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பணியாற்றினார். எதிர்கட்சி தலைவராக உள்ள எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். 40 தொகுதிகளிலும் வெல்வோம். கூட்டணி அமைத்து அதிமுக வெற்றி பெறுவோம்" என அவர் தெரிவித்தார்.
- இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள்
- அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன்
கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், நான் அ.தி.மு.க.வில் ராஜாவாக உள்ளேன். பா.ஜ.க.வுக்கு சென்று கூஜா தூக்க விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளதாக தகவல் பரவியது.
அ.தி.மு.க.வில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பா.ஜ.க.வில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம். இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று பேசியுள்ளார்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பிய போது, "அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்கு சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று பதில் அளித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று சொன்னது பேசு பொருளாகியுள்ளது.
- இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை.
முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரின் நினைவிடத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தனது காரில் ஏறி, அங்கிருந்து கிளம்ப முற்பட்டார்.
அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷமிட்டனர். மேலும் அவரது காரை நோக்கி கற்கள் மற்றும் காலணிகளை வீசினர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பிறகு கற்கள் மற்றும் காலணிகளை வீசியர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வத்திடம் எடப்பாடி பழனிசாமிக்கு அரங்கேறிய தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம், "நான் எனது சமூக வலைதள பதிவுகளின் மூலம் அறிவுறுத்தி இருந்தேன். பசும்பொன் எனும் புண்ணிய பூமிக்கு வருபவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு தொந்தரவையோ, துயரத்தையோ கொடுக்கக்கூடாது என்பது என் வேண்டுகோளாக உள்ளது என குறிப்பிட்டு இருந்தேன். இது போன்ற சம்பவம் நடந்திருக்கக்கூடாது," என்று தெரிவித்தார்.
- பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கு.
- புகார்தாரர் அளித்த தகவலின் பேரில் வழக்கின் சாட்சியாக ஓ.பி.எஸ். சேர்க்கப்பட்டார்.
கடந்த 2021 ஆண்டு எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட்டார். அப்போது தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை மறைத்து இருந்ததாக கூறி, தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி புகார் அளித்து இருந்தார்.
எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் கையொப்பம் இட்டிருந்தார். இதன் காரணமாக வழக்கில் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.
தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான தகவல் அளித்ததாக எடப்பாடி பழனிச்சாமி மீது தொடரப்பட்ட வழக்கில் ஓ. பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டு இருக்கும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசு பொளுளாகி இருக்கிறது.
- எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார்.
- எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன்.
திரைப்பட இயக்குநரும், நடிகருமான பாக்கியராஜ் சென்னையில் இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியுள்ளதாவது:
தமிழக நலனை நினைத்தே எம்ஜிஆர் அதிமுகவை ஆரம்பித்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் அதிமுகவை சிறப்பாக வழி நடத்தினார்கள். மக்களுக்கு எல்லா விஷயங்களை எம்ஜிஆர் நல்லபடியாக செய்தார். ஜெயலலிதாவும் அவரது பாதையில் நல்லது செய்து வந்தார். அதன் பின்னர் ஒபிஎஸ் வந்தார். அதற்கு பிறகு எடப்பாடி வந்தார். திருஷ்டி பரிகாரம் போல் கட்சிக்கு சோதனை வந்துள்ளது. அதிமுகவுக்கு இப்போது ஏற்பட்டுள்ள சோதனை நிச்சயம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
எல்லாரும் ஒருங்கிணைந்து போக வேண்டும் என்று ஓபிஎஸ் சொல்லி வருகிறார். நானும் அதையே சொல்லி வருகிறேன். எம்ஜிஆர் பெயரையும், கட்சியையும் காப்பாற்ற என்னால் முடிந்த பணிகளை ஆற்றுவேன். எல்லாரும் ஒன்று சேருவார்கள். எல்லாம் நல்லபடியாக வரும். கொஞ்ச காலம் பிடிக்கும்.
மீண்டும் எல்லாரும் ஒன்றுபட்டு பழையபடி இந்த கட்சி பலம் பெற நானும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். இதற்காக முறையாக கட்சியில் இணைந்து செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவேன். எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து இணைந்து செயல்பட அழைப்பு விடுப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்