என் மலர்
நீங்கள் தேடியது "சோனாலி போகத்"
- கொலைக்கான காரணம் குறித்து குற்றவாளிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.
- விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் தகவல்
ஹிசார்:
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பா,ஜனதா மகளிரணி நிர்வாகியுமான சோனாலி போகத் (42) கோவாவில் கடந்த 22ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், அவரது உதவியாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்துள்ளனா. சோனாலி அதிகளவு போதைப்பொருள் பயன்படுத்தி உள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து உள்ளது. சோனாலி மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி சோனாலி போகத்தின் மகள் யசோதரா போகத் கூறியதாவது:-
தற்போது கோவா போலீசார் நடத்தி வரும் விசாரணையில் எங்கள் குடும்பத்தினருக்கு திருப்தி இல்லாததால் சிபிஐ விசாரணை நடத்தவேண்டும். எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று அரியானா முதல் மந்திரி கூறினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குற்றவாளிகள் கோவாவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். ஆனால் கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடும்வரை பின்வாங்கமாட்டோம்.
கோவாவில் கிட்டத்தட்ட ஒரு வாரம் ஷூட்டிங் இருக்கும் என்று அம்மா சொன்னார். ஆனால் இரண்டு நாட்களுக்கு மட்டுமே ரிசார்ட் முன்பதிவு செய்யப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆகவே இது திட்டமிட்ட கொலை என்று தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சோனாலியின் மரணம் பற்றிய ரகசிய அறிக்கை அரியானா காவல்துறை தலைமை இயக்குநருக்கு அனுப்பப்பட்டது. கோவா டிஜிபி ஜஸ்பால் சிங், இந்த வழக்குதொடர்பாக கோவா முதல் மந்திரி சாவந்திடம் ஐந்து பக்க அறிக்கையை அளித்திருந்தார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
இந்த வழக்கில் கோவா காவல்துறையின் விசாரணை திருப்திகரமாக இருப்பதாகவும், 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
- இந்த வழக்கில் இதுவரை சோனாலி உதவியாளர், நண்பர் உள்பட 5 பேர் கைது.
- சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை.
பனாஜி:
அரியானாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகத் (வயது 42), கடந்த 22ம் தேதி கோவாவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சோனாலி, தனது உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகம் உள்ளதாக கூறி அவர்கள் மீது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அதன் பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் உள்பட ஐந்து பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை போலீசார் வெளியிட்டனர். மேலும் இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியானது.
அதில் சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில், கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்ததில், சுதிர், சோனாலிக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த திரவத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தது தெரிய வந்திருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.
இந்நிலையில் சோனாலி போகத் மரணம் தொடர்பான வழக்கை தேவைப்பட்டால் சிபிஐயிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, கோவா போலீசார் இந்த வழக்கை முழுமையாக விசாரித்து வருகின்றனர். அரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏற்கனவே தன்னிடம் பேசி இந்த வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கை சிபிஐ கைப்பற்ற வேண்டும் என்று போகத் குடும்பத்தினர் விரும்புவதாக அரியானா மாநில பிரதிநிதி தன்னிடம் கூறியுள்ளார். இதில் தமக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தேவைப்பட்டால், இந்த வழக்கை சிபிஐயிடம் அரசு ஒப்படைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளம் இருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்
- உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் கைது
புதுடெல்லி:
அரியானாவைச் சேர்ந்த பிரபல நடிகையும் பாஜக தலைவருமான சோனாலி போகத் (வயது 42), கடந்த 22ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் காலையில் அவர் அஞ்சுனாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாக தெரிவிக்கப்பட்டது. எனினும், சோனாலி போகத் மரணத்தில் மர்மம் இருப்பதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் குடும்பத்தினர் ஒப்புதலுக்கு பின், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதில், நடிகை சோனாலி போகத்தின் உடலில் காயங்களுக்கான அடையாளங்கள் உள்ளன என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சோனாலியின் மரணம் மாரடைப்பால் நடக்கவில்லை. அது ஒரு கொலை என்று குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். மேலும் சோனாலி, அவரது தனிப்பட்ட உதவியாளர் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் ஆகியோரால் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகித்து, அவர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சுதிர் சங்வான் மற்றும் அவரது நண்பர் சுக்விந்தர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். பின்னர் விசாரணை நடத்திய போலீசார், சோனாலி 22ம் தேதியன்று கர்லீஸ் இரவு விடுதியில் பார்ட்டியில் பங்கேற்றபோது அவருடன் இருந்த சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் உணவு விடுதி உரிமையாளர் மற்றும் சந்தேகத்திற்குரிய வகையிலான போதைப் பொருள் கடத்தல்காரர் ஆகியோரையும் கோவா போலீசார் கைது செய்துள்ளனர்.
சுதீர் சங்வான் மற்றும் சுக்வீந்தர் சிங் இருவரும், இரவு விடுதியில் வைத்து தண்ணீரில் தீங்கு விளைவிக்கும் பொருளை கலந்து, சோனாலிக்கு கட்டாயப்படுத்தி கொடுத்திருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
சோனாலி போகத் இரவு விடுதியில் இருந்து வெளியே செல்லும் வழியில் தடுமாறிக் கொண்டிருந்த வீடியோ பதிவை நேற்று போலீசார் வெளியிட்டனர். இன்று இந்த வழக்கில் புதிய ஆதாரமாக மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. சோனாலி போகத் இறப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பாக, நடன அரங்கில் அவரை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைப்பதாக அந்த காட்சி அமைந்துள்ளது. வீடியோவில் உள்ள நபர், கைது செய்யப்பட்ட சுதிர் சங்வான் போன்று தெரிகிறது. ஒரு நாள் முன்பு வெளிவந்த வீடியோ பதிவில் கிளப்பில் இருந்து சோனாலி போகத் வெளியேற அவர் உதவியது தெரிந்தது.
சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை விசாரணை அதிகாரி ஆய்வு செய்ததில், சுதிர் சோனாலிக்கு தண்ணீர் பாட்டிலில் இருந்த திரவத்தை வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தது தெரியவந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.