என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஜெய்ஷா"
- அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது.
- இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணி 2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு சென்று விளையாடியதில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தபோது இந்திய அணி அங்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் இலங்கைக்கு மாற்றப்பட்டது.
அடுத்ததாக பாகிஸ்தானில் 8 அணிகள் இடையிலான சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச்சில் நடக்கிறது. பாகிஸ்தானுடனான சீரற்ற உறவு மற்றும் பாதுகாப்பு பிரச்சினையால் இந்திய அணி அங்கு செல்வதற்கு தயக்கம் காட்டுகிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
இந்த நிலையில் இந்திய அணி இந்த முறை பாகிஸ்தானுக்கு வருகை தரும் என்று அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக இந்தியாவின் ஜெய்ஷா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார் என்றால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஆதரவு அளித்துள்ளது என்று தான் அர்த்தம். இதுவே இந்திய அணி பாகிஸ்தானுக்கு வருகை தருவதை 50 சதவீதம் உறுதிப்படுத்தி விட்டது.
கிரிக்கெட் வாரிய நிர்வாகியாக ஜெய்ஷா இதுவரை செய்துள்ள பணிகள் கிரிக்கெட்டுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே இருந்துள்ளன. எனவே சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி பங்கேற்பதை உறுதி செய்வதற்கான முயற்சியை அவர் மேற்கொள்வார் என நம்புகிறேன்.
இவ்வாறு ரஷித் லத்தீப் கூறினார்.
- ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்தது.
கொல்கத்தா:
ஐ.சி.சி. தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது.
இதையடுத்து ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினம் இதற்கான கடைசி நாளாகும். பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவரைத் தவிர வேறு யாரும் போட்டியிடவில்லை என்பதால், ஐ.சி.சி.யின் புதிய தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி அவர் பொறுப்பு ஏற்க இருப்பதாக ஐ.சி.சி. அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்கும் குறைந்த வயது நிர்வாகி என்ற பெருமையை ஜெய்ஷா பெற்றுள்ளார். அவருக்கு இந்திய வீரர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.சி.சி. தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, மம்தா பானர்ஜி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய உள்துறை மந்திரிக்கு வாழ்த்துகள். உங்கள் மகன் அரசியல்வாதி ஆகவில்லை. ஆனால், அதைவிட மிக முக்கிய பதவியான ஐ.சி.சி. தலைவராகி உள்ளார். உங்கள் மகன் மிகவும் சக்தி வாய்ந்தவராகிவிட்டார். அவரின் இந்த உயர்ந்த சாதனைக்கு உங்களை வாழ்த்துகிறேன், சபாஷ் என பதிவிட்டுள்ளார்.
- 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும்.
- மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.
சென்னை
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
35 வயதான அவர் டிசம்பர் 1-ந்தேதி ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்கிறார். இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ஜெய்ஷா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டி20 போட்டி அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் வடிவமாக இருக்கலாம். ஆனாலும் கிரிக்கெட்டின் அடித்தளமான டெஸ்ட்க்கு எனது பதவிக்காலத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். எங்கள் முயற்சிகள் மற்றும் பணிகள் அதை சார்ந்து இருக்கும்.
உலகம் முழுவதும் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்தும் வகையில் என்னால் முடிந்த அனைத்து பணியையும் செய்வேன். இந்த முக்கிய பொறுப்பில் என் மீது உள்ள எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்.
2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது வரலாறாக இருக்கும். ஐ.சி.சி.க்கு தலைமை தாங்குவது சிறப்பானது. மகளிர் கிரிக்கெட் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் மேம்பாடு சார்ந்தும் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு ஜெய்ஷா கூறியுள்ளார்.
- ஐசிசி தலைவராக ஜெய்ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம் என பிரகாஷ்ராஜ் கூறினார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
ஜெய்ஷாவுக்கு பல்வேறு பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டாலான முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரிய சாதனையாளரை கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர். இந்திய கிரிக்கெட் உருவாக்கிய சிறந்த ஆல் ரவுண்டர். ஒரு மனதாக ஐசிசி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்.
இவ்வாறு பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
- பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஐசிசி-யின் தலைவராக ஜெய்ஷா டிசம்பர் 1-ந் தேதி பொறுப்பேற்கிறார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) செயலாளராக இருந்த ஜெய்ஷா ஐ.சி.சி.யின் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) தலைவராக ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார்.
35 வயதான அவர் இளம் வயதில் ஐ.சி.சி. தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். ஜெய்ஷா டிசம்பர் 1-ந்தேதி பொறுப்பை ஏற்கிறார்.
ஜெய்ஷா ஐ.சி.சி. தலைவராகி விட்டதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய செயலாளராக யார்? நியமிக்கப்பட இருக்கிறார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும், மறைந்த மத்திய மந்திரி அருண் ஜெட்லியின் மகனுமான ரோகன் ஜெட்லி பி.சி.சி.ஐ-யின் புதிய செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
கிரிக்கெட் வாரிய பொருளாளரும், மராட்டிய பா.ஜனதா நிர்வாகியுமான ஆசிஷ் ஷிலார், காங்கிரஸ் எம்.பி.யும், கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருமான ராஜீவ் சுக்லா, ஐ.பி.எல். தலைவர் அருண்துமால், மேற்கு வங்காள கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் அபிஷேக் டால்மியா, திலகர் கண்ணா உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளனர்.
- நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன்.
- உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2019 அக்டோபர் முதல் பிசிசிஐ கெளரவ செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும் பணியாற்றிய ஜெய் ஷா, 2024 டிசம்பர் 1 முதல் ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜெய்ஷாவுக்கு இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யா வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐசிசி-ன் இளம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு வாழ்த்துகள். நீங்கள் கிரிக்கெட்டை மாபெரும் உயரத்திற்கு கொண்டுசெல்வதை பார்க்க ஆவலோடு உள்ளேன். உங்களின் நோக்கம் மற்றும் செயல்பாடு ஐசிசி-ன் வளர்ச்சிக்கு உதவும்.
இவ்வாறு பாண்ட்யா கூறினார்.
- புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுஷ்மான் கெய்க்வாட் சிகிச்சை பெற்று வந்தார்.
- கபில் தேவ் தன்னுடைய பென்சன் தொகையை அனுஷ்மான் சிகிச்சைக்கு கொடுத்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவருடைய இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட் கிரிக்கெட்டுக்கான அவரது பங்களிப்பிற்காக நினைவுகூரப்படுவார். அவர் ஒரு திறமையான வீரர் மற்றும் ஒரு சிறந்த பயிற்சியாளர். அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள்" என்று பதிவிட்டுள்ளார் .
அனுஷ்மான் உயிரிழந்ததற்கு பிசிசிஐ செயலாளர் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பதிவில், "அனுஷ்மான் கெய்க்வாட்டின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்" ஏன்னு பதிவிட்டுள்ளார்.
பிசிசிஐ முன்னாள் செயலாளரான சவுரங் கங்குலியும் அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்காக 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுஷ்மான், 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்..
அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார்.
71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வந்தார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஷ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை அவருடைய மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து, அனுஷ்மான் கெய்க்வாட்டுக்கு பிசிசிஐ 1 கோடி நிதியுதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார்.
- கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அனுஷ்மான் கெய்க்வாட் தற்சமயத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்காக அவர் 12 வருடங்களில் 40 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமையை கொண்டவர். மேலும் 1990-களின் இறுதியில் இந்திய அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.
அவருடைய வழி காட்டுதலில் சார்ஜாவில் நடைபெற்ற கோகோ-கோலா கோப்பையை இந்தியா வென்றதை மறக்க முடியாது. அத்துடன் ஓய்வுக்கு பின் பிசிசிஐ நிர்வாகத்தில் அவர் முக்கிய பொறுப்பிலும் இருந்தார். தற்போது 71 வயதாகும் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு போராடி வருகிறார். எனவே தமக்கு பொருளாதார ரீதியில் உதவி செய்யுமாறு அவருடைய சார்பில் பிசிசி-ஐக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதற்கு பிசிசிஐ-யிடம் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனையடுத்து முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் தம்முடைய பென்சன் தொகையை தனது நண்பன் மற்றும் சக வீரரான அனுஸ்மானுக்கு கொடுப்பதாக அறிவித்தார். அத்துடன் மற்ற வீரர்களும் அவர்களுடைய குடும்பம் சம்மதித்தால் தங்களது பென்சன் தொகையை மருத்துவ உதவிக்கு கொடுக்கலாம் என கபில் தேவ் கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் அன்ஷுமான் கெய்க்வாடுக்கு நிதியுதவி வழங்க உடனடியாக ரூ.1 கோடியை வழங்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உத்தரவிட்டுள்ளார். மேலும் அவருடைய குடும்பத்தாரிடம் பேசி நிலைமையை விசாரித்து உதவிகளை வழங்கினார்.
- இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
- பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
- ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான்.
- இம்பேக் பிளேயர் விதி நிரந்தரமான விதி கிடையாது.
ஐபிஎல் தொடர் 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரை விறுவிறுப்பாக எடுத்து செல்லும் விதமாக ஒவ்வோரு சீசனிலும் புதிய விதிமுறையை அமல்படுத்துவதுண்டு. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் சீசனில் புதிய விதிமுறையாக இம்பேக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த விதிக்கு இதுவரை எதிர்ப்பு ஏதும் வரவில்லை. ஆனால் ரோகித் சர்மா மட்டும் இந்த விதி தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இம்பேக் பிளேயர் விதிமுறை தொடருமா என்பது குறித்து பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா கூறியதாவது:-
ஐபிஎல் தொடரில் இம்பேக் பிளேயர் விதி சோதனை முயற்சியாக கொண்டுவரப்பட்டதுதான். நிரந்தரமான விதி கிடையாது. இந்த விதியால் ஒவ்வொரு போட்டியிலும் 2 புதிய இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
இம்பேக்ட் விதி குறித்து இதுவரை எந்த அணியும் எங்களிடம் கருத்து தெரிவிக்கவில்லை. அணிகள், ஒளிபரப்பு உரிமம் பெற்றவர்கள் என அனைவரிடமும் கலந்தாலோசித்த பின்னரே, இந்த விதி தொடர வேண்டுமா, கூடாதா என முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
- செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார்
அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார்.
இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார் என தெரிவித்தார்.
வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், ஜூன் 9 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார். மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- இந்த ஊக்கத்தொகை 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் ஜெய்ஷா குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் தரம்சாலாவில் நடைபெற்றது.
இதில் 'டாஸ்' வென்று இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டும், அஷ்வின் 4 விக்கெட்டு, ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 477 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் சதத்தாலும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் ஆகியோரின் அரைசதத்தாலும் 259 ரன்கள் இந்திய அணி கூடுதலாக சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சோயிப் பஷீர் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. இந்திய அணியின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் அஷ்வின் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஊக்கத்தொகை அறிவித்துள்ளது. அதன்படி ஓர் ஆண்டில் 75% டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரருக்கு ஒரு போட்டிக்கு ரூ.45 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவித்துள்ளார். இது 2022-2023 சீசனில் இருந்து தொடங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்