என் மலர்
நீங்கள் தேடியது "பேரிடர் மீட்பு படை"
- அரக்கோணத்தில் இருந்து 2 குழுவினர் சென்றனர்
- 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது
அரக்கோணம்:
பல்வேறு மீட்புப் பணிகளுக்காக அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தலா 15 பேரை கொண்ட இரு குழுவினர், திங்கள்கிழமை கேரள மாநிலம், சபரிமலைக்கு சென்றனர்.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் அருகே உள்ள நகரிகுப் பத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படைத்தளம் உள்ளது. இங்கி ருந்து நாட்டின் தென்பகுதியில் உள்ள தமிழ்நாடு, கர்நாடகம், கேர ளம், ஆந்திரம் மற்றும் புதுவை, அந்தமான் உள்ளிட்ட மாநிலங்க ளில் பேரிடர் ஏற்படும் காலங்களிலும், முன்னெச்சரிக்கைப் பணிக் காகவும் அந்தந்த மாநிலங்களின் கோரிக்கைக்கு ஏற்ப தேசிய பேரி டர் மீட்புப் படையினர் அந்தப் பகுதிகளுக்குச் செல்வர்.
இந்த நிலையில், வரும் 17-ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 20-ஆம் தேதி வரை மகரவிளக்கு காலத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல்வேறு மாநிலங்க ளில்இருந்துலட்சக்கணக்கான பக் தர்கள் இருமுடி கட்டிச்செல்வர்.
இதற்காக, சபரிமலையில் முன் னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை யினரை அனுப்புமாறு கேரள அரசு, அரக்கோணம் தேசிய பேரி- டர் மீட்புப் படைத்தளத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தது.
இதையடுத்து, படைப் பிரிவின் கமாண்டண்ட் அருண் உத்தரவின் பேரில், ஆய்வாளர் சுரேஷ் தலை மையில், தலா 15 பேர் கொண்ட இரு குழுவினர் திங்கள்கிழமை சாலை மார்க்கமாக கேரள மாநி லம், பத்தனம்திட்டா மாவட்டம், பம்பைக்கு புறப்பட்டுச் சென்ற னர். இவர்களில் ஒரு குழு பம்பை யிலும், மற்றொரு குழு சபரிமலை யிலும் முகாமிட உள்ளனர்.
இவர்கள், பேரிடர் மீட்புக் கான அதிநவீன உபகரணங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள், முதலுதவி சிகிச்சைக்கான மருத் துவ உபகரணங்கள், பாதுகாப்புக் கான உபகரணங்களுடன் புறப்பட் டுச் சென்றுள்ளனர்.
மேலும், கேரள அரசு மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட நிர்வா கத்துடன் தொடர்ந்து தொலைத் தொடர்பில் இருப்பதற்காக, அரக் கோணம் படைத் தளத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப் பட்டுள்ளது.
தேவைப்பட்டால் கூடுதலாக படை வீரர்கள் அனுப்பி வைக்கப் படுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள் கொண்டு சென்றனர்
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோ ணத்தில் தேசிய பேரிடர் மீட்புப்படை மையம் இயங்கி வருகிறது.
தற்போது வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வீரர்களை அனுப்ப தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக்கொண்டது.
அதன் பேரில் 25 பேர் கொண்ட 4 குழுக்களை அனுப்ப கமாண்டன்ட் அகிலேஷ் குமார் உத்த ரவிட்டார். இதையடுத்து துணை கமாண்டன்ட் சங்கரபாண்டியன், சுதாகர் ஆகியோர் மேற்பார்வையில் 2 குழுக்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும், 2 குழுக்கள் விழுப்புரம் மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏற்கனவே ஒரு குழு சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
பேரிடர் மீட்புப் படை வீரர்கள் ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள், கயிறு, நவீன தொலை தொடர்பு சாதனங்கள் மருத்துவ முதலுதவி கருவிகள், ஆகியவற்றை கொண்டு சென்றனர்.
- மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17,18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக ஆறு, குளங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
கோரம்பள்ளம் உள்ளிட்ட சில குளங்கள் உடைந்ததால் அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சூழ்ந்தது.
இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளை சேர்ந்த பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். 6-வது நாளாக இன்றும் வெள்ளம் அப்பகுதியில் சூழ்ந்து உள்ளதால் குடியிருப்பு வாசிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
எனவே அங்குள்ளவர்களுக்கு பேரிடர் மீட்பு படையினர் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள். வீடுகளை சுற்றி வெள்ளம் உள்ளதால் குடிநீருக்காக அவர்கள் பெரிதும் தவித்து வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் 25 பேர் உயிரிழந்து உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாநகர பகுதியான முத்தையாபுரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த ஞானமுத்து, அவரது தாயார் ஞானம்மாள் மற்றும் உறவினர் குழந்தை என 3 பேரும், அதே பகுதியை சேர்ந்த மேலும் 3 பேர் உடல்களும் இன்று கண்டெடுக்கப்பட்டது.
தொடர்ந்து மாநகர பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகளும், பேரிடர் மீட்பு படையினரும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
எனினும் வெள்ள நீர் வடியாததால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் இன்றும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.
- தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.
- சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயில் முன் எப்போதும் இல்லாத அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2 மாதம் சுட்டெரிக்கும் வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு தற்போது கோடை மழை ஆறுதலாக உள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
அதிகபட்ச வெப்பம் நிலை இயல்பைவிட குறைவாகவே உள்ளது. இதனால் உஷ்ணம் மற்றும் புழுக்கத்தில் இருந்து மக்கள் தற்போது சற்று விடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் மேலும் 5 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதியிலும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் 22-ந் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரண மாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அதன் படி இன்று (18-ந் தேதி) அநேக இடங்களில் இடி-மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழையும் தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
நாளை (19-ந் தேதி) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராம நாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத் துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 34-35 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்ப நிலை 26-27 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் இப்பகுதிக ளுக்கு மீனவர்கள் 21-ந் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மாநில பேரிடர் மீட்பு படை
வருவாய் மற்றும் பேரிடர் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மிக கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் 4 மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப் பட்டுள்ளனர்.
அதன்படி தலா 30 வீரர்கள் கொண்ட தலா 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்துக்கு ஒரு குழு அனுப்பப்பட்டு உள்ளது. ஆக மொத்தம் 300 வீரர்களை கொண்ட 10 குழுக்கள் 4 மாவட்டங்களில் அனைத்து மீட்பு உபகர ணங்களுடன் தயார் நிலை யில் நிறுப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் கோரிக் கையின்படி அரக்கோணத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலை யில் உள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
- சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை.
- மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த மாத இறுதியில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தீவிரம் அடைந்துள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதனால் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தினமும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பொதுமக்கள் தங்குவதற்காக நிவாரண முகாம்களும் தயாராக வைக்கப்பட்டு இருக்கிறது.
இந்தநிலையில் கேரள மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் மட்டு மின்றி பல இடங்களில் சாலைகளிலும் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கனமழை காரணமாக பல மாவட்டங்ளில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
கோழிக்கோடு மாவட் டத்தில் பல இடங்களல் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. ஆலப்புழா மற்றும் கண்ணூரில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. இடுக்கி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலையோர பகுதிகளில் இரவுநேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கோட்டயம் மாவட்டத்தில் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மாநிலம் முழுவதும் கனமழை நீடித்து வரும் நிலையில் பத்தினம்திட்டா, கோட்டயம், இடுக்கி, கேட்டயம், எர்ணா குளம்ஆகிய மாவட்டங்களிலும், கண்ணூர் மாவட்டத்தில் இரிட்டி தாலுகாவிலும் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.
வயநாடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மலைபபகுதிகளில் பயணம் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனமழை தொடரும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடனும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் நடப்பு தென்மேற்கு பருவமழை சீசனில் கேரளாவில் அதிகபட்ச மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள் ளது. 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் சராசரியாக 69.6 மில்லிமீட்டரும், அதிகபட்சமாக கோட்ட யத்தில் 103 மில்லிமீட்டரும் மழை பெய்திருப்பதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- புயலை எதிர்கொள்ள போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
சென்னை:
சென்னையில் புயலை எதிர்கொள்ள போலீசார் தயார் நிலையில் உள்ளனர்.
போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சென்னை மாநகரம் முழு வதும் 12 பேரிடர் மீட்பு படையினர் புயல் பாதிப்பில் இருந்து மக்களை பாது காப்பதற்காக உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 12 போலீஸ் துணை கமிஷனர் அலுவலகங்களுக்கும் ஒரு பேரிடர் மீட்பு படையினர் செயலாற்றும் வகையில் 12 மீட்பு குழுவினர் ஏற்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மீட்பு குழுவில் புயல் பாதிப்பை முழுமையாக எதிர்கொள்ளும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற போலீசார் இடம் பெற்றுள்ளனர்.
புயல் பாதிப்பின்போது மரங்கள் சாய்ந்து விழுந்தால் உடனடியாக வெட்டி அப்புறப்படுத்தும் வகையில் இந்த குழுவினரிடம் மரம் அகற்றும் எந்திரங்களும் உள்ளன.
பாதிப்பு ஏற்படும் இடங் களுக்கு உடனடியாக சென்று இந்த மீட்பு படையினர் மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவார்கள்.
அதேபோன்று சென்னை முழுவதும் 18 ஆயிரம் போலீசாரும் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்கிறார்கள்.
சென்னையில் 35 கட்டுப்பாட்டு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு மையங்களில் 24 மணி நேரமும் போலீசார் செயல்படும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், நரேந்திரன் நாயர் மற்றும் இணை கமிஷனர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர 800 தீயணைப்பு படை வீரர்களும் சென்னையில் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
- கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- கேரள மாநில நிர்வாகம் வேண்டுகோள்
அரக்கோணம்:
கேரளாவில் கடந்த சில நாட் களாக தென் மேற்கு பருவ மழை பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணியில் ஈடுபடுவதற் காக ஏற்கனவே அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்பு படைகுழுவினர் சென்றுள்ள னர் .
இந்த நிலையில் கேரள மாநில நிர்வாகம் வேண்டு கோளுக்கிணங்க அரக்கோ ணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து குழுவுக்கு தலா 25 பேர் வீதம் மேலும் , ஐந்து குழுவினர் திருவனந்தபுரம் , ஆலப்புழா , கொல்லம் , எர்ணாகுளம் , கோழிக்கோடு ஆகிய பகுதிகளுக்கு அதிந வீன மீட்பு கருவிகளுடன், மீட்புப்படை வாகனத்தில் சென்றனர் .
- பலத்த மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
- அதிநவீன மீட்பு கருவிகளுடன் சென்றனர்
அரக்கோணம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடை விடாமல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்பு பணி யில் ஈடுபடுவதற்காக கேரள மாநில நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப கேட்டுக்கொண்டுள்ளது.
அதை தொடர்ந்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டன்ட் வைத்தியலிங்கம் உத்தரவின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் இருந்து வயநாடு, பத்தினம்திட்டா, மலப்புரம், கன்னூர், கோட்டயம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய பகுதிகளுக்கு பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அதிநவீன மீட்பு கருவிகளுடன் மீட்புப்படை வாகனத்தில் சென்றனர்.