search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலெக்டர் ஆய்வு"

    • தீர்த்தக் குளங்கள் காணவில்லை.
    • அனைத்து கோவில்களிலும் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலைகோபி மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் சரயுவிடம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி நகரம் மற்றும் ஒன்றியத்தில் உள்ள புராதானமான வரலாற்று சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான மாமன்னர்கள் கட்டிய கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ளன. அனைத்து கோவில்களிலும் பெருமளவு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிலைகள், ஆபரணங்கள், உண்டியல் காணிக்கைகள் களவாடப்பட்டுள்ளன.

    தீர்த்தக் குளங்கள் காணவில்லை. ஆகவே கலெக்டர், கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில் உள்ள கோவில்களை நேரில் வந்து பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.
    • உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    நீர்வளத் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட் கலெக்டர் .அருண் தம்புராஜ், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 -ம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், 100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    சிதம்பரம் அடுத்த பள்ளிப்படை கிராமத்தில் மீதிக்குடி வாய்கால் 21.21 கி.மீ நிளத்திற்கு 20.30 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வரும் பணியினையும், வேளக்குடி கிராமத்தில் கவரப்பட்டு வாய்க்கால் 9 கி.மீ நீளத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும், காட்டுமன்னார்கோயில் கோப்பாடி கிராமத்தில் பழைய கொள்ளிடம் 3.20 கி.மீ நீளத்திற்கு ரூ.24.60 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், கீழவன்னியூர் கிராமத்தில் வெள்ளியங்கால் ஓடையில் 2.50 கி.மீ நீளத்திற்கு ரூ.25லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் தூர்வாரும் பணியினையும் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு சம்மந்த ப்பட்ட அலுவலர்களுக்கு விரைவாக முடிக்க அறிவுரை வழங்கினார்.

    மேலும், விவசாயிகளுடன் கலந்துரையாடி பணிகள் முன்னேற்றம் குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகின்) வாயிலாக சிதம்பரம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் அம்மாபேட்டை பகுதியில் நபார்டு நிதி உதவியுடன் ரூ.435 லட்சம் மதிப்பீட்டில் பாலப்பணி முடிவுற்று அணுகு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர்கள் குமார், ஞானசேகரன் மற்றும் உதவிப்பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார்.
    • நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் தாசில்தார் அலுவலகத்தில் 2019-2021-ம் ஆண்டிற்கான ஆண்டு தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் 2019-2021-ம் ஆண்டிற்கான தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, பட்டா, இ-பட்டா, முதியோர் உதவித்தொகை, கனிமம் தொடர்பான கோப்புகள், வழக்கு பதிவேடு,

    நீண்டகால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள் உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஒவ்வொரு இருக்கைக்கு உரிய கோப்புகள் முன்கொணர் பதிவேட்டின் படியம் மற்றும் நிலஅளவைத் துறையில் உள்ள அளவீட்டு நிலுவை இனங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    தொடர்ந்து குடிமைப்பொருள், சமூக பாதுகாப்பு திட்டம், கோட்டகலால், நிலஅளவைபிரிவு, ஆதார் சேவை மையம், பதிவறை, கோட்ட புள்ளியியல் பிரிவுகளை தணிக்கை செய்தார்.

    மேலும் ஓராண்டிற்கு மேலாக நிலுவையில் உள்ள கோப்புகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் தாசில்தார் அலுவலக சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து கொள்ளுமாறும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வின் போது, நம்பியூர் தாசில்தார் பெரியசாமி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் துரைசாமி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
    • ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த கோதண்டராமபுரம் கிராமத்தில் சேடப்பள்ளம் ஏரியை தனியார் நிறுவனம் மூலம் கரைகள் பலப் படுத்தப்பட்டது. இதனை கலெக்டர் பாலசுப்ர மணியம் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார். அவர் பேசும் போது, கோதண்டராமபுரம் கிரா மத்தில் அமைந்துள்ள சேடப் பள்ளமேரி நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரியை 18.67 லட்சம் மதிப்பீட்டில், 720 மீட்டர் நீளம் மண்கரை செப்பனி டப்பட்டுள்ளது. 1939 சதுர மீட்டர் அளவில் கரை சேதம் ஏற்படாத வகையில் அமைக்கப் பட்டுள்ளது. 360 மீட்டர் நீளமுள்ள நீர் வரத்து வாய்க்கால் செப்பனிடப் பட்டு ஏரிக்கு தண்ணீர் தடை இன்றி வர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சேடப்பள்ளம் ஏரியின் கீழ் 65 ஹெக்டர் நிலங்கள் மற்றும் பெரியகாட்டுசாகை, அனுக்கம்பட்டு கிராமங்க ளில் உள்ள சுமார் 18 திறந்த வெளி கிணறுகள் மற்றும் 42 ஆழ்துளை கிணறுகள் இதன் மூலம் பாசன வசதி பெரும் என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத் துறை அலுவலர்கள், மற்றும் அப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார்.
    • அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கடலூர்:

    வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்து கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். உச்சிமேடு கிராமத்தில் தோட்டக்கலை துறைச் சார்பாக அமைக்கப் பட்டுள்ள வெண்டை வய லினை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்து, உச்சிமேடு கிராம விவசாயிகளுடன் கலை ஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டப் பணிகள் செயலாக்கம் குறித்து கலந்துரையாடினார்.

    கலைஞரின் அனைத்து கிராம ஓருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி தெளிப்பான், விதைதளை, வரப்புபயிர், உள்ளிட்டவை மற்றும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் பண்ணை கருவிகள், உணவு மற்றும் ஊட்டசத்து இயக்கத்தின் கீழ் கோனோவீடர், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத் தின் கீழ் சூரியஒளி பொறி மற்றும் உளுந்து விதைகள், தார்பாலின் ஆகியவற்றை பயனாளிகளுக்கு வழங்கினார்.

    மதலப்பட்டு ஊராட்சி வில்லுபாளையம் பகுதி யில் வேளாண்மை துறையின் மூலம் சுமார் 50 ஏக்கர் அளவில் அமைக்கப் பட்டுள்ள உளுந்து வம்பன்-8 விதைப் பண்ணை வயலினை ஆய்வு செய்தார். மேலும் வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயி ஒருவர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டையினை ஆய்வு செய்து, இத்திட்டத் தினை முறையாக பயன் படுத்தி மேன்மையடையும் வகையில் கலெக்டர் பால சுப்ரமணியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி னார். இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கண்ணையா, வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) கென்னடி ஜெபக்குமார், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜெயகுமார், வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) பிரேம்சாந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தினார்.

    தேனி:

    தேனி-அல்லிநகரம் நகராட்சி, கோடாங்கிபட்டி ஊராட்சி, பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சி, சருத்துப்பட்டி ஊராட்சி, தென்கரை பேரூராட்சி மற்றும் பெரியகுளம் நகராட்சி ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியினை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார்.

    அரிசி குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கை, இதுவரை பொங்கல் பரிசு த்தொகுப்பு வழங்கப்பட்ட எண்ணிக்கை, வழங்கப்பட வேண்டிய எண்ணிக்கை, சர்க்கரை மற்றும் பச்சரிசியின் தரம், இருப்பு மற்றும் கரும்பின் அளவு அதன் தடிமன் குறித்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைதாரர்களிடம் பொங்கல் பரிசுத்தொகு ப்பின் சர்க்கரை, பச்சரிசி, கரும்பு ஆகியவற்றின் தரம் குறித்து கேட்டறிந்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ரூ.1000 ரொக்கம் மற்றும் முழு கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பில் அரிசி, சர்க்கரை மற்றும் கரும்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கிடாமல் அதனை உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலு வலர்களிடம் தகவல் தெரிவித்து, அதனை மாற்று வதற்கான உரிய நடவடிக்கை கள் மேற்கொள்ள விற்பனையாளர்களை அறிவுறுத்தினார்.

    • சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது.
    • பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள எல்லீஸ் அணை கடந்த ஆண்டு உடைந்தது. தற்போது பெய்து வரும் மழை சாத்தனூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் ஆற்றில் அதிகமாக தண்ணீர் வருகின்றது. கடந்த சில நாட்களாக வரக்கூடிய இந்த தண்ணீர் ஆற்றில் சமநிலையில் செல்லவில்லை. உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மிகப்பெரிய பள்ளமாகவும் பாதையாகவும் உருவாகி தென்பெண்ணை ஆற்றின் கரைகளில் அரிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏனாதிமங்கலம் விழுப்புரம் சாலை விரைவில் துண்டிப்பு ஏற்படும் நிலை உள்ளது. இதனால் 6 கிராம மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

    இந்த ஆற்று நீர் கிராமங்களுக்கு சென்றால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் தகவலறிந்த விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் எல்லீஸ் சத்திரம் கரை ஓரம் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கபட்ட நிலையில் உள்ள பகுதியை பார்வையிட்டார். அப்போது   பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறையைச் சார்ந்த அதிகாரிகள் உடனடியாக கற்களை கொட்டி தடுப்பு ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது அவருடன் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன், புகழேந்தி எம்.எல்.ஏ., திருவெண்ணைநல்லூர் யூனியன் தலைவர் ஓம் சிவசக்திவேல், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், எரலூர் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாஜலபதி மற்றும் பலர் சென்றனர்.

    ×