search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆள் சேர்ப்பு முகாம்"

    • நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
    • தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரியில் வருகிற நவம்பர் மாதம் நடைபெறும் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

    அக்னிபாத் திட்டத்தின் கீழ் 2023-24-ம் ஆண்டிற்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் கோயம்புத்தூர் ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகம் மூலம் வருகிற நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தேனி, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்கள் பங்கு பெறலாம்.

    மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் தகவல் அறிய மற்றும் விண்ணப்பிக்கலாம். எனவே, இந்த முகாமில் பெருமளவில் இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • அக்கினி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
    • 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் அக்கினி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது.

    கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சை, நாகை, சிவகங்கை, மயிலாடுதுறை, கரூர், திண்டுக்கல், விருதுநகர், காரைக்கால், பெரம்பலூர் உட்பட 17 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

    நாளை 1-ந்தேதி ஆள் சேர்ப்பு நடைபெறுவதற் கான கடைசி நாளாகும். ஏற்கனவே 36 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்த நிலையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த ஆள் சேர்ப்பு முகாமில் பங்கேற்க வில்லை என்று கூறப்படுகிறது.

    ஏற்கனவே ஓட்ட பயிற்சிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உடல் தகுதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை நாளை நடக்கிறது. நாளை மறுநாள் அதிகாலையுடன் இந்த முகமானது நிறைவு பெறும். இந்த முகாமில் பங்கேற்க வந்த ராணுவ வீரர்கள் அனைவரும் அதன் பிறகு இங்கிருந்து புறப்பட்டு செல்வார்கள்.

    கடந்த 10 நாட்களாக அண்ணா விளையாட்டு அரங்கம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இங்கு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நாளை மறுநாள் காலையுடன் முடிவடைவதை தொடர்ந்து மீண்டும் அண்ணா விளை யாட்டு அரங்கத்திற்குள் பொதுமக்கள் நடை பயிற்சிக்கு அனும திக்கப்படுவார் கள் என்று தெரிகிறது.

    ×