search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடி"

    • உடல்நிலை சரியில்லாததால் மனம் உடைந்து காணப்பட்டார்.
    • திருவட்டார் போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே மங்காட்டுவிளை, மூவாற்று முகம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 72). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் டயாலிஸ் செய்துவந்தார் இதனால் மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் ராஜேந்திரன் கிடந்தார். இதை அவரது இளைய மகன் பார்த்து உடனே ஆற்றூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் . அங்கு 2 நாள் சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று இரவு ராஜேந்திரன் இறந்துவிட்டார். இவரது மூத்தமகன் ஷாஜி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். போலீசார் புகரை பெற்றுக்கொண்டு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

    • இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.
    • இவர் பெற்றோர் அறிவுரை கேட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே பருத்தி கோட்டை விளை காட்டாத்துறை பகுதியை சேர்ந்தவர் பீட்டர் தாமஸ். இவரது மகன் விஜின் பிரகாஷ் (வயது 24). என்ஜினீயரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதை பழகத்திற்கு அடிமையானார்.

    இவரை பெற்றோர் அறிவுரை கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று விஜின் பிரகாஷ் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றார். தாய் மேரி விஜிலா இதை பார்த்து அவரை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். டாக்டர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை விஜின் பிரகாஷ் உயிரிழந்தார்.

    இது சம்பந்தமாக தாய் மேரி விஜிலா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான வாலிபர் வாக்குமூலம்
    • இரணியலில் 3 இடங்களில் கைவரிசை

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே திங்கள் நகரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் மையத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. இதே போல் அதேபகுதியில் உள்ள ஜுவல்லரி கடை மற்றும் செல்போன் கடை ஒன்றை உடைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.இந்த நிலையில் இரணியல் சப் இன்ஸ்பெ க்டர் பாலசுந்தரம் தலைமை யிலான போலீசார் நெய்யூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார்.சந்தேகம் அடைந்த போலீசார் அவரை இரணியல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்த போது அவர் கன்னியாகுமரி அருகே ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த இன்னாசி லயோலா (வயது 29) என்பது தெரியவந்தது.

    இவர் திங்கள் நகரில் உள்ள ஏடிஎம் மையம், ஜுவல்லரி செல்போன் கடைகளில் கைவ ரிசை காட்டியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து போலீசார் இன்னாசி லயோலாவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் போலீசாரிடம் கூறுகையில் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றேன்.ஆனால் பணத்தை எடுக்க முடியவில்லை. இதனால் ஜுவல்லரி மற்றும் செல்போன் கடையை உடைத்ததாக தெரிவித்தார். போலீசார் இன்னாசி லயோலாவை இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். பின்னர் அவர் நாகர்கோ வில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • திருமணம் ஆகாத விரக்தியில் பரிதாபம்
    • கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கொட்டாரம் அருகே உள்ள செல்வன்புதூரைச் சேர்ந்தவர் சந்தானம். இவரது மகன் ரமேஷ் (வயது 29). இவர் டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் விரக்தியில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மது போதையில் தனது வீட்டுக்கு வந்து உள்ளார்.இரவுஅவர் தனது வீட்டில்படுத்து தூங்கி உள்ளார். இந்த நிலையில் நேற்றுஅவர் வெகு நேரமாகியும் எழும்ப வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ரமேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கன்னியா குமரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மகளுக்கு காதலனே விஷம் கொடுத்துள்ளதாக குற்றச்சாட்டு
    • நித்திரவிளை மாணவி சாவில் தாயார் பரபரப்பு புகார்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள வாவறை பகுதியைச் சேர்ந்தவர் சின்னப்பர். இவரது 3-வது மகள் அபிதா (வயது 19). களியக்காவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த 1-ந் தேதி வயிற்று வலியால் அவதிப்பட்டார்.

    இதனைத் தொடர்ந்து அவரை பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பதில் மர்மம் நிலவியது.

    இதற்கிடையில் அபிதா காதல் விவகாரம் காரணமாக விஷம் அருந்தி இருக்கலாமா? என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    அதில், நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அபிதாவுக்கு பழக்கம் இருந்ததும், அந்த வாலிபருடன் பல இடங்களுக்கு அவர் சென்று வந்திருப்பதும் தெரிய வந்தது. தற்போது பெங்களூருவில் படித்து வரும் அந்த வாலிபர், அபிதாவுடன் பேசுவதை கடந்த சில மாதங்களாக தவிர்த்துள்ளார்.

    இதுபற்றி அபிதா போலீசில் புகார் அளித்துள்ளார். தன்னுடன் பழகி விட்டு திருமணத்திற்கு மறுப்பதாக வாலிபர் மீது அவர் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் அடிப்படையில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் பேசி உள்ளனர். அப்போது அபிதாவை திருமணம் செய்வதாக வாலிபர் உறுதி அளித்துள்ளார். அதன்படி வருகிற 13-ந் தேதி அவர்களுக்கு திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. இந்த நிலையில் தான் அபிதா மர்மமாக இறந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் அபிதாவின் தாயார் தங்கபாய், போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் சாவுக்கு அவளது காதலன் தான் காரணம் என தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மகளை அவர் அழைத்துச் சென்றார். அவரை சந்தித்து விட்டு திரும்பியதில் இருந்து தான் அபிதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    எனவே அவர் தான், அபிதாவுக்கு விஷம் கலந்த எதையோ கொடுத்துள்ளார் என்றும் புகாரில் அவர் கூறி உள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். அபிதாவுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அல்லது உடல் நலக் குறைவால் இறந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தக்கலை பள்ளி மாணவன் அஸ்வின் பள்ளி வளாகத்தில் சீருடை அணிந்து வந்தவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இறந்தான்.

    இதில் இன்னும் குளிர்பானம் கொடுத்தது யார்? என்பது தெரிய வில்லை. இதேபாணியில் குமரி மாவட்டம் கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன்ராஜ், குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்படு கிறது. இது தொடர்பாக அவரது காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சூழலில் நித்திரவிளை மாணவி அபிதாவும், காதலனால் விஷம் கொடுத்ததில் இறந்துள்ளார் என அவரது தாயார் புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • காதலி-பெற்றோரிடம் போலீசார் விசாரணை
    • வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றம்

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் ஷரோன் ராஜ் (வயது 23). இவரது சொந்த ஊர் தமிழக-கேரள எல்லையில் உள்ள பாறசாலை முரியங் கரை ஆகும்.

    அந்த பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை ஷரோன் ராஜ் காதலித்துள்ளார். கடந்த 14-ந்தேதி அந்த பெண்ணின் வீட்டிற்கு தனது நண்பருடன் சென்றுள்ளார். வீட்டிற்குள் அவர் மட்டும் சென்று திரும்பினார். சிறிது நேரத்தில் வயிறு வலிப்பதாக கூறிய அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

    திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த ஷரோன் ராஜ் கடந்த 25-ந்தேதி பரிதாபமாக இறந்தார். அவரது கிட்னி உள்பட உடல் உறுப்புகள் செயல் இழந்திருந்ததால் பாற சாலை போலீசாருக்கு டாக்டர்கள் தகவல் கொடுத்தனர்.

    இதற்கிடையில் தனது மகன் சாவில் மர்மம் உள்ளது, அவன் காதலித்த பெண் கொடுத்த குளிர்பா னத்தை குடித்த பிறகே ஷரோன் ராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை ஜெயராஜன் போலீசில் புகார் கொடுத்தார்.

    இந்த புகார் தொடர்பாக பாறசாலைபோலீசார் உரிய விசாரணை நடத்தப்பட வில்லை என்றும் அவர் கூறினார். இதற்கிடையில் இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது.

    திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தலைைமயில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள் ஷரோன் ராஜின் நண்பரை விசாரித்தபோது, பெண்ணின் வீட்டில் குளிர் பானம் குடித்ததாக ஷரோன் ராஜ் தெரிவித்ததாக கூறினார். இதன் அடிப்படையில் அந்த பெண் மற்றும் அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அறிவுறுத்தி உள்ளனர். இன்று மாலை அவர்களிடம் விசாரணை நடத்தப்படக் கூடும் என தெரிகிறது.

    • இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே வெண்டலிகோடு புனையன்குழி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு (வயது 29), பெயிண்டர். இவருக்கு கடன்தொல்லை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் விஷ்ணு கடந்த 4-ந் தேதி விஷம் குடித்துவிட்டு வீட்டில் படுத்து இருந்தார். வெகுநேரமாகியும் அவர் எழும்பாததால் தாயார் சென்று பார்த்தார். அப்போது விஷ்ணு மயங்கிய நிலையில் இருந்தார்.

    உடனடியாக அவரை மீட்டு குலசேகரம் தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் விஷ்ணு பரிதாபமாக இறந்தார். இது குறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    • இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

    கன்னியாகுமரி:

    பேச்சிப்பாறை அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 62). இவர் கடந்த 21-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்த நிலையில் நேற்று மோதிரமலை ரப்பர் தோட்டத்தில் ராமச்சந்திரன் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடல் அருகே விஷ பாட்டில் இருந்ததால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. பேச்சிப்பாறை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ராமச்சந்திரன் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகன்களும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள்.

    • சரண் அடைந்த தந்தை வாக்குமூலம்
    • சொத்து விவகாரத்தில் மோதல்

    கன்னியாகுமரி:

    திங்கள்சந்தை அருகே உள்ள சரல்விளையைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டி யன் (வயது 80). இவருக்கு 5 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரது மகன்களில் ஒரு வரான நாகராஜன் (40) கேரளாவில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்த நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான நாகராஜன், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து உள்ளார்.

    நேற்றும் அவர் தகராறில் ஈடுபடவே ஆத்திரம் அடைந்த சவுந்தரபாண்டியன் கோடா ரியால் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் அவர் போலீசில் சரண் அடைந்தார். இந்தச் சம்பவம் திங்கள் சந்தை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பெற்ற மகனையே கொலை செய்த சவுந்தர பாண்டியன் இரணியல் போலீசில் வாக்குமூலம் கொடுத்து உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    எனது மகன் திருமண மாகாமல் இருந்த நிலையில், எனது பெயரில் இருந்த 8 செண்ட் நிலத்தை அவன் பெயருக்கு மாற்றிக் கொடுத்தேன். ஆனால் அவன் அடிக்கடி மது குடித்து விட்டு ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்தான். இதனால் அவன் மீது நம்பிக்கை இழந்தேன்.

    இதனால் 8 செண்ட் நிலத்தை மீண்டும் எனது பெயருக்கே மாற்ற திட்ட மிட்டேன். இதுபற்றி நாகராஜ னிடம் பேசிய போது அவன் மறுப்பு தெரிவித்தான். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று வீட்டுக்கு வந்த அவனிடம் மீண்டும் சொத்து பிரச்சினை குறித்து பேசி னேன். ஆனால் அவன் மது போதையில் தகாத வார்த்தைகள் பேசினான். பின்னர் அவன் வீட்டிற்குள் சென்று படுத்துவிட்டான். ஆனால் அவன் பேசிய வார்த்தைகள் எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    எனவே வீட்டில் இருந்த கோடாரியை எடுத்துச் சென்று, மகன் என்றும் பாராமல் நாகராஜன் கழுத்தில் வெட்டிக் கொன்றேன். பின்னர் போலீசில் சரண் அடைந்தேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். 

    ×