search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சிளங்குழந்தை"

    • குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரத்தில் இருந்து நெல்லை செல்லும் சாலையின் ஓரம் இன்று காலை பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. குழந்தையின் சடலத்தில் இருந்து தொப்புள் கொடி கூட அகற்றப்படவில்லை.

    இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இதுபற்றி மூலைக்கரைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குழந்தையின் சடலத்தை வீசியது யார்? குழந்தை கள்ளக்காதலால் பிறந்ததால் கொன்று வீசப்பட்டதா? அல்லது குழந்தை இறந்ததால் வீசி சென்றார்களா? குறை பிரசவத்தில் இறந்த குழந்தையை சாலையோரம் வீசினார்களா? என்ற விபரங்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.
    • தான் கர்ப்பமாக இருப்பது குறித்து தனக்கே தெரியாது என்றும் பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

    மேற்கு வங்காளம் மாநிலம், கொல்கத்தா, கஸ்பா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த 22ம் தேதி அன்று பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, அவரது வீட்டின் கழிவறையிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

    பிறந்த குழந்தை அழ ஆரம்பித்ததால், கழிவறையின் கண்ணாடி ஜன்னலை உடைத்து குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

    சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பெண் ரத்த வெள்ளத்தில் படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பெண்ணையும், குழந்தையையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இந்நிலையில், பச்சிளங்குழந்தை மறுநாள் காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

    சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது.
    • 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தெற்கு பாளையம் பகுதியில் சாலையோரம் இன்று காலை பச்சிளங்குழந்தை இறந்து கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதிபொதுமக்கள் அதிர்ச்சியடைந்ததுடன் உடனடியாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு 7 மாத குறைபிரசவத்தில் பிறந்த குழந்தை இறந்து கிடந்தது. உடனே குழந்தையின் உடலை மீட்டு பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தையின் தாய் யார், எதற்காக வீசி சென்றார் என்று தெரியவில்லை. குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் வீசி சென்றாரா அல்லது தகாத உறவு காரணமாக பிறந்ததால் வீசி சென்றாரா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குழந்தையின் இந்த உடல் பாகங்களை ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

    மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாவட்டத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் அருகில் உள்ள மார்க்கெட்டில் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் தலை மற்றும் கை பகுதி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    குழந்தையின் இந்த உடல் பாகங்களை ஒரு துணியில் சுற்றி கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். குழந்தையின் உடல் பாகங்களை அம்மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவர் கண்டு போலீசில் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல் பாகங்களை மீட்டு பிணவறையில் வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் குழந்தையின் மற்ற உடல் பாகங்களை தேடிக் கொண்டிருப்பதாக நகர காவல் கண்கானிப்பாளர் துஷார் சிங் தெரிவித்தார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பல கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

    ×