search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறவழிச்சாலை"

    • நகரின் முக்கிய இடங்களுக்கு திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள்.
    • புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுபள்ளியை சுற்றியுள்ள 50க்குமேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய தினந்தோறும் திருக்காட்டுப்பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள பூண்டி மாதா பேராலயம், அன்பில் மாரியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்லும் பக்தர்களும் திருக்கா–ட்டு–ப்பள்ளி வழியாக செல்கிறார்கள். திருக்காட்டுப்பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட திருமண அரங்குகள் உள்ளதால் திருமண நாட்களில் திருக்காட்டுப்பள்ளி நகரில் அதிகமான மக்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.

    இதனால் பல நேரங்களில் பிரதான சாலையாக திகழும் பழமார்நேரி சாலை சந்திப்பில் இருந்து பேருந்து நிலையம் வரை வாகன நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் நீண்ட வரிச யில் நின்றதால் நடந்து செல்வோரும் மிகுந்த சிரம த்திற்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது.

    திருக்காட்டுப்பள்ளி நகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்க ஒப்புதல் பெற ப்பட்டு நிலங்கள் கையகப்படுத்த ப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் புறவழிச் சாலை பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.

    திருக்காட்டுப்பள்ளியில் 3 மேல் நிலை பள்ளிகள், ஒரு உயர் நிலைப்பள்ளி உள்ளது. காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் மாணவர்கள் சிக்கி கொண்டு வகுப்பறைக்கு தாமதமாக செல்கின்றனர். எனவே அங்கு போக்குவரத்து போலீசார்நியமித்து போக்கு வரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அருப்புக்கோட்டையில் ரூ.133.5 கோடியில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணியை தொடங்கியது.
    • அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை- விருதுநகர் சாலையில் உள்ள துணைமின் நிலையம் அருகில் ரூ.133.5 கோடி மதிப்பில் அருப்புக்கோட்டை -மேற்கு புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில், அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் கூறியதாவது:-

    இந்த புறவழிச் சாலை யானது அருப்புக்கோட்டை- கோவிலாங்குளம் விலக்கில் ஆரம்பித்து வலதுபுறம் பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்- பார்த்திபனூர் சாலையில் குறுக்கிட்டு சுக்கிலநத்தத்தில் மீண்டும் குறுக்கிட்டு தேசிய நெடுஞ்சாலையில் இணைக்கப்படுகிறது.

    இதனுடைய தூரம் 10 கி.மீ. ஆகும். 35.25 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. ரூ.98.58 கோடி சாலை பணிக்கும், ரூ.35.4 கோடி நில எடுப்புக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

    இந்த புறவழிச்சாலை பணிகள் முடிவடையும் போது விருதுநகர், ராஜபாளையம், தென்காசியில் இருந்து ராமநாதபுரம் மற்றும் ராமேசுவரத்திற்கும், ராமேசுவரம், ராமநாதபு ரத்தில் இருந்து விருதுநகர், ராஜபாளையம், தென்கா சிக்கும் செல்லும் வாக னங்கள் போக்குவரத்து நெரிசலுள்ள மற்றும் குறு கலானஅருப்புக்கோட்டை நகர பகுதியை தவிர்த்து பயணிக்க ஏதுவாக அமையும்.

    அதேபோல், அருப்புக்கோட்டை மேற்கு பகுதியில் வசிப்பவர்கள் வாகன நெரிசலுள்ள நகர பகுதிகளை தவிர்த்து, மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு சிரமமின்றி பயணம் செய்யவும், பந்தல்குடியில் இருந்து விருதுநகருக்கும், பாலையம்பட்டியில் இருந்து விருதுநகருக்கும் வாகன நெரிசலுள்ள நகர பகுதியை தவிர்த்து

    சுலபமாக பயணிக்க ஏதுவாக இந்த புறவழிச்சாலை அமையும். மேலும், அருப்புக்கோட்டை நகரபகுதியில் காணப்படும் வாகன போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கருண்கரெட், கோட்டாட்சியர் கல்யாணகுமார், அருப்புக்கோட்டை நகர்மன்ற தலைவர் சுந்தர லட்சுமி சிவபிரகாசம் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில்:

    நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலுவை சந்தித்து தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மனு அளித்தார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

    கோவில்பட்டி முதல் பருவக்குடி வரை உள்ள சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்க பணிகள் செய்யப்பட்டுள்ளது. நடுவபட்டியில் இருந்து பருவக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும், குருவிகுளம் ஒன்றியம் குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி வழியாக கழுகுமலை செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால் அதனை சரி செய்ய வேண்டும். திருவேங்கடம் முதல் ஆலங்குளம் வரை குருவிகுளம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சங்கரன்கோவில் முதல் நெல்லை வரை செல்லும் சாலையில் இருந்து அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும்.

    மேலும் சுமார் 60 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட சங்கரன்கோவில் நகர்ப்பகுதியில் வியாபார ரீதியாகவும், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சங்கரன்கோவில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புறவழிச்சாலை புளியம்பட்டியில் இருந்து களப்பாகுளம், நெடுங்குளம் வாயிலாக தெற்குத் சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சங்கரன் கோவில் புறவழிச்சாலை பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது.
    • மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட திருவையாறு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 30ஆம் தேதி விவசாயிகள் தொடர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்.

    இதையடுத்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புறவழிச்சாலை தொடர்பாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது ‌. இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவு எட்டப்படாததால் தோல்வி அடைந்தது.

    இந்த நிலையில் மீண்டும் விவசாயிகள் தங்களது உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். தஞ்சை அடுத்த காட்டுகோட்டை பாதை பகுதியில் நேற்று தொடங்கிய போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நீடித்தது.

    புறவழிச்சாலையை கைவிட வேண்டும், மாற்று வழியை கண்டறிந்து ஆய்வு செய்து சாலை அமைக்க வேண்டும். புறவழிச்சாலை திட்டத்தினை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

    • திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.
    • நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக நில எடுப்பு செய்யப்பட்டுள்ள கீழத்திருப்பூந்துருத்தி, கண்டியூர் கிராம விவசாயிகள் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகத்தில் தாசில்தார் பழனியப்பன் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காவேரியம்மாள், சப்இன்ஸ்பெக்டர்கள் ரேணுகா, செந்தில்குமார், நெடுஞ்சாலைதுறை உதவி பொறியாளர், வருவாய் ஆய்வாளர் மற்று கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதி கீழத்திருப்பூந்துருத்தி சுகுமார் தலைமையில் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதி சுகுமார் பேசும்போது திருவையாறிலிருந்து அரியலூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரினார்.

    மேலும் நில எடுப்புக்கு நில உரிமையாளர்களுக்கு வழங்க நிர்ணயக்கப்பட்டுள்ள இழப்புத் தொகை குறைவாக உள்ளது எனவும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் பேசும்போது நில எடுப்பு சட்டத்தின்படியே நிலத்திற்கான மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி வழங்கிட இயலும் என தெரிவிக்கப்பட்டது.

    சுகுமாறன் தலைமையில் கலந்துகொண்ட விவசாயிகள் நில எடுப்பு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் கோப்பில் உள்ள நில எடுப்பு செய்த உத்தரவின் நகல் தேவை என்றும், அதன் பின்னரே விவசாயிகள் தரப்பில் உரிய முடிவு எடுத்திட இயலும் என்று தெரிவித்தனர்.

    வட்டாட்சியர் வருவாய் கோட்ட அலுவலரிடம் கலந்துபேசி இதற்கான முடிவு தெரிவிக்கப்படும் என தெரிவித்து. எதிர்வரும் 23-ம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்து கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

    • பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது.
    • விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.

     பல்லடம் :

    பல்லடம் புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பல்லடம் வட்டார சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் சார்பில் பல்லடம் கிராம சாலைகள் உதவி பொறியாளர் பழனிகுமாரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்கள் கூட அவசரத்துக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. புறவழிச் சாலை திட்டப்பணி அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும், புறவழிச் சாலை திட்ட பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டிய திட்டத்தை கிடப்பில் போட்டு வருவதை ஏற்க முடியாது. அடுத்த 10 நாட்களுக்குள் புறவழிச் சாலை திட்டத்தை துவங்காவிட்டால்,பொதுமக்களை திரட்டி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    ×