search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவல்கிணறு"

    • இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து சென்றனர்
    • உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம். எல்.ஏ. சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடி வந்தார்.

    நேற்று இரவு அங்கு தங்கிய அவர் இன்று காலை காரில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்தார். உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வுக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணற்றில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அமைச்சர் மனோ தங்கராஜ் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வை வரவேற்றார்.

    கிழக்கு மாவட்ட செயலா ளரும், நாகர்கோவில் மாநக ராட்சி மேயருமான மகேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டா லின் எம்.எல்.ஏ. விற்கு கட்சி நிர்வாகிகள் பொன்னாடை வழங்கினார்கள்.

    இதைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ.வை தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்று கன்னியாகுமரிக்கு அழைத்து வந்தனர். இரு சக்கர வாக னத்தில் நிர்வாகிகள் முன் செல்ல உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. அழைத்து வரப்பட்டார்.

    20 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவரை தி.மு.க. நிர்வாகிகள் இருசக்கர வாகனங்களில் எழுச்சிமிகு வரவேற்புடன் அழைத்து வந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, சதாசிவம், துணைச்செயலாளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திர குமார்.

    இளைஞர் அணி துணை அமைப்பாளர் எட்பெர்க், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் ஜெகன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர் சிவ பெருமான், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணை தலைவர் இ.என். சங்கர், நாகர்கோவில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர்,மாநகராட்சி கவுன்சிலர்கள் தங்கராஜா, சுப்பிரமணியம்,அமல செல்வன், கன்னியாகுமரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஹெலன் டேவிட்சன், குமரி மாவட்ட தலைவர் டேவிட்சன், முன்னாள் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நசரேத் பசிலியான், ஸ்டாலின் பிரகாஷ், குமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் சுஜின் ஜெகேஷ், குளச்சல் நகர்மன்ற தலைவர் நசீர், நகர செயலாளர் நாகூர்கான், மணவாளக்குறிச்சி தி.மு.க. பேரூர் செயலாளர் பாம்பே கண்ணன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட பொருளாளர் ஜூடுசேம், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜாண்லீபன், திருவட்டாா ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகநாதன், குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஐ.ஜி.பி. ஜாண்கிறிஸ்டோபர், மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் பிரிட்டோசேம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகாரிகளிடம் விஜய் வசந்த் எம்.பி.வலியுறுத்தல்
    • டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் அருகே 13½ டன் எடை கொண்ட லாரிைய 4 நிமிடத்தில் 111 மீட்டர் தூரம் இழுத்து உலக சாதனை படைத்தார் தாமரைகுட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன். நிகழ்ச்சியை விஜய் வசந்த் எம்.பி., மேயர் மகேஷ், பிரின்ஸ் எம்.எல்.ஏ., பாரதிய ஜனதா பொருளாளர் முத்துராமன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். பொதுமக்களுக்கும், பார்வையாளர்களுக்கும் கண்ணனின் சாதனை மெய்சிலிர்க்க வைத்தது. இவர் இதற்கு முன் பல சாதனைகளை நிகழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நாகர்கோவிலில் விஜய் வசந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:

    நாகர்கோவிலை சேர்ந்த வாலிபர் கண்ணன் 13½ டன் எடை உள்ள லாரியை இழுத்து சாதனை படைத்துள்ளார். அவர் குமரி மாவட்டத்திற்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    குமரி மாவட்டத்தில் தற்போது நான்கு வழிச்சாலை பணிகள் பல்வேறு பிரச்சினைகளால் நடைபெறாமல் இருந்தன. இது தொடர்பாக மத்திய மந்திரியிடம் பேசி தற்போது பணிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இன்னும் ஓராண்டுக்குள் பணிகள் ஓரளவு முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இந்த நிலையில் நாகர்கோவில் - காவல்கிணறு சாலை முடிவுற்று தற்போது கட்டண விபரங்களும் அறி விக்கப்பட்டிருக்கின்றன .

    ஏற்கனவே நாங்கு நேரியில் டோல்கேட் இருக்கும் பட்சத்தில் 45 கிலோமீட்டருக்குள் மற்றொரு டோல்கேட் என்பது வாகன ஓட்டிகளை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும். மேலும் டோல்கேட் அமைந்துள்ள பகுதியை கடந்து நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த வாகனங்கள் அதிக அளவில் செல்லும்.

    இந்த வாகனங்களுக்கு எல்லாம் கட்டணம் என்பது பெரும் அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே உடனடியாக இந்த டோல்கேட்டை திரும்ப பெற வேண்டும் . இது தொடர்பாக ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைவரிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. குமரி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணிகளை பொறுத்தவரை தற்போது ஒன்றிய அரசு மிகவும் மந்தமான நிலையில் நடந்து கொள்கிறது .

    காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி இங்கு வலுவாக இருப்பதால் பணிகள் முடிந்தால் அந்த நற்பெயர் தங்களுக்கு கிடைக்காதோ என்ற வருத்தத்தில் பணி களை கிடப்பில் போட்டு உள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக டோல்கேட் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு செய்தார்.

    • வாகனங்கள் சென்று வர கட்டணம் நிர்ணயம்
    • இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் 4 வழிச் சாலை திட்ட பணிக்காக காரோடு முதல் வில்லுக்குறி வரை 27 கி.மீட்டர் தூரம், வில்லுக்குறி முதல் நாகர்கோவில்அப்டா மார்க்கெட் வரை 14 கி.மீ. தூரம், அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு பெருங்குடி வரை 16 கி.மீட்டர் தூரம், அப்டா மார்க்கெட் முதல் முருகன்குன்றம் வரையில் 12 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்காக நிதியும் ஒதுக்கப்பட்டு 2016 ஜனவரியில் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரையிலான பணிகளை 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணிகள் முடிய மேலும் 4 ஆண்டுகள் ஆகிவிட்டன.

    இதற்கிடையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுள்ளது. இந்த டோல்கேட் வருகிற 24-ந் தேதி முதல் செயல்பட தொடங்கும் என்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட அமலாக்க பிரிவு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்த டோல்கேட் வழியாக செல்லும் வாகனங்களுக்கான கட்டணமும் வெளியிடப்பட்டு உள்ளது.

    முன்பு 47 பி என இருந்த நாகர்கோவில்-காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலை, திருத்தப்பட்டு இனி தேசிய நெடுஞ்சாலை எண் 944 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    • பிரின்ஸ் எம்.எல்.ஏ. அறிவிப்பு
    • அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் ஆகி யோர் குளச்சலில் செய்தி யாளர்களிடம் கூறியதா வது:-

    கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா மையத்தை தன்னகத்தே கொண்டு உள்ளது. இது குமரி மாவட்டத்திற்கு கிடைத்த மாபெரும் சிறப்பு. கன்னியாகுமரி சுற்றுலா மையத்திற்கு வரும் பயணிகள் நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்கா விளை வழியாக கேரள மாநி லத்திற்கும் செல்வது வழக்கம்.தவிர நெல்லை மாவட்ட மக்களும் திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்ல நாகர்கோவில், களியக்காவிளை வழித் தடங்களையே பயன்படுத்து கின்றனர்.

    தினமும் சுற்றுலா பயணி களுக்கும், வெளிநாடு பயணிகளுக்கும் இந்த வழித் தடங்கள் பெரிதும் பயன்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது இந்த தேசிய நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்பட்டது.இதனால் அனைத்து தரப் பினர்களின் போக்குவரத் திற்கும் சாலை எளிதாக இருந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிக்கப்படவில்லை.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் முற்றுகையிட்டதால் சாலையில் 'பேட்ச்' ஒர்க் செய்யப்பட்டது. 'பேட்ச்' ஒர்க்கும் முழுமையாக செய்யாததால் சாலையில் மீண்டும் பள்ளம் ஏற்பட் டுள்ளது. சாலை சரியில்லா ததால் குமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவ னந்தபுரம் விமான நிலையம் செல்லும் விமான பயணிகள் குறித்த நேரத்திற்குள் விமான நிலையம் சென்றடைய முடியாமல் அதிருப்தியுடன் செல்கின்றனர்.

    சாலையை செப்பனிடும் பணிக்கு ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர் சாலைப்பணி முடிந்து 1 வருடத்திற்குள் சேதம டைந்தால் ஒப்பந்தக்காரரே பொறுப்பு ஆவார் என்பது ஓப்பந்த சரத்தில் உள்ளது.ஆனால் இந்த சரத்தை ஓப்பந்தக்காரர்கள் மீறி உள்ளனர். அதிகாரிகளும் இதனை கண்டு கொள்ளா மல் உள்ளனர்.

    குமரி மாவட்டத் தில் 4 வழிச்சாலை பணியும் கிடப்பில் போடப்பட்டுள் ளது. 4 வழிச்சாலை பணி யை பா.ஜ.க்காரர்களே தடுத்து நிறுத்தி உள்ளனர்.நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை ஒவ் வொரு கிராமத்திற்கும் பாரபட்சமாக வழங்கப் பட்டுள்ளது. கேரள மாநிலம் போன்று அனைவருக்கும் பாரபட்மின்றி இழப்பீடு தொகை வழங்க வேண்டும்.நிலம் அளித்தவர்க்கு அரசு வேலையும் வழங்க வேண் டும்.

    எனவே தேசிய நெடுஞ் சாலையை உடனே செப்ப னிடவும், கிடப்பில் போட் டுள்ள 4 வழிச்சாலை பணிகளையும் விரைந்து முடித்திடவும் வலியுறுத்தி வருகிற 1-ந்தேதி காங்கிரஸ் சார்பில் தோட்டியோடு சந்திப்பில் மாபெரும் மறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட துணைத்தலைவர் முனாப், செயலாளர் ஜெய ராஜ், நகர தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வா கிகள் உடனிருந்தனர்.

    • மாநகர தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு
    • நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயண யாத்திரை தொடங்குகிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர தி.மு.க. நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் மாநகர மாவட்ட பிரதிநிதிகள், வட்டச் செய லாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ஒழுகினசேரியில் உள்ள குமரி கிழக்கு தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    அவை தலைவர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். மாநகர துணை செயலாளர்கள் வேல்முரு கன், ராஜன், மாநகர பொரு ளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில மாநகர செயலா ளர் வக்கீல் ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    கூட்டத்தில் நாளை (7-ந் தேதி) கன்னியாகுமரியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நடை பயணம் யாத்திரை தொடங்குகிறார்.

    நடை பயணம் யாத்திரையை தொடங்கி வைக்க வருகை தரும் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு மாவட்ட ெபாறுப்பாளர் மேயர் மகேஷ் ஆலோசனையின் பேரில் மாநகர தி.மு.க. சார்பாக மாவட்ட எல்லை யான காவல் கிணறு சந்திப் பில் 3 ஆயிரம் ெதாண்டர் களுடன் வரவேற்பு அளிப் பது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன.

    கூட்டத்தில் பகுதி செயலாளர் துரை, ஜீவா மற்றும் 52 வட்டச் செயலா ளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×