என் மலர்
நீங்கள் தேடியது "தூக்கில் தொங்கி தற்கொலை"
- அழுகிய நிலையில் பிணம் கண்டெடுப்பு
- போலீசார் விசாரணை
வேலூர்:
அணைக்கட்டு தாலுகா, டி.சி.குப்பம் அடுத்த கரடிகுடி காட்டுப்பகுதியில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரி யாத நபர் தூக்கில் தொங்கினார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால் இறந்து பல நாட்களாகி இருக்கும் என தெரிகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினர் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோபிநாதன், தனிப் பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந் தசாமி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த சேர் பாடி கூட்ரோடு கல்லுட்டை பகுதியில் ஆள் இல்லாத வீட்டின் முன்பு, அடையா ளம் தெரியாத 52 வயது மதிக்கத்தக்க நபர் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
உடல் அருகே மது பாட் டில்கள் கிடந்தன. இதைக்கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்து, வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, விஏஓ சரளா வேப்பங்குப்பம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் அன் பழகன், ஏட்டு முத்துகுமரன் மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
- பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
பரமத்தி வேலூர்:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் பகுதியைச் சேர்ந்த வர் ராஜாங்கம் (வயது 55). இவரது மனைவி உமாதேவி( 50 ). இவர் அப்பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது தாயார் வீடான நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூருக்கு வந்து கடந்த 6 நாட்களாக தாய் வீட்டில் தங்கியிருந்தார்.
நேற்று மாலை கழிவறைக்கு சென்ற உமாதேவி கழிவறையில் உள்ள கொக்கியில் சேலையால் தூக்கு போட்டுக் கொண்டார் . வெகுநேரமாகியும் வராதால் அவரது பெற்றோர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தபோது கழிவறை தாழிட்டு இருந்தது. அப்போது கழிவறையின் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உமாதேவி இறந்து விட்டதாக தெரிவித்த னர். அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீசில் புகார் செய்தனர்.புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.