என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "படித்துறை"
- காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.
- திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
தஞ்சாவூர்:
காவிரி டெல்டா மாவட்டம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. காவிரி நீர் கல்லணைக்கு வந்து அடைந்தது.
கல்லணையில் இருந்து நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. காவிரி நீர் திருக்காட்டுப்பள்ளி, சாத்தனூர், மருவூர், வடுககுடி, தில்லைஸ்தானம் ஆகிய பகுதிகளை கடந்து திருவையாறுக்கு வந்தது.
திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை காவிரி ஆற்றில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்து காவிரி நீரில் பாலைஊற்றி தீபாராதனை காண்பித்தனர். பின்னர் மலர் தூவியும், தேவார பாடலை பாடியும் காவிரி நீரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்
- கொடிப்பங்கு கிராமத்தில் புதிய படித்துறையை கட்டியுள்ளனர்.
- 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர்.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருவாடானை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கொடிப்பங்கு கிராமமானது, கொடிப் பங்கு, நாரேந்தல், கருத்தப்பத்தை, செங்காலன் வயல், சவேரியார்பட்டினம், மண்மலக்கரை, ராஜாக்க வயல், சிறுதவயல், அகரவயல், வேளாங்குடி, விளக்கனேந்தல் ஆகிய 11 குக்கிராமங்கள் உள்ளன.
இந்த பகுதி மக்களின் தேவைக்கு போதிய நிதி வழங்குமாறு பஞ்சாயத்து தலைவர் சாந்தி ரவிச்சந்திரன் அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் தற்போதைய நிதியைக் கொண்டு மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்றும் வகையில், 15-வது நிதிக்குழு மானியத்தில் இரட்டை ஊரணியில் 2 படித்துறை கட்டியுள்ளனர். மழை காலங்களில் இந்த ஊரணிக்குள் பொதுமக்கள் இறங்கும் ேபாது தவறி விழுந்த நிலையில் இதுவரை படித்துறை இல்லாத இந்த ஊரணிக்கு 2 படித்துறை கட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
- கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய முருகன் கோவில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் திருப்பணிகள் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.
இந்த கோவில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதுவரை இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்த அளவில் இருந்து வந்தது. ஆனால் கோவிலின் குடமுழுக்கு பணிகள் முடிந்த பின் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
மேலும் இக்கோவிலின் சிறப்பே பவானி ஆற்றங்கரை யில் இருப்பது தான். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலை ஏற்படும்.
எனவே கோவிலை ஒட்டி பவானி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட படித்துறை அமைப்பதுடன் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா மற்றும் வார்டு உறுப்பினர் விஜயகாண்டிபன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் பகுதியில் படித்துறை கட்டுவதற்கு நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் தெரிவிக்கப்படும் என பொறியாளர் சோமசுந்தரம் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்