search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில்   பவானி ஆற்றங்கரையில்  படித்துறை அமைக்கப்படுமா?
    X

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் பவானி ஆற்றங்கரையில் படித்துறை அமைக்கப்படுமா?

    • சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
    • கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடந்தது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய முருகன் கோவில் சுமார் 80 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் திருப்பணிகள் 38 ஆண்டுகளுக்கு பின் தற்போது முடிவடைந்து நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கோவில் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது. இதுவரை இக்கோவிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்த அளவில் இருந்து வந்தது. ஆனால் கோவிலின் குடமுழுக்கு பணிகள் முடிந்த பின் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

    மேலும் இக்கோவிலின் சிறப்பே பவானி ஆற்றங்கரை யில் இருப்பது தான். இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராடுவது வழக்கம். ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலை ஏற்படும்.

    எனவே கோவிலை ஒட்டி பவானி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட படித்துறை அமைப்பதுடன் இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டுமென பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இதையடுத்து மேட்டுப்பாளையம் நகராட்சி பொறியாளர் சோமசுந்தரம், உதவி பொறியாளர் அனிதா மற்றும் வார்டு உறுப்பினர் விஜயகாண்டிபன், ஒப்பந்ததாரர் செல்வராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கோயில் பகுதியில் படித்துறை கட்டுவதற்கு நகராட்சி தலைவர், ஆணையாளரிடம் தெரிவிக்கப்படும் என பொறியாளர் சோமசுந்தரம் கூறினார்.

    Next Story
    ×