என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறைவாசிகள்"
- ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
- 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை:
மதுரை மத்திய சிறையில் 1400-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை சிறைவாசிகள் இருந்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் தாங்கள் படிக்க விரும்பும் படிப்புகளை தொடர்வதற்காக சிறை நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகிறது.
குறிப்பாக எட்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை கல்வி கற்ப தற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அவ்வப்போது அவர்களுக்கு தேவையான சிறப்பு வகுப்புகள் ஆசிரியர்கள் மூலமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் ஏராளமான சிறைவாசிகள் பொதுத்தேர்வுகளை எழுதி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த ஆண்டிற்கான 12-ம் வகுப்பு பொதுத்தேர்வினை மதுரை மத்திய சிறையில் உள்ள 15 தண்டனை சிறைவாசிகள் எழுதினர். இதில் 15 பேரும் தேர்ச்சி அடைந்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மதுரை மத்திய சிறையில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதில் சிறைவாசி ஆரோக்கிய ஜெயபிரபாகரன் என்பவர் 536 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தையும், சிறைவாசியான அலெக்ஸ் பாண்டியன் என்பவர் 532 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும், அருண்குமார் என்பவர் 506 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.
இந்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பெண்கள் மத்திய சிறையில் யாரும் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மத்திய சிறையில் தேர்வு எழுதிய 15 பேரும் தேர்ச்சி பெற்ற நிலையில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்ததை முன்னிட்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சிறைத் துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
- சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது.
சேலம்:
சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது. சேலம் மத்திய சிறையில் சிறை வாசிகளுக்கு அங்கீக ரிக்கப்பட்ட அறக்கட்டளை பயிற்சியாளர்களை கொண்டு இசைப் பயிற்சி வாத்தியங்கள் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முறையாக கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டு சிறைச்சாரல் இசைக் குழு என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறைச்சா லைக்குள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவர்கள். இதனிடையே சிறையில் ஒத்திகையில் ஈடுபட்ட சிறைச்சாரல் குழுவினர், உன் மதமா என் மதமா என்ற தத்துவ பாடலை பாடி அசத்தியுள்ளனர். சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த குழுவினர் புதிய உத்வே கத்துடன் செயல்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது.
- அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.
திருச்சி :
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை. சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் நலன் கருதி தாமதிக்காமல் உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
தமிழக சிறைகளில் இஸ்லாமிய சிறைவாசிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கபட்டு சிலர் இறந்துள்ளனர். மேலும் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எந்தவித பாரம்பட்சம் பார்க்காமல் தமிழக அரசு முன்வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.
எனவே தமிழக சிறைகளில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் கருணையின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்