என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவரங்கள்"

    • விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • தொழிலாளா்களின் பெயா், ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பணியாற்றி வரும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) (பொறுப்பு) க.செந்தில்குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- திருப்பூா் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தொழில் நிறுவனங்கள், முடிதிருத்தும் நிலையங்கள், கோழிப் பண்ணைகள், பின்னலாடை நிறுவனங்கள், அரிசி ஆலைகள், வீட்டு பராமரிப்புப் பணிகள், இதர நிறுவனங்கள், கடைகளில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளா்கள் குறித்த விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேலையளிப்பாா், நிறுவன உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வெளிமாநிலத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்கள், வேலையளிப்பவா்கள் தொழிலாளா் துறையால் வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழ் அல்லது உரிமம் எண் ஆகியவற்றைக் கொண்டு இணையதளத்தில் தனியாக ஒரு பயனாளா் குறியீட்டு எண்ணை உருவாக்கி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வெளிமாநிலத் தொழிலாளா்களின் பெயா், கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி, கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் பதிவு செய்யப்படுகிறது.
    • மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் வட்டாரம் தளிக்கோட்டை பஞ்சாயத்து 2023- 24 ஆம் நிதி ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு வேளாண் துறை மூலம் இவ்வாண்டு ஒரு சிறப்பு திட்டமாக ஒவ்வொரு மண் மாதிரி தனிப்பட்ட குறிப்பு குறியீடு வழங்கப்பட்டு பெறப்பட்ட மண் மாதிரிகள் குறித்து அனைத்து விபரங்களும் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மண்மாதிரி பையில் ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் என வழங்கப்பட்டுள்ள தனிப்பட்ட குறிப்பு குறியீடு அட்டை ஸ்கேன் செய்து இடப்படுகிறது.

    இதன் மூலம் மண் பரிசோதனை செய்யும் அலுவலர்கள் இந்த தனிப்பட்ட குறிப்பு குறியீட்டினை உரிய கருவி மூலம் ஸ்கேன் செய்து விவரங்கள் மண்வள அட்டை செயலியில் நேரடியாக பதிவு செய்யப்படுகிறது.

    விவசாயிகள் தங்களுடைய செல்போன் எண்ணினை பதிவு செய்தவுடன் அவர்களுடைய மண் மாதிரிக்கான அறிக்கை மற்றும் பரிந்துரைகளை நேரடியாக அவர்களுடைய செல்போனில் பார்த்துக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் தமிழ்நாடு மண்வள செயலின் மூலம் தங்களுடைய செல்போன் எண் மற்றும் சர்வே எண்ணினை பதிவுசெய்து கடந்த வருடத்தில் வழங்கிய மண் மாதிரிகளின் அறிக்கையினையும் பார்த்துக் கொள்ளலாம்.

    எனவே இவ்வருடம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள ஆவிக்கோட்டை நெம்மேலி, கன்னியாகுறிச்சி, பெரிய கோட்டை, சொக்கநாவூர், அண்டமி மற்றும் தளிக்கோட்டை கிராம விவசாயிகள் தங்கள் மண் மாதிரிகளை வேளாண் உதவி அலுவலரிடம் தனிப்பட்ட குறிப்பு குறியீட்டுடன் வழங்கிட கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் திலகவதி தெரிவித்தார்.

    • வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கார்னரில் செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடு களினால்ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) பயிருக்கு15.11.2023 மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு 31.10.2023-ம் தேதி வரையிலும்,உளுந்து பயிருக்கு 15.11.2023 வரையும், மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.02.2024, கத்தரி மற்றும்வெங்காயம் பயிருக்கு 31.01.2024 தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடுசெய்து கொள்ளலாம்.

    மேலும், காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487- ம்,மக்கா ச்சோளத்திற்கு ரூ.296-ம், பருத்தி ரூ.484-ம், உளுந்து பயிருக்கு ரூ.207-ம், மணிலாபயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்குரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மைய ங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்தேசிய காப்பீட்டு இணைய தளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில்செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவை யானஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல்(பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம்மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும்விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவிவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கள்ளக் குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இணைந்து பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • பதிவுதாரர்களின் வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
    • பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறைமாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் பிரிக்கப்பட்டு புதியதாக 25.1.22ம் தேதி முதல் 2வது குறுக்குத் தெரு,பாலாஜி நகர் பூம்புகார் சாலை, மயிலாடுதுறை-1 என்றமுகவரியில் செயல்பட்டு வருகிறது.

    மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக எல்லைக்குட்பட்ட மயிலா டுதுறை, குத்தாலம், சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களைச் சார்ந்த நாகப்பட்டினம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லகத்தில் பதிவுசெய்துள்ள பதிவுதாரர்களி ன்வேலை வாய்ப்பு பதிவு விவரங்கள் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த பதிவுதாரர்கள் தங்கள்வே லைவாய்ப்பு அலுவலக பதிவுமாற்றம் செய்யப்பட்டுள்ளதை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் சரிபா ர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    ஏற்கனவே மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு வருகைப் புரிந்து பதிவு சரிபார்த்தவர்களை தவிர்த்து ஏனைய பதிவுதாரர்கள் அலுவலக வேலை நாட்களில் தங்களது அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், சாதிசான்றிதழ், ஆதார் அட்டை மற்றும்குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் நேரில் வருகை புரிந்து தங்களது பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.

    மேலும் அவ்வாறு சரிபார்த்துக் கொள்ளவரும்பட்சத்தில் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

    மேலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள்வழியாக நிரப்பப்படுகின்ற அரசு பணியிடங்களுக்கான முன்னுரிமைகளை பதிவு செய்துகொள்ளதமிழக அரசின் மனிதவள மேலாண்மைதுறை அரசாணையில்கு றிப்பிட்டுள்ள 20 வகையான முன்னுரி மைகளை பதிவு செய்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்உ ரிய சான்றுகளைப் பெற்று வந்துபதிவு செய்துகொள்ளலாம்.

    மேலும் சந்தேகங்களுக்கு 04364299790 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    ×