என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணா பஸ் நிலையம்"
- மழை சேதங்களையும் பார்வையிட்டார்
- சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் அண்ணா பஸ்நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் நிலையத்தில் உள்ள டெப்போ ஊழியர்களுக்கான கழிவறை மோசமான நிலையில் இருந்தது. இதை சரி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கழிவறையை டெப்போ ஊழியர்கள் பராமரிக்க வேண்டும் என்றும் மேயர் மகேஷ் கேட்டுக்கொண்டார்.
பின்னர் பஸ் நிலையத்தில் ரூ.2 கோடி செலவில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கைகள் மற்றும் தரைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவறையை பார்வையிட்டார். மழையின் காரணமாக செட்டிகுளம், சவேரியார் ஆலய சந்திப்பு பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காட்சியளித்தது. அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த மேயர் மகேஷ், அதை உடனடியாக சீரமைக்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது ஆணையாளர் ஆனந்த மோகன், பொறியாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் ரோஸிட்டா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். நாகர்கோவில் மாநகராட்சி 4-வது வார்டுக்கு உட்பட்ட பெருவிளை கிருஸ்டோபர் காலனி பகுதியில் ரோட்டோரத்தில் இருந்த மரம் ஒன்று மழையினால் முறிந்து வீட்டின் காம்பவுண்ட் சுவர் மீது சாய்ந்திருந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் மேயர் மகேஷ் அங்கு சென்று பார்வையிட்டார். உடனே மரத்தை வெட்டி அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ராஜலட்சுமி நகர் பகுதியில் சேதம் அடைந்த சாலையை சீரமைக்கவும் அவர் மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்கப்படுவார்களா?
- வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு
நாகர்கோவில் :
நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் அண்ணா பஸ் நிலையம் அமைந்துள் ளது. இந்த பஸ் நிலையத்தில் காலை, மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழியும்.
பள்ளி செல்லும் மாண வர்களும் வீட்டுக்கு செல்வ தற்காக அதிக அளவு வருவ தால் கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பஸ்களில் ஏறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு ஏறி வருகிறார்கள். இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
நேற்று மாலை பயணி ஒருவர் பஸ்சில் ஏறும்போது அவரது பாக்கெட்டில் இருந்த பணத்தை பிக்பாக் கெட் திருடர்கள் நைசாக எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். மேலும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவங்களும் நடந்த வண்ணம் உள்ளன. இதை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே அண்ணா பஸ் நிலையத்தில் பாது காப்பிற்கு போலீசார் நிய மனம் செய்யப்பட்டுள்ள னர். கூடுதலாக போலீசாரை நியமித்து பிக்பாக்கெட் திருடர்களை பிடிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. பிக்பாக்கெட் திருடர்களை கண்காணிக்கும் வகையில் அண்ணா நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலை யத்தில் சி.சி.டி.வி. கேம ராக்களை ஒருங்கிணைத்து கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டால் ஓரளவு பிக்பாக்கெட் மற்றும் திருட்டு சம்ப வங்களை தடுக்க முடியும். குடிமகன்கள் பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகமாக உள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிக்கடி பஸ் நிலையத்தில் மோதி கொண்டும் வருகிறார்கள். இதை மனதில் கொண்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உடனடி நடவடிக்கையாக பாதுகாப்பை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல் வடசேரி பஸ் நிலையத்திலும் கூடுதல் போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.
- மேயர் மகேஷ் தகவல்
- இன்று காலை திடீர் ஆய்வு
நாகர்கோவில், மார்ச்.15-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் மேயர் மகேஷ் இன்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பஸ் நிலை யத்தில் உள்ள தபால் நிலையத்தையொட்டி உள்ள பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. அந்த தண்ணீரை உடனடியாக சீரமைக்க மேயர் மகேஷ் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து கழிவறையை ஆய்வு செய்தார். அப்போது அங்கு பராமரிப்பு இன்றி இருந்தது தெரியவந்தது.
அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.பின்னர் அங்குள்ள கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். தின்பண்டங்கள் சரிவர மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு கடையில் தின்பண்டங்கள் தயார் செய்த எண்ணை திறந்த நிலையில் இருந்தது. அதை உடனடியாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் சோதனை நடத்த மேயர் மகேஷ் உத்தர விட்டார். பஸ்நிலையத்தில் குப்பைகள் கிடந்ததை உடனடியாக அகற்றவும் அறிவுறுத்தினார்.
மேலும் அந்த பகுதியில் தற்காலிக செட் அமைத்து ஒருவர் தங்கி இருந்தது தெரிய வந்தது. அந்த செட்டை உடனடியாக அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டார். சுகாதார பணியாளர்கள் அந்த செட்டை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டி ஒன்று பழுதாகி மோசமான நிலை யில் இருந்தது. அந்த குடிநீர் தொட்டியை மாற்றிவிட்டு புதிய குடிநீர் தொட்டி அமைக்க மேயர் மகேஷ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வு பணி குறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஏற்கனவே சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.பழைய இருக்கைகளை அகற்றி விட்டு புதிய இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது புதிய இரு கைகளில் பள்ளி மாணவ- மாணவிகள் பொதுமக்கள் அனைவரும் அமர வசதியாக புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
பஸ் நிலையத்தில் தற்போது கழிவறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரு சில கடைகளில் ஷட்டர்கள் இல்லாமல் தார்ப் பாய்களால் மூடப் பட்டு உள்ளது. அந்த கடைகளில் உடனடியாக ஷட்டர் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லைசென்ஸ் இல்லாமல் செயல்படும் கடைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
சி.சி.டி.வி. கேமராக்கள் முழுவதும் தற்பொழுது செயல்பாட்டில் உள்ளது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பஸ் நிலையத்தில் பொது மக்களுக்கு குடிநீர் வசதியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
பார்க்கிங் வசதி ஏற்படுத்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். எந்த இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தினால் இடையூறும் ஏற்படாது என்பதை தெரிந்து பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது ஆணை யாளர் ஆனந்த்மோகன், என்ஜினியர் பாலசுப்பிர மணியன் மண்டல தலைவர் ஜவகர் கவுன்சிலர் ரோசிட்டா ஆகியோர் உடன் இருந்தனர்.
- கண்டக்டர் எடுத்து அதிகாரியிடம் ஒப்படைத்தார்
- தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம்
நாகர்கோவில்:
கருங்கல்லில் இருந்து நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்திற்கு நேற்று மாலை அரசு பஸ் வந்தது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.
பஸ் நிலையத்திற்கு வந்ததும் பஸ்சை விட்டு இறங்கி பயணிகள் சென்றனர். அப்போது கண்டக்டர் பஸ்ஸை விட்டு இறங்கிய போது பஸ்சுக்குள் தங்க மோதிரம் ஒன்று கிடந்தது.பஸ்சில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்த கண்டக்டர் இது குறித்து அந்த பகுதியில் நின்ற பயணிகளிடம் கேட்டார்.
அப்போது தங்க மோதிரம் யாருடையது என்பது தெரியவில்லை. இதையடுத்து கண்டக்டர் போக்குவரத்து கழக அதிகாரியிடம் தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.
தங்க மோதிரத்தை தவற விட்டவர்கள் அதற்கான அடையாளங்களை கூறி தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
பஸ்ஸில் கிடந்த ஒரு பவுன் தங்க மோதிரத்தை எடுத்து ஒப்படைத்த கண்டக்டரின் நேர்மையை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
- 2 ஷிப்டுகளாக கண்காணிக்க ஏற்பாடு
- 'மாலைமலர்' செய்தி எதிரொலி
நாகர்கோவில்:
தீபாவளி பண்டிகை நெருங்குவதையடுத்து கடைவீதிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.
நாகர்கோவில் செம்மங் குடி ரோடு, மீனாட்சி புரம், வடசேரி, கலெக்டர் அலுவலக சந்திப்பு பகுதி களில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்திலும் பஸ்கள் ஏறுவதற்கு கூட்டம் அதிக மாக காணப்படுகிறது.பஸ்களில் பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஏறி வருகிறார்கள்.
கூட்ட நெரிசலை பயன்ப டுத்தி பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் தீவிர கண் காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையம் கடந்த சில நாட்களாக மூடி கிடந்தது.
தற்பொழுது கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள தால் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மாலைமலரில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் புறக்காவல் நிலை யத்தை திறக்க உத்தரவிட்டார்.
மேலும் புற காவல் நிலையத்தில் இரண்டு ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவும் அவர் உத்தர விட்டுள்ளார். ஒரு ஷிப்ட்டுக்கு 2 பெண் போலீசார், 2 ஆண் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படு கிறார்கள். தீபாவளி பண்டிகைைய யொட்டி கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் ஆயுதப்படை போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.இன்று காலை முதல் புறக்காவல் நிலையம் திறந்து செயல்பட்டது. புறக்காவல் நிலையத்தில் இருந்த போலீசார் பஸ் நிலையங்களில் உள்ள பிளாட்பாரங்களில் ரோந்து சுற்றி வந்தனர்.
பஸ் நிலையத்தில் உள்ள ஒரு சில சி.சி.டி.வி. கேமிராக்கள் மட்டுமே தற்பொழுது செயல் பட்டு வருகிறது. செயல்படா மல் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களையும் சரி செய்து கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
- மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டி ருந்த புகைப்படங்கள் உள்ளன.
- அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அரவிந்த் தெரிவித்ததாவது:-
தமிழக அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை அளிக்கும் திட்டம், மக்களை தேடி மருத்துவம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடி திட்டம், நரிக்குரவர்கள் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத் தில் கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டதை நேரில் பார்வையிட்டது. இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் - 48 திட்டம். விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை விளக்கி கண்காட்சியில் புகைப்படம் இடம் பெற்றுள்ளன.
கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம். நமக்கு நாமே திட்டம் மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்புத்திட்டம். காணி பழங்குடியினர்களுக்கு நிலஉரிமை ஆணை வழங்கியது.
மீனவர்களின் நலன் கருதி பனிக்கட்டி நிலையங்களை திறந்து வைத்தல், மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது, முதல்-அமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், புதிய வேளாண் காடு வளர்ப்புத் திட்டம், மின்சாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியின் போது காலமானவர்களின் வாரிசு தாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக அமைக்கப்பட்டி ருந்த புகைப்படங்கள் உள்ளன.
இதனை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு அனைத்துத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற்று பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்