என் மலர்
நீங்கள் தேடியது "ஊராட்சி செயலாளர்"
- ஊராட்சி செயலாளர் தற்கொலை செய்து கொண்டார்.
- வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் தாலுகா வலையபட்டியை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 43). இவருக்கு செந்தில் என்ற மனைவி யும் ஒரு மகன், மகளும் உள்ளனர். முத்துராமன் சவுடார் பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு பல நாட்க ளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்துள்ளது. இத னால் மன விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்தார். தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் உடலை கைப்பற்றி திரு மங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முத்து ராமன் தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
- ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
- சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும்
கிராமங்கள் தன்னிறைவு பெற்றதால் நாடு வளர்ச்சி அடையும் என்பது தேசப்பிதா மகாத்மா காந்தியின் கூற்று. அதன்படி கிராமங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து செல்வதில் அரசு மிகுந்த கவனம் காட்டி வருகிறது. கிராம மக்களின் குரல் எப்போதும், எந்த சூழலிலும் தடையில்லாமல் ஒலிக்க வேண்டும். அதற்காகத்தான் கிராம சபை கூட்டங்களை தமிழக அரசு தடையின்றி நடத்துகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் தெரிவித்தார்.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சி சமுதாயத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டுமென்றால் கிராமங்கள் முழுமையான வளர்ச்சியை பெற வேண்டும். இதனை மனதில் வைத்துத்தான் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம் என்றும் தெரிவித்து இருந்தார்.
ஆனால் இதற்கெல்லாம் கரும்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் விவசாயி ஒருவர், ஊராட்சி செயலாளரால் எட்டி உதைக்கும் அவலம் அரங்கேறியுள்ளது. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊராட்சி செயலாளர் நடந்துகொண்ட விதம் கிராம வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுவதாகவும், அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.
இதுபோன்ற சர்வாதிகார போக்குடன் நடந்துகொள்ளும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாய வேண்டும் என்றும், அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர், வட்டார வளர்ச்சி அதிகாரி, பொதுமக்கள் முன்னிலையில் குறைகளை சபைக்கு எடுத்துவைத்த விவசாயியை காலால் எட்டி உதைத்த ஊராட்சி செயலரை கைது செய்வதோடு மட்டுமின்றி, டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பு. இந்த கோரிக்கை வலுத்தும் வருகிறது.
- ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
- அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது.
சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சிகள் இருக்கின்ற நிலையில், ஒன்பது மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துவிட்டது.
இந்த ஊராட்சிகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், ஆயிரக்கணக்கான ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்ற ஓர் அவல நிலை நீடிக்கிறது.
ஒரு செயலாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊராட்சிகளை கவனிக்கும் நிலை உள்ளதால், ஊராட்சிகளின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அனைத்துப் பணியாளர் சங்கம் தெரிவிக்கிறது. ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்
- 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை நடைபெற உள்ளது .
நாகர்கோவில்:
பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி ஊராட்சி செயலாளர்கள் 12-ந் தேதி முதல் 3- நாள் தொடர் விடுப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
ஊராட்சி செயலாளர்கள் ஊராட்சிகளில் வரி வசூல் செய்தல், மின்விளக்குகள் பராமரித்தல் ,100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்ட பணிகள் ,முழு சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி செயலாளர்களின் பணி சுமையை குறைக்க வேண்டும் ,கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலி பணியிடங்களை அரசு தேர்வாணையம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தினை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் 12-ம் தேதி முதல் 14-ந் தேதி வரை 3- நாள் ஊதியம் இல்லா விடுப்பு போராட்டம் நடைபெற உள்ளது .
இதையடுத்து குமரி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் 3- நாள் தொடர் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்த உள்ளனர்.
இதையடுத்து அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள் போராட்டம் நடத்துவது குறித்த விடுப்பு கடிதத்தை ஊராட்சி செயலாளர்கள் சங்க குமரி மாவட்ட துணைத் தலைவர் காளியப்பன் தலைமையில் ஒன்றிய நிர்வாகி டேனியல் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீல பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.