என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமலை திருப்பதி தேவஸ்தானம்"
- இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
- விளக்கேற்றி மந்திரம் படித்தால் தோஷம் விலகும் என நம்பிக்கை.
திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரத்தை தொடர்ந்து, பக்தர்கள் தங்களின் வீடுகளில் இன்று மாலை 6 மணிக்கு விளக்கேற்றுமாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அதன்படி, பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் விளக்கேற்றி, "ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹே" என மந்திரம் படிக்கவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஏழுமலையானை வேண்டி மந்திரம் உச்சரிக்குமாறு பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விளக்கேற்றி மந்திரம் படித்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் ஏற்பட்ட தோஷம் விலகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- திருப்பதியில் நேற்று 67,916 பேர் தரிசனம் செய்தனர். 23,010 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.
- 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும்.
அப்படிப்பட்ட சூழலில் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மிக விரைவாக தீர்ந்து விடுகிறது. இதனால் திருப்பதிக்கு நேரில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசனம் போல் நேரடியாக ரூ.300 டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது
இதேபோன்று எந்தவித ஏற்பாடுகளும் செய்யாமல் நேரடியாக இலவச தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்காக ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 67,916 பேர் தரிசனம் செய்தனர். 23,010 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.93 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 8 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
- குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
- வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் மாதம் தரிசனம் செய்வதற்கான டிக்கெட் ஆன்லைனில் வெளியிடும் தேதிகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
அதன்படி வருகிற ஜூலை 18-ந்தேதி காலை 10 மணி முதல் 20-ந்தேதி காலை 10 மணி வரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை உள்ளிட்ட சேவைகளுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம்.
அன்று மதியம் 12 மணிக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஜூலை 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
அக்டோபர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான இலவச டோக்கன்கள் ஜூலை 23-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் . ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை செலுத்தி பெறும் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர்.
- முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ, ராஜேந்திரபாலாஜி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- திருவிழா கடந்த 3-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பவித்ர உற்சவ திருவிழா கடந்த 3-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 3-ம் நாளான நேற்று காலையில் யாகசாலை பூஜை, உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் போன்றவை நடைபெற்றது. பின்னர் உற்சவர்களுக்கு அணிவிப்பதற்கான பவித்ர நூல் மாலைகளை திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள் கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி கோவில் மூலஸ்தானத்தின் வெளிபிரகாரத்தைச் சுற்றி திருப்பதி குடை பிடித்து படி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதன் பிறகு வெங்கடேச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருக்கு பவித்ர மாலை அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது.
பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2023 -ம் ஆண்டுக்கான மாத காலண்டர் மற்றும் டைரி வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., ராஜேந்திர பாலாஜி, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி, துணைத்தலைவர் பிரபாகர் ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர் மோகன் ராவ், அனந்தகுமார் ரெட்டி, கார்த்திகேயன், பிரத்திவி, ராஜேந்திரகுமார், யுவராஜ்,
துணைசெயல் அலுவலர் விஜயகுமார், கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆய்வாளர் சாய் கிருஷ்ணா, குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா,
அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜெஸிம், தென் தாமரை குளம் பேரூர் அ.தி.மு.க. செயலாளர் தாமரைதினேஷ், ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலை 6. 30 மணிக்கு யாகசாலை பூஜை நடைபெற்றது.
4-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு யாகசாலை பூஜை, காலை 10.30 மணிக்கு உற்சவர்களுக்கு ஸ்னப்பன திருமஞ்சனம் சாத்துதல், அபிஷேகம் ஆகியவை நடைபெறுள்ளது. மாலை 5.30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் வெங்கடாஜலபதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி நான்குமாடவீதிகளில் பவனி வரும் விமான பிரகார உற்சவம் நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8.30 மணிக்கு பூர்ணா குதி மற்றும் விசேஷ பூஜையைத் தொடர்ந்து பகுமானம் அர்ச்சனை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடைபெறுகிறது. பவித்ர உற்சவத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வைகானசா ஆகம ஆலோசகர் ஸ்ரீ விஷ்ணு பட்டாச்சார்யலு தலைமையில் 7 அர்ச்சகர்கள் நடத்திவருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான உள்ளூர் மற்றும் தகவல் ஆலோசனை மைய தலைவர் சேகர் ரெட்டி தலைமையில் தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா ஆகியோர் செய்து வருகின்றனர்.
- சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக தகவல் பரவியது.
- சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
திருப்பதி திருமலை அன்னமய்யா பவனில் தொலைபேசி மூலம் பக்தர்களிடம், தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி (பொறுப்பு) தர்மா ரெட்டி குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த தசரத ராமய்யா எனும் பக்தர் பேசும்போது, 'திருப்பதியில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் எல்லாம் மிக நன்றாக இருக்கின்றன. ஆனால், லட்டு பிரசாதத்தில் மட்டும் இனிப்பு சற்று அதிகமாக உள்ளது. லட்டு பிரசாதத்தை என் போன்ற சர்க்கரை நோயாளிகள் உண்ண முடியாது. ஆதலால், சர்க்கரை நோயாளிகள் கூட லட்டு பிரசாதத்தை சாப்பிடும் பாக்கியத்தை தேவஸ்தானம் ஏற்படுத்தி கொடுத்தால் நன்றாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.
அதற்கு அதிகாரி தர்மா ரெட்டி பதிலளிக்கையில், சர்க்கரை நோயாளிகளுக்கென தனியாக லட்டு தயாரித்து வழங்குவது தொடர்பாக ஆலோசித்து அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றார். இந்த தகவலை வைத்து, சர்க்கரை நோயாளிகளுக்காக இனிப்பு இல்லாத லட்டு தயாரித்து வழங்கப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.
ஆனால் இந்த தகவல் வதந்தி என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. திருப்தி லட்டு காப்புரிமை பெறப்பட்டது என்றும், சர்க்கரை சேர்க்காத லட்டு வழங்கினால் காப்புரிமையில் கேள்விக்குறியாகிவிடும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் நீரிழிவு நோயாளிகளின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சர்க்கரை இல்லாத லட்டு வழங்கினால், பின்னர் வேறு ஏதாவது காரணத்தை வைத்து வேறு சில பக்தர்கள் வேறு சில பிரசாதங்களை கேட்பார்கள் என்றும் தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்