என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கரை"
- 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.
- பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் ஆனங்கூர் ஊராட்சி. ஆனங்கூரிலிருந்து பாகம்பாளையம் செல்லும் தார்சாலை அருகே கடந்த 2006-2007-ம் நிதி ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் செலவில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் குளம் அமைக்கப்பட்டது.
பாகம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் உபரி நீர், ஓடை வழியாக சென்று இந்த குளத்தில் கலக்கிறது. இந்நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக இந்த குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி வருகிறது.
குளம் நிரம்பி இருப்பதன் காரணமாக, அந்த சுற்று வட்டார பகுதியில் உள்ள கிணறுகளில் ஊற்று ஏற்பட்டு எப்போதும் தண்ணீர் இருப்பதால் விவ சாயிகள் முப்போக விவ சாயம் செய்து வருகின்றனர்.
அதேபோல் நாமக்கல் மாவட்ட கலெக்டராக பணியாற்றிய சகாயம், இந்த குளத்தை பயிற்சி நீச்சல் குளமாக அறிவித்து இந்த குளத்தில் நீச்சல் பயிற்சி கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குளத்திற்கு பக்கத்து தோட்டக்காரரான அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார சுப்பிரமணியன் (வயது 40) என்பவர், ஊராட்சி நிர்வாகத்திற்கு தெரியாமல் பொக்லைன் எந்திரத்தை வரவழைத்து, குளம் கட்டுப்பட்டுள்ள இடது கரையை சேதப்படுத்தி உள்ளார்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜூக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், குளத்தின் இடது கரையை உடைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திர ஓட்டுனரை எச்சரித்து தடுத்து நிறுத்தினார்.
பின்னர் இது குறித்து ஊராட்சி தலைவர் மோகன்ராஜ் ஜேடர்பாளை யம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்துறையினர் மீட்டனர்
- கப்பலில் அடிபட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் நேற்று மாலை ராட்சத கடல் ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர் சிவகுமார், வன காவலர் ஜோயல்ஆகியோர் தலைமையில் வனத்துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த அந்த ராட்சத கடல் ஆமையை மீட்டனர்.
அந்த கடல் ஆமை சுமார் 50 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அந்த ஆமையின் மேல் பகுதியில்உள்ள ஓடு கருப்பு நிறத்திலும் அடிப்பகுதி இளம் மஞ்சள் நிறத்திலும் காணப்பட்டது. கப்பலில் அடிபட்டு அந்த ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கிஇருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர்.
- ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
- வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்
கன்னியாகுமரி:
குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.
அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.
அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.
நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
- சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் கடந்த 2000-ம் ஆண்டு 133 அடி உயர திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை கடலின் நடுவே நிறுவப்பட்டுள்ளதால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இதன்படி உப்புக் காற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் சிலை முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.
இதன் மூலம் சிலை உப்புக் காற்றினால் சிலை சேதமடையாமல் நீண்ட காலம் நீடித்து நிற்கும். அதன்படி கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு சுமார் 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தினமும் இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிலையில் உள்ள உப்புத் தன்மையை அகற்றுவதற்காக தற்போது சிலையை சுற்றிலும் காகிதகூழ் ஓட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சிலையின் மீது ஒட்டப்பட்ட காகிதத்தை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். சிலையில் ஒட்டப்படும் காகிதகூழ் பி.எச். வேல்யூ 7 என்ற அளவில் இருந்தால், அதன் பின்னர் ஜெர்மனியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதகூழ் மழையில் நனைந்து தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன. இதனால் லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மழை குறைந்த பின்னர் மீண்டும் காகிதகூழ் ஒட்டப்பட்டு அதன் பின்னர்தான் பராமரிப்பு பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 6-ந்தேதி முடிய வேண்டிய சிலை பராமரிப்பு பணி மேலும் ஒருமாத காலம் தாமதமாகலாம் என்று சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரி கள் தெரிவித்தனர். இதற்கிடையே கன்னியாகுமரியில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் தொடங்கியுள்ளதால் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் கடந்த 5 மாதங்களாக திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட மேலும் ஒரு மாதம் தாமதமாகலாம் என்று தெரிய வருகிறது.
- பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
- பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடந்த 2 நாட்களாக காற்று பலமாக வீசி வருகிறது.
பலத்த காற்றின் காரணமாக கடலில் உள் பகுதியில் கடும் சீற்றமாக காணப்படுகிறது.
கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் 2 நாளாக மீன் பிடிக்க செல்லவில்லை .
ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை ஆறுகாட்டுதுறையில் இருந்து 20-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளில்மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக அவசர அவசரமாக கரைக்கு திரும்பினர்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்