என் மலர்
நீங்கள் தேடியது "பொதுமக்கள் பீதி"
- குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.
- கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ளனர்.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் குமுளி அருகே முக்காலேகர் பகுதியில் புலியின் கால்தடங்கள் தென்பட்டதால் பொது மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்து வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கால் தடங்களை ஆய்வு செய்தனர். மேலும் அப்பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தி புலி நடமாட்டத்தை கண்கா ணிக்க முடிவு செய்துள்ள னர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே தென்பட்ட புலி கால்தட ங்களின் அடையாளங்களும் சேகரிக்கப்பட்டுள்ளன. முக்காலேகர் பகுதி அதிக குடியிருப்புகளை கொண்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சமடைந்துள்ளனர்.
இப்பிரச்சினைக்கு வனத்துறையினர் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அடிமாலி நகரில் இருந்து சில கி.மீ தொலைவில் புலி நடமாட்டம் இருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தற்போது இங்கு உலாவி வரும் புலியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
- 2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் கேர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன். இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியல் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கேர்மாளம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சிறுத்தை கால் தடம் பதிவானதை கண்டு பிடித்தனர். இதையடுத்து சிறுத்தை தான் 11 ஆடுகளை கடித்து கொன்றது உறுதியானது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு 11 மணி அளவில் ராஜன் தோட்டத்திற்கு மீண்டும் சிறுத்தை வந்துள்ளது. அங்கு தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த கன்று குட்டியை சிறுத்தை கடித்துள்ளது. மாடுகளின் அலறல் சத்தம் கேட்டு ராஜன் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் சிறுத்தை அங்கிருந்து ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விட்டது. மீண்டும் சிறுத்தை வந்ததை கண்டு ராஜன் மற்றும் அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை கடித்ததில் கன்று குட்டிக்கு காது கழுத்தில் காயம் ஏற்பட்டது.
அங்கிருக்கும் வீடுகள் தனித்தனியாக வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளதால், சிறுத்தை வனப்பகுதியை விட்டு வெளியேறி கால்நடைகளை வேட்டையாடி மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் வனப்பகுதிக்குள் சென்று மறைந்து விடுகிறது.
2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். உடனடியாக ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தையை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனையடுத்து கே2-வது முறையாக மீண்டும் சிறுத்தை ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். கேர்மாளம் வனத்துறையினர் அந்தப்பகுதியில் முகாமிட்டு முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்துள்ளனர்.
- குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது.
- சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது.
அருவங்காடு:
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் மலைஅடிவார பகுதியில் ஒரு சிறுத்தை கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து வருகிறது. இந்த நிலையில் அது திடீரென எடப்பள்ளி இந்திரா நகர் குடியிருப்பு பகுதிக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற பூனையை துரத்தி சென்றது. ஆனால் பூனை தப்பிவிட்டது. தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை கவ்விக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்று விட்டது. இந்த காட்சிகள் அந்த வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே இந்த பகுதிக்கு 3 முறை சிறுத்தை வந்து சென்று விட்டது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் பந்தலூர் பகுதியில் சிறுத்தை தாக்கி ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுத்தை இந்த பகுதியில் நடமாடி வருகிறது. எனவே எடப்பள்ளி இந்திரா நகர் பகுதியில் சுற்றி திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பழனி நகர் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
- போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.
பழனி:
கோவில் நகரான பழனியில் அடிக்கடி மின்தடை என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையினால் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
பஸ் நிலையம் முதல் அடிவாரம் வரை நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் அந்த பகுதியில் மக்கள் நடமாடவே அச்சமடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெயின் ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் கடைகளை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது போன்ற கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சமடைந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வரும் போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.
எனவே நகரில் ஏற்படும் மின் தடையை தடுக்க வேண்டும் எனவும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்