search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துன்புறுத்தல்"

    • போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர்.
    • எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர்

    தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள சாத்நகர்[Shadnagar] காவல்நிலையத்தில் திருட்டு வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துவரப்பட்ட தலித் பெண் அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தங்கம் திருடுபோன வழக்கில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை சந்தகேத்தில் அடிப்படையில் அழைத்து வந்த போலீசார், அவர்களது மகன் முன்னிலையிலேயே இந்த வெறிச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில் சம்பந்தப்பட்ட போலீசாரை விசாரிக்க ACP உத்தரவிட்டுள்ளார்.

    பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலில் அவர்கள் எனது கணவனைப் பிடித்து வந்து அடித்தனர். அதன்பின் அவரை வெளியில் விட்டுவிட்டு என்னைப் பிடித்து வந்தனர். போலீசார் அவர்களின் முன்னிலையில் எனது சேலையை கழற்றிவிட்டு சார்ட்ஸ் அணியும்படி கட்டாயப்படுத்தினர். எனது கை, கால்களை கட்டிவைத்து, என்னை தாக்கத் தொடங்கினர்.

    எனது தலைமுடியை ஒரு போலீஸ் அதிகாரி பிடித்துக்கொள்ள, மற்ற இரு போலீசார் எனது இரண்டு கால்கள் மீதும் கட்டையை வைத்து தாக்கினர். செய்யாத குற்றத்திற்காக என்னை அடிக்காதீர்கள் என்று நான் அவர்களிடம் கெஞ்சினேன். திருடுவதற்கு பதிலாக நான் பிச்சையே எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர்கள் எனது  காலை  உடைந்தனர்.

    எனது கால் உடைந்துவிட்டது என்று வலியால் கத்தியபடி அவர்களிடம் கூறியும் அதை அவர்கள் நம்பவில்லை. அந்த நிலையில் என்னை எழுந்து நடக்கச் சொன்ன அவர்கள், அப்படி செய்யாவிட்டால் எனது கால்களை நிரந்தரமாக செயலிழக்கும்படி உடைப்போம் என்று மிரட்டியதாக தெரிவித்தார்.

    திருட்டு வழக்கில்  எப்.ஐ.ஆர் பதியாமலேயே சந்தேகத்தின் பேரில் பெண்ணை அழைத்துவந்து சட்டவிரோதமாக அடித்துத் துன்புறுத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • குழந்தைகளில் ஒருவர் டிராவிஸால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அக்குழந்தை இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.
    • எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது.

    அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், பெற்ற குழந்தைகளையே சித்ரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

    அக்குழந்தைகள் கடுமையாக தாக்கப்பட்டு, உணவளிக்கப்படாமல், நாய் கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

    வேலி வியூ பவுல்வர்டு மற்றும் ஃபிளமிங்கோ சாலைக்கு அருகிலுள்ள ஒரு மருந்துக்கடையில் இருந்து அமண்டா ஸ்டாம்பர் அவசர உதவி எண்ணான 911ஐ அழைத்திருக்கிறார். போலீசார் அங்கு சென்று, பல நாய்களுடன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த குழந்தைகளை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அதன் பின்னர் நடந்த விசாரணையில், பெற்றோரின் குற்றம் தெரிய வந்ததால், 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 7 குழந்தைகளுக்கு பெற்றோரான இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    குழந்தைகளில் ஒருவர் தந்தையால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டதால், அவர் இறந்துவிட்டதாக டிராவிஸ் நினைத்திருக்கிறார்.

    கூண்டிற்குள் இருந்த 2 குழந்தைகளில் ஒரு குழந்தையின் கண்கள் வீங்கி மூடப்பட்டு இருந்தது. அக்குழந்தை உடல் முழுவதும் காயங்களுடன் தீவிர ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

    ஃபிளமிங்கோ சாலைக்கு அருகில், ஒரு படுக்கையறை மற்றும் ஒரு குளியலறை கொண்ட ஒரு அபார்ட்மெண்டில் அத்தம்பதியினர் தங்கள் 7 குழந்தைகளுடன் வசித்து வந்தனர்.

    முன்கூட்டியே காவல்துறையை ஏன் அழைக்கவில்லை? என போலீசார் கேட்டனர். இது குறித்து காவல்துறையிடம் அமண்டா தெரிவித்திருப்பதாவது:

    "நானும் அவரால் பாதிக்கப்பட்டேன். கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு எனக்கும், எனது 6 வளர்ப்பு பிள்ளைகளுக்கும் எதிரான உடல் ரீதியான துன்புறுத்தல் அதிகரித்தது. எனது உயிருக்காகவும் எனது மற்ற குழந்தைகள் மற்றும் எனது குடும்பத்திற்காகவும் நான் பயந்ததனால் முன்னதாகவே காவல்துறையை நான் அழைக்கவில்லை. என் கணவர், பெல்டாலும், கயிறுகளாலும் மற்றும் கனம் வாய்ந்த பாத்திரங்களாலும் குழந்தைகளை அடிப்பார்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பின்றி உள்ளோம்.

    நாகப்பட்டினம்:

    நாகை திருக்கண்ணப்புரம் அருகே விசலுார் ராராத்திமங்கலம் புதுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ்.

    இவரது மனைவி உமா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் உமா மற்றும் அவரின் குழந்தைகளுக்கு எந்தவித பொருளாதார உதவியும் செய்யாமல், அந்த பெண் வீட்டிலேயே ரமேஷ் வசித்து வந்துள்ளார்.

    மேலும் அடித்து துன்புறுத்துகிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது உமாவை தாக்கி உள்ளார்.

    இதுகுறித்து நாகை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உமா புகார் அளித்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக உமா தனது பிள்ளைகளுடன் வந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    நானும் எனது குழந்தைகளும் பாதுகாப்பு இன்றி உள்ளோம்.

    எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×