என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தீ தடுப்பு"
- தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
சென்னிமலை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் உத்தரவின்படி சென்னிமலையில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
சென்னிமலை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், துணைத்தலைவர் கவுந்தர்ராஜன், செயல் அலுவலர் ஜெயராமன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தீயை அணைக்கும் வழிமுறைகளை தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார்.
காங்கயம்:
காங்கயம்-கோவை சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் காங்கயம் தீயணைப்பு துறையினர் சார்பில் தீ தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் மாணவ-மாணவிகளுக்கு தீ தடுப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்கும் வழிமுறைகளையும் தீயணைப்பு நிலைய அலுவலர் விரிவாக விளக்கி கூறினார். மேலும் தீ அணைக்கும் வழிமுறைகள் பற்றி தீ அணைக்கும் கருவிகள் வைத்து அனைவருக்கும் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் தனியார் கல்லூரி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
- கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர்.
திருப்பூர்:
கோவில் வளாகங்களில் தீ விபத்து ஏற்படுவதை தடுப்பது குறித்தும், தீயை விரைவாக அணைப்பது தொடர்பாகவும், செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் ஸ்ரீவீரராகவ ப்பெருமாள் கோவில் வளாகத்தில், தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான குழுவினர், தீ விபத்து ஏற்படுவது குறித்தும், விரைவாக செயல்பட்டு தீயை அணைப்பது தொடர்பாகவும்; மழை வெள்ளத்தில் இருந்து, உயிர்களை பாதுகாப்பது குறித்தும் பயிற்சி அளித்தனர்.
தொடர்ந்து, கோவில் பணியாளர்களின் சந்தேக ங்களுக்கும் விளக்கமளித்தனர். செயல் அலுவலர் சரவணபவன், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
- தீ தடுப்பு கருவிகள் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
- அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம். கமுதி வட்டம், அபிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள், அரசு உயர்நிலை மேல்நிலைபள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன.
பள்ளிகளில் தீ தடுப்பு கருவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், முதலுதவி சிகிச்சைக்கு தேவையான மருந்து வசதிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வசதிகள் பள்ளிகளில் உள்ளதா? என்பதை ஆண்டு தோறும் கல்வித் துறை அலுவலர்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அபிராமம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் சில பள்ளிகளிலும் சில தனியார் பள்ளிகளிலும் தீ தடுப்பு கருவிகள் மற்றும் முதலுதவி உபகரணங்கள் இல்லை என்று பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சில பள்ளிகளில் காலாவ தியான தீ தடுப்பு சிலிண்டர்கள் உள்ளன. இதனால் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. வருகிற ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் இங்கு முடங்கியுள்ள பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகளை விடுமுறை நாட்களில் பூர்த்தி செய்ய கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
- என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.
இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.
- விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
- இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.
திருப்பூர்:
தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை குறித்த செயல்முறை விளக்க பயிற்சி அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில் மழை காலங்கள், கட்டட இடிபாடுகள், விபத்து உள்ளிட்ட இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவா்களை எவ்வாறு மீட்பது, முதலுதவி சிகிச்சை அளிப்பது, வெள்ளக்காலங்களில் மின்சாதன பொருட்களை கையாளக் கூடாது, வீடு மற்றும் நிறுவனங்களில் எரிவாயு கசிவு ஏற்படும்போது செய்ய வேண்டியவை, விபத்து தடுப்பு முறைகள் உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
மேலும், பேரிடா் மேலாண்மை குறித்த விழிப்புணா்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.இப்பயிற்சியை நிலை அலுவலா் பொன்னுசாமி, தீயணைப்பு வீரா்கள் ஒருங்கிணைத்தனா்.
- பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- இதில் ஒரு ஊழியர் அங்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தீயை அணைத்தார்.
பெருந்துறை:
பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு தீ விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு பெருந்துறை தீயணைப்புத்துறையினர் பெருந்துறை தாசில்தார் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு அவற்றை அணைக்க வேண்டும் என்பது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் ஒரு ஊழியர் அங்கு செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட தீயை அணைத்தார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெருந்துறை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீன்தரன் செய்திருந்தார்.
- கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை பயன்படுத்தி அணைக்கும் முறை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேட்டில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியில் கோபி தீயணைப்புத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், தீ விபத்து ஏற்படும் காலங்களில் மாணவர்கள் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், எண்ணெய், பெட்ரோல் போன்ற பொருட்கள் மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள் குறித்தும், அவசர காலங்களில் மாணவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கோபி தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோபி முன்னணி தீயணைப்பு வீரர் கோபால், ராமச்சந்திர மூர்த்தி, தீயணைப்பு வீரர்கள் குருமூர்த்தி, சுரேஷ், கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் போது பெட்ரோல், மண்எண்ணை போன்றவற்றில் ஏற்படும் போது தீ விபத்துகளை தீயணைப்பு கருவியை கொண்டு தீயை அணைக்கும் முறை, தண்ணீரில் நனைக்கப்பட்ட சாக்கை பயன்படுத்தி தீ அணைக்கும் முறை, மணலை பயன் படுத்தி தீயை அணைக்கும் முறை போன்றவை செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்