என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெளியுறவுத்துறை மந்திரி"
- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒருநாள் பயணமாக இலங்கை சென்றடைந்தார்.
- புதிய அரசு அமைந்தபின் வெளியுறவுத்துறை மந்திரி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இது.
கொழும்பு:
மத்திய மந்திரி ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக இன்று இலங்கை சென்றடைந்தார். கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை அந்நாட்டு மந்திரி தாரக பாலசூரியா, கிழக்கு மாகாண கவர்னர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.
இந்நிலையில், தலைநகர் கொழும்புவில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.
அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
முன்னதாக, இலங்கை வெளியுறவு மந்திரி அலி சப்ரியையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடாகவும், காலத்தால் சோதிக்கப்பட்ட நண்பராகவும் இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் இருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்தப் பயணம் இணைப்புத் திட்டங்களுக்கும், துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் மற்ற ஒத்துழைப்புக்கும் உத்வேகம் சேர்க்கும் என தெரிவித்துள்ளது.
- வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
- ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேயுடன் பிரதமர் மோடி சந்திப்பதற்காக ஆலோசனை நடத்துகிறார். மேலும் இரு நாடுகள் இடையேயான உறவை வலுப்படுத்துவதற்காக பல்வேறு உயர்மட்ட பேச்சு வார்த்தையில் ஜெய்சங்கர் பங்கேற்கிறார்.
பிரதமர் மோடி, ஆகஸ்ட் மாதம் இலங்கையில் பயணம் மேற்கொள்வார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
- அப்போது அவர் கூறுகையில், எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
புதுடெல்லி:
பிரதமர் மோடியின் மந்திரி சபையில் அவருடன் சேர்த்து 61 பேர் பா.ஜ.க.வில் இருந்து மந்திரிகளாகி இருக்கிறார்கள். மீதமுள்ள 11 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிதாக பதவியேற்றுக்கொண்ட மந்திரிகளுக்கு நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. பிரதமர் மோடி பரிந்துரையின்பேரில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இலாகாக்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.
இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதை அடுத்து மந்திரிகள் தங்களது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இன்று காலை முதல் பணிகளை கவனிக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் வெளியுறவுத்துறை மந்திரியாக எஸ்.ஜெய்சங்கர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
ஜனநாயக நாட்டில் ஒரு அரசு தொடர்ச்சியாக 3 முறை தேர்ந்தெடுக்கப்படுவது பெரிய விஷயம். பிரதமர் மோடியின் தலைமையில் வெளியுறவுத்துறை சிறப்பாக செயல்படும் என முழுமையாக நம்புகிறேன்.
வெளியுறவுத்துறை மந்திரி பொறுப்பு மீண்டும் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு மகத்தான மரியாதையாகும். கடந்த காலத்தில் இந்த அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டது. எல்லை பிரச்சனைகளில் கவனம் செலுத்தப்படும். நெருக்கடி காலங்களில் உலக நாடுகளுக்கு உதவி செய்வதால் இந்தியா படிப்படியாக வளர்ந்து வருகிறது என தெரிவித்தார்.
- தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- இந்தியாவின் எழுச்சிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் வெற்றியும் ஒரு காரணம்.
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
இந்தியா தெற்காசிய பிராந்திய ரீதியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. உலகம் இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாகப் பார்க்கும் ஒரு சகாப்தம் இருந்தது, இன்று, யாரும் அதைச் செய்வதில்லை, இந்த பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
சார்க் அமைப்பு தற்போது செயல்படவில்லை. ஏனெனில் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்று (பாகிஸ்தான்) அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என்று நம்புகிறது. இந்த பிரச்சனையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன, ஆனால் அவர்களின் பிரச்சினையில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும்படி நாங்கள் கேட்கிறோம். நாம் ஒரு சுதந்திர சக்தியாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தியாவை உலகம் மதிக்கும்.
இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கும் போது, அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு பகுதியாகும். எனவே, நமக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்வது நமது கடமை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது.
- பாகிஸ்தான் சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது.
வதோதரா:
குஜராத் மாநிலம் வதோதரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவும் உலகமும், மோடி சகாப்தத்தில் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பாகிஸ்தானை போல வேறு எந்த நாடும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுத்ததில்லை. இந்த வகையான நடத்தை மற்றும் நடவடிக்கை ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் இத்தனை ஆண்டுகளாக என்ன செய்தது என்பதை நீங்கள் உலகிற்கு எப்படி காட்டுவீர்கள். நரேந்திர மோடி அரசு, இராஜ தந்திர நடவடிக்கையால் மற்ற நாடுகளையும் (பாகிஸ்தான்) பயங்கரவாத பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ள வைத்துள்ளது.
இந்தியா தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணராக கருதப்படுகிறது. அண்டை நாடு (பாகிஸ்தான்) சர்வதேச பயங்கரவாதத்தில் நிபுணராக அறியப்படுகிறது. பயங்கரவாதம் இப்போது கட்டுப்படுத்தப்படா விட்டால் எதிர்காலத்தில் அவர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதை உலக நாடுகளுக்கு இந்தியா வெற்றிகரமாக உணர்த்தி உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த போரில் உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
இதற்கு முன், இது வேறு எங்கோ நடப்பதால், தங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என நினைத்து, மற்ற நாடுகள் இதை புறக்கணித்தன. இன்று, பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள் (பாகிஸ்தான்) மீது அழுத்தம் உள்ளது. இது எங்களின் இராஜதந்திர நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- ரஷியாவுடனான ராணுவ தளவாட கொள்முதலில் எந்தச் சிக்கலும் இல்லை.
- இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் நிறைய கொள்முதல் செய்துள்ளது.
வாஷிங்டன்:
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாயிட் ஆஸ்டின் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோரை தனித் தனியாக சந்தித்த அவர், இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இரு நாடுகள் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு, தகவல் பகிர்வு, தளவாட ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இந்த ஆலோசனையின் போது விவாதிக்கப்பட்டது. பின்னர் ஜெய்சங்கரும், ஆண்டனி பிளிங்கனும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மத்திய மந்திரி ஜெய்சங்கர் கூறியதாவது:
உக்ரைனில் நடைபெறும் போருக்குப் பிறகு ரஷியாவிடம் இருந்த ராணுவத் தளவாடங்கள் மற்றும் உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதில் இந்தியா எந்தச் சிக்கலையும் எதிர்கொண்டதாக நான் நினைக்கவில்லை. ராணுவ உபகரணங்கள் மற்றும் தளவாடங்களை நாங்கள் எங்கிருந்து பெறுகிறோம் என்பது ஒரு பிரச்சினை அல்ல, தற்போது போர் காரணமாக ஏற்பட்ட அரசியல் பதட்டத்தால் அது ஒரு பிரச்சினையாகி இருக்கிறது.
தொழில்நுட்ப தரம், திறன், குறிப்பிட்ட உபகரணங்கள் வழங்கப்படும் விதிமுறைகள் ஆகியவற்றை நாங்கள் பார்க்கிறோம், மேலும் எங்கள் தேசிய நலனுக்காக நாங்கள் நம்பும் ஒரு தேர்வை செய்கிறோம். கடந்த 15 ஆண்டுகளில், இந்தியா அமெரிக்காவிடமிருந்து நிறைய கொள்முதல் செய்துள்ளது.
பிரான்சிடம் இருந்து நாங்கள் ரஃபேல் விமானத்தை வாங்கினோம், இஸ்ரேலிடம் இருந்தும் வாங்கி உள்ளோம். எங்களைப் பொறுத்தவரை, போட்டி நிறைந்த சூழ்நிலையில் சிறந்த ஒப்பந்தத்தை எப்படி பெறுவது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது பேசிய பிளிங்கன், பருவநிலை மாற்றத் துறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார். குவாட் மற்றும் ஜி20 அமைப்புகளில் இணைந்து பணியாற்றுவதன் மூலம் இரு நாடுகள் இடையேயான உறவுகள் உண்மையான முன்னேற்றத்தை அடைந்துள்ளன என்றம் அவர் குறிப்பிட்டார்.
- உலக அமைதி மற்றும் ஸ்திரதன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன.
- எனது முதல் பயணமாக இந்தியாவைத் தேர்ந்தெடுக்க விரும்பினேன்.
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் கொலோனா, 3 நாட்கள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நேற்று பிரதமர் மோடியை அவர் சந்தித்தார். அப்போது இருதரப்பு நலன், மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.
இந்தியாவுடனான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அனுப்பியிருந்த செய்தியை, பிரதமர் மோடியிடம் வெளியுறவுத்துறை மந்திரி கேத்தரின் எடுத்துரைத்தார். பாரிஸ் மற்றும் ஜெர்மனியில் அதிபர் மேக்ரோனுடன் நடந்த சந்திப்புகளை பிரதமர் மோடி அப்போது நினைவு கூர்ந்ததாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்த கேத்தரின், பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய ஜெய்சங்கர் இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சிக்கு இணைந்து பணியாற்ற இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி கூறியுள்ளதாவது: ஒரு மந்திரியாக இந்தியா வருவது இதுவே முதன்முறை, எனது முதல் பயணமாக இந்தியாவை தேர்வு செய்தேன். இந்தியாவின் பாதுகாப்பு கூட்டாளிகளில் பிரான்ஸ் முதலிடத்தில் இருக்கிறது. பாதுகாப்புத் துறையில், வேறு எந்த நாடும் வழங்காத அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தை இந்தியாவுடன் பகிந்து கொள்வதை நினைத்து பிரான்ஸ் பெருமை கொள்கிறது. உலக அமைதி மற்றும் ஸ்திர தன்மையையே இந்தியாவும் பிரான்சும் விரும்புகின்றன. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்