என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதாரண்யம் கடற்கரை"

    • மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.
    • புயலால் கரை தட்டியதா என விசாரணை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், இன்று காலை 8 மணியளவில் மியன்மார் நாட்டை சேர்ந்த மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடிய படகு கரை ஒதுங்கியுள்ளது.

    இந்த மூங்கில் படகு 40 அடி நீளம், 15 அடி அகலம், 8 அடி உயரம் கொண்டதாகவும் சுமார் 150 மூங்கல்க ளால் கட்டபட்டுள்ளது. மழை நேரங்களில் தங்குவதற்கு ஏற்றார் போல் 6 அடி நீளம் 4 அடி அகலம் 4 அடி உயரம் கொண்ட ஓலையால் ஆன கூரை ஒன்றும் உள்ளது.

    இந்த படகில் மீன் பிடிக்க பயன்படுத்த கோழி தீவனம் 2 மூட்டை சுமார் 30 கிலோ உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள் வேதாரணியம் கடலோர காவல் குழுவினருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து வேதாரணியம் கடலோர காவல் குழுவின் இன்ஸ்பெக்டர் லோகநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் வரலட்சுமி, சுதாகர் மற்றும் போலீசார் படகை கைப்பற்றினர்.

    பின்னர் அந்த படகில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் யாரும் வந்தார்களா அல்லது புயலால் கரை தட்டியதா என விசாரித்து வருகின்றனர்.

    • வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று கரை ஒதுங்கி கிடந்தது.
    • முருகன் சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வேட்டைக்காரனிருப்பு, வடக்குசல்லிக்குளம் கடற்கரை பகுதியில் முருகன் சிலை ஒன்று நேற்று காலை கரை ஒதுங்கி கிடந்தது.

    இதை பார்த்த வடக்குசல்லிக்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(வயது 38) என்பவர் வேட்டைக்காரனிருப்பு கிராம உதவியாளர் ரவிக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்ததும் அவர் சம்பவ இடத்திற்கு வந்து முருகன் சிலையை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

    சுமார் 1½ அடி உயரமுள்ள கருங்கல்லால் ஆன அந்த சிலையை அவர் தனது அலுவலகத்திற்கு எடுத்து சென்றார்.

    பின்னர் இதுகுறித்து ரவி, வேதாரண்யம் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தார். அந்த சிலை நாகை அருங்காட்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த சிலை அங்கு எப்படி வந்தது? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×