search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பஸ் பாஸ்"

    • கர்ப்பிணி பெண்ணிற்கு பேருந்திலேயே செவிலியர் பிரசவம் பார்த்தார்.
    • செவிலியருக்கு ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானாவில் அண்ணனுக்கு ராக்கி கட்ட வேண்டும் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணி ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது.

    அப்போது பேருந்தில் பயணித்த ஒரு செவிலியர் நடத்துநர் பாரதியுடன் இணைந்து கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்தனர். அந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, தாய் மற்றும் பிறந்த குழந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிய வந்தது.

    இந்நிலையில், பேருந்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவசமாக பேருந்தில் பயணிக்கும் வகையில் இலவச பயண பாஸ் ஒன்றை தெலங்கானா அரசு போக்குவரத்துக் கழகம் வழங்கியுள்ளது.

    பிரசவத்திற்கு உதவிய செவிலியர் அலிவேலு மங்கமாவுக்கும் ஓராண்டுக்கு இலவச பயணம் செய்யும் பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் வரும் 6-ம் தேதி விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
    • மாணவர்கள் பழைய பஸ் பாஸ் மூலம் பயணம் செய்யலாம்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் பள்ளிகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    பள்ளிகள் திறக்கும் நாளிலேயே இலவச நோட்டு, பாடப்புத்தகங்களை வழங்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

    இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அடுத்த மாதம் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினமே மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாமா அல்லது புதிய பாஸ் தரும் வரை டிக்கெட் எடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்தது.

    இதுகுறித்து போக்குவரத்து கழகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு பஸ்களில் மாணவர்களிடம் பஸ் பாஸ் கேட்க மாட்டோம். பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கலாம். அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலே இலவசமாக பயணிக்கலாம். இந்த ஆண்டு மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக கல்வித்துறையில் இருந்து மாணவர்களின் விவரங்கள் பெற்று, ஆன்லைன் மூலம் புதிய பாஸ் விரைந்து வழங்கப்படும் என தெரிவித்தார்.

    • அதிகாரி தகவல்
    • விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளைச் சேர்ந்த 6,418 மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக (விழுப்புரம் கோட்டம்) வேலூர் மண்டல பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசு போக்குவரத்துக் கழகத்தின் வேலூர் மண்டலத்தின் வேலூர், ராணிப் பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 620 அரசு, தனியார் பள்ளிகள், அரசு கலைக் கல்லூரிகள், அரசு பாலிடெக்னிக், அரசு ஐ.டி.ஐ. ஆகியவற்றில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் பெறுவதற்கான விண்ண ப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

    இதுவரை பெறப்பட்ட விண்ணப்பங்கள் அடிப்படையில் 2-ம் கட்டமாக 31 பள்ளிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட 6,418 பஸ் பாஸ் பெறப்பட்டு, சம்ப ந்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கி, மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

    சென்னை:

    தமிழகத்தில் அக்னி வெயிலின் தாக்கத்தின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜூன் 7-ந்தேதி 1 முதல் பிளஸ்-2 வரை அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மாநிலம் முழுவதும் சுமார் 30 லட்சத்து 14 ஆயிரம் பேர் பயனடையலாம் என கணக்கிட்டுள்ளனர்.

    கடந்த காலங்களில் கொரோனா ஊரடங்கை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டபோது இலவச பஸ் பாஸ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. அப்போது சீருடை அணிந்த மாணவர்கள் மற்றும் கல்லூரி அடையாள அட்டைகளை காண்பிக்கும் மாணவர்கள் எந்த தடையும் இல்லாமல் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இருப்பினும் சில இடங்களில் பஸ்களில் மாணவர்களுக்கும், நடத்துனர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 2022-23 ஆம் கல்வி ஆண்டில் நடுப்பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டது. இந்த காலகட்டத்திலும் பஸ் பாஸ் இல்லாத காரணத்துக்காக மாணவர்கள் யாரும் இறக்கி விடப்படவில்லை.

    நடப்பாண்டில் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் ஸ்மார்ட் கார்டாக வழங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து வருவதாக போக்குவரத்து துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறும் போது, எல்லா மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டு இருக்கின்றோம். மாணவர்கள் பயணம் செய்யும்போது ஸ்மார்ட் கார்டு எடுத்துச் செல்லுங்கள். கல்வி நிறுவனங்களிடம் இருந்து இலவச பாஸ் கோரிக்கையை பெற்ற பின்னரே பயனாளிகள் இறுதி எண்ணிக்கை தெரியவரும்.

    போக்குவரத்து துறையின் தொழில்நுட்ப கிளையான சாலை போக்குவரத்து நிறுவனம் மாணவர்களுக்கான பஸ் பயண அட்டைகளை வழங்கும் செயல்முறையை தொடங்கியுள்ளது. மேலும் ஸ்மார்ட் கார்டு அச்சிடுவதற்கான டெண்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    வருகிற ஜூன் அல்லது ஜூலை மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு பஸ் பாஸ் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு கல்வி நிறுவனத்தில் இருந்தும் பஸ் பாஸ் கோரும் மாணவர்களின் விரிவான விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தடுக்கும் வகையில் பஸ் அட்டவணை திருத்தம் செய்யப்பட்டு, கூடுதல் பஸ் சேவைக்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    2022-23 ஆம் ஆண்டு இலவச பேருந்து பயணச் சீட்டுகளுக்கான இழப்பீடாக ரூ.1300 கோடியை போக்குவரத்து கழகங்களுக்கு மாநில அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் நடப்பு ஆண்டில் இந்தத் தொகை ரூ.1,500 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல் வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
    • 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பஸ் பாஸ் புதுப்பித்து வழங்கும் முகாமில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    குமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் இருப்பிடத்திலிருந்து கல்வி பயிலும் நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரிவோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு செல்வோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, நடைபெற்ற முகாமில் 260 மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டை புதுப்பித்து வழங் கப்பட்டுள்ளது. மேலும், 5 பார்வைக் குறைபாடுள்ள மாணவ, மாணவியர்களுக்கு பார்வைக் கண்ணாடிகள் வழங்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இம்முகாமானது நாகர்கோவில் எஸ். எல்.பி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 30-ந் தேதி கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களுக்கும், 31-ந் தேதி விளவங்கோடு தாலுகாவிற்கு உட்பட்டப்பகுதியில் உள்ளவர்களுக்கும் மற்றும் ஏப்ரல் 1-ந் தேதி (சனிக்கிழமை) கிள்ளியூர் மற்றும் திருவட்டார் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கும் இலவச பஸ் பயண அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    இலவச பஸ் பயண அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலிருந்து பணிபுரிவ தற்கான அசல் சான்று, சுயதொழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று. தினசரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறும் அசல் சான்றுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் வருகை தந்து இலவச பஸ் பயணச்சலுகை அட்டை பெற்று பயனடையலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொ) பிரம்மநாயகம் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
    • குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பார்வையற்ற மாற்றுத்திற னாளிகளுக்கு மாவட்டம் முழுவதும் செல்வதற்கும், இதர அனைத்து பிரிவு மாற்றுத்திறனாளிகளுக்கும் இருப்பிடத்திலிருந்து கல்வி பயில்பவர்களுக்கு படிக்கும் நிறுவனத்திற்கு செல்வதற்கும், பணிபுரி வோருக்கு பணிபுரியும் இடத்திற்கு செல்வதற்கும், தினசரி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்வதற்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

    இம்முகாம் 2023- 2024-ம் ஆண்டிற்கு நாகர்கோவில் எஸ்.எல். பி. அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை 6 நாட்கள் நடக்கிறது. இதில் மார்ச் 28-ந்தேதி செவ்வாய்கிழமை அகஸ் தீஸ்வரம் தாலுகாவிற்குட் பட்டப் பகுதியில் உள்ள வர்களும், மார்ச் 29-ந்தேதி புதன்கிழமை தோவாளை தாலுகாவிற்கு உட்பட்டப் பகுதியில் உள்ளவர்களும் மார்ச் 30-ந்தேதி வியா ழக்கிழமை கல்குளம் தாலுகாவிற்கு உட்பட டப் பகுதியில் உள்ளவர் களும், மார்ச் 31-ந்தேதி வெள்ளிகிழமை விளவங் கோடு தாலுகாவிற்குட் பட்டப்பகுதியில் உள்ள வர்களும் மற்றும் ஏப்ரல் 1-ந்தேதி சனிக்கிழமை கிள்ளியூர் மற்றும் திருவட் டார் தாலுகாவிற்கு உட் பட்டப் பகுதியில் உள்ள வர்களும் இலவச பஸ் பாஸ் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.

    இம்முகாமிற்கு, இலவச பயண பேருந்து அட்டை பெற்று பயனடைந்து வரும் மாற்றுத் திறனாளிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டையுடன் தற்போது கல்வி பயிலும் மாற்றுத் திறனாளிகள் கல்வி பயில்வதற்கான நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அசல் சான்று, பணிக்கு செல்வோர் பணிபுரியும் இடத்திலி ருந்து பணிபுரிவதற்கான அசல் சான்று, சுயதொ ழில் புரிபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் சுயதொழில் புரிவதற்கான அசல் சான்று, தினசரி மருத்துவம னைக்கு சிகிச்சைக்காக செல்வோர் மருத்துவ அலுவலரிடம் சிகிச்சை பெறப்படும் அசல் சான் றுடன் மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை அசல் மற்றும் நகலுடன், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய வற்றுடன் வருகை தந்து இலவச பேருந்து பயணச்ச லுகை அட்டை பெற்று பயன் அடையலாம்.

    இவ்வாறு செய்திக்குறிப் பில் தெரி விக்கப்பட்டுள்ளது.

    • மாணவர்களுக்கு பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) மூலம் நடந்து வருகிறது.
    • இலவச பஸ் பாஸ் அட்டை தயாரித்து வழங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

    சென்னை:

    1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பாலி டெக்னிக், ஐ.டி.ஐ. மாணவர்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயண செய்யும் திட்டம் நடைமுறையில் உள்ளது.

    இவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வர அரசு இதற்கான கட்டணத்தை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்குகிறது.

    கடந்த 2 வருடமாக கொரோனா பாதிப்பால் இலவச பஸ்பாஸ் அட்டை முறையாக வழங்கப்படவில்லை. பழைய பயண அட்டைகளையே பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    இந்த வருடம் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் வழக்கமான முறையில் நடைபெறுகிறது.

    ஜூன் மாதம் பள்ளி தொடங்கியது. மாணவர்கள் பயணம் செய்வதில் எவ்வித சிரமம் ஏற்படக்கூடாது என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு பயன்படுத்திய அட்டையை கண்டக்டர்களிடம் காண்பித்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதில் மாணவர்களிடம் கண்டிப்பாக நடக்கக்கூடாது எனவும் பஸ்களில் ஏற்றி-இறக்க வேண்டும் எனவும் கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 4 மாதமாக அரசு பஸ்களில் மாணவர்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகிறார்கள்.

    இதற்கிடையில் மாணவர்களுக்கு பஸ் பாஸ் தயாரித்து வழங்கும் பணி சாலை போக்குவரத்து நிறுவனம் (ஐ.ஆர்.டி.) மூலம் நடந்து வருகிறது.

    இதற்கான டெண்டர் விடப்பட்டு தமிழகம் முழுவதும் பஸ் பாஸ் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளிகள் மூலம் மாணவர்களின் பெயர், விவரங்களை 7 போக்குவரத்து கழகங்கள் சேகரித்துள்ளன. அதன் அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பஸ் பாஸ் தயாரிக்கப்படும்.

    பள்ளிகளுக்கே நேரில் சென்று மாணவர்களை புகைப்படம் எடுத்து வழங்குவதற்கு அந்நிறுவனம் ஏற்பாடு செய்து வருகிறது. பள்ளிகள், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.களில் படிக்கும் 28 லட்சம் மாணவர்களுக்கு புதிய பஸ்பாஸ் அட்டை விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது.

    இதுகுறித்து ஐ.ஆர்.டி. அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இலவச பஸ் பாஸ் அட்டை தயாரித்து வழங்க டெண்டர் விடப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும். சென்னை, விழுப்புரம், மதுரை, சேலம், கோவை, கும்பகோணம், திருநெல்வேலி ஆகிய 7 போக்குவரத்து கழகங்கள் மூலம் இப்பணி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் மட்டும் சுமார் 41 லட்சம் மாணவர்களுக்கு பஸ் பாஸ் அட்டை வழங்கப்பட உள்ளது.

    ×