என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் திடீர் சாவு"

    • பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.
    • மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த லக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி.

    இவரது மகன் அருண்குமார் (வயது24). இவர் தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியில் தங்கி இருந்து அங்குள்ள பர்னிச்சர் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

    நேற்று மதியம் அருண்குமார் தனது அறையில் நண்பர்களுடன் சிக்கன் பிரியாணி உணவை சாப்பிட்டுள்ளார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது.

    பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு நெஞ்சு வழிப்பதாக அவர் நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அவரை நண்பர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதி த்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து தேன்கனி க்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பிரியாணி சாப்பிட்ட வர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.

    • அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்
    • இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், நம்பியூர் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (25). என்ஜினீயரிங் பட்ட தாரியான மோகன்ராஜ் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    மோகன்ராஜும், அவரது நண்பர் ஜெயபிரகாசும் கோபிசெட்டிபாளையம் நாயக்கன் காட்டில் உள்ள அவர்களது நண்பரான பிரசாந்த் என்பவரின் சோப் ஆயில் கம்பெனிக்கு சென்ற னர். அப்போது மோகன் ராஜுக்கு சோர்வு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நெஞ்சு வலிப்பதாக கூறினார்.

    இதையடுத்து அவர் அங்குள்ள அறையில் சிறிது நேரம் படுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து அவரை நண்பர்கள் எழுப்பிய போது மோகன்ராஜீ எழ வில்லை. இதை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்த னர்.

    இதையடுத்து உடனடி யாக அவரை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், மோகன்ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

    இது குறித்து கோபி போலீ சார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
    • மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பர்கூர் பிஜிலிபாளையத்தை சேர்ந்தவர் பொம்மன். இவரது மகன் மாதேஷ் (வயது 28). கூலி தொழிலாளியான இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ஜோதியின் அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை பார்க்க மாதேஷ் குடும்பத்தினருடன் கடம்பூர் காடகநல்லி சென்று தங்கியிருந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தூங்கி கொண்டிருந்த மாதேஷிற்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்சு மூலம் மாதேஷை பசுவனபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    அதைத்தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாதேஷ் மாரடைப்பால் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி பாலமேட்டு புதூர் காலனியை சேர்ந்தவர் காந்தி (வயது 67). இவருடைய மகன் லோகநாதன் (34). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்ற லோகநாதன் பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் லோகநாதன் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் அப்பகு தியில் உள்ள டாஸ்மாக் கடை எதிரே மயங்கிய நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பெரு ந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை க்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் லோகநாதன் வரும் வழியிலேயே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவரது தந்தை காந்தி சிவகிரி போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா்.
    • உதகை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    ஊட்டி

    ஆந்திர மாநிலம், சித்தூா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(23). இவா் அங்குள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா். இந்நிலையில் நாகராஜ் தனது நண்பா்கள் 2 பேருடன் ஊட்டியில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க ஊட்டிக்கு வந்தார். 3 பேரும் ஒரு தனியாா்ஓட்டலில் அறை எடுத்து தங்கினா். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக நாகராஜ் கூறியதைத் தொடா்ந்து அவரது நண்பா்கள் அவரை அருகிலுள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

    அங்கு சிகிச்சைக்கு பின்னா் அவா்கள் 3 பேரும் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பினா். இந்நிலையில் வரும் வழியில் நாகராஜ் திடீரென மயங்கி விழுந்தாா். உடனடியாக அவருடைய நண்பா்கள் அவரை ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் நாகராஜ் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து உதகை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்

    ×