என் மலர்
நீங்கள் தேடியது "காலாண்டு விடுமுறை"
- 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அரசு, அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புக்கு பருவத்தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 3-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில், 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 3-ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
- அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது.
- மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி வேலைநாட்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய நாள்காட்டி 2018 ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நடப்பு கல்வியாண்டு (2024-25) அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளன.
பிளஸ் 1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு வருகிற 19 ஆம் தேதி துவங்கி, 27 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
- அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.
திருச்சி:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:
ஆதவ் அர்ஜூனின் தனிப்பட்ட கருத்து முதிர்ச்சியற்ற கருத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகிகளே தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் பதவி குறித்து ஆதவ் அர்ஜூன் பேசியது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு குறித்து முதன்மை செயலாளரிடம் ஆலோசனை நடத்திய பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும்.
- காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.
சென்னை:
தமிழகத்தில் பள்ளிகளுக்கு 9 நாட்கள் காலாண்டு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு 9 நாட்கள் விடுமுறை விடப்படும். ஆனால், நடப்பாண்டு, செப்டம்பர் 28-ந் தேதி முதல் அக்டோபர் 2-ந் தேதி வரையில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிடுகிறது. அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி என்பதால் அன்று அரசு விடுமுறை. இடையில் 2 நாட்கள் மட்டுமே காலாண்டு தேர்வு விடுமுறையாக உள்ளது என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை செயலாளரிடம் பேசி பின்னர் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலாண்டு விடுமுறை அக்டோபர் 6-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின்னர் அக்டோபர் 7-ந்தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும்.
காலாண்டு தேர்வு விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை விடுத்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
- காலாண்டு விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் அறிமுகம்.
சென்னை:
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகள் காலாண்டு விடுமுறை மற்றும் வார விடுமுறைகளை முன்னிட்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 395 பஸ்களும், 28-ந் தேதி (சனிக்கிழமை) 345 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 70 பஸ்களும், 28-ந் தேதி (சனிக்கிழமை) 70 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 27-ந் தேதி 20 பஸ்களும் 28-ந் தேதி 20 பஸ்களும் இயக்கப்படுகிறது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது.
ஏற்காடு:
ஏற்காட்டில் நிலவி வரும் குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கிறார்கள்.
குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்ததால் சுற்றுலாப் பயணிகள் இன்றி ஏற்காடு வெறிச்சோடியது.
இதற்கிடையே தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து தொடர் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதாலும், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதாலும் காலையிலேயே சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.

அவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா தலங்களான லேடிஸ் சீட், அண்ணாபூங்கா, ஏரிபூங்கா, ஐந்திணை பூங்கா, பொட்டானிக்கல் கார்டன், பக்கோடா பாயிண்ட் போன்ற இடங்களை கண்டு ரசித்து மகிழ்ந்தனர். மேலும் படகு இல்லத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய நீண்ட நேரம் காத்திருந்தனர்.
காலை நேரத்திலேயே படகு இல்லம் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தால் களைகட்டியது. சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு காரணமாக மலைப்பாதை, ஏற்காடு அண்ணா பூங்கா, ஏரி பூங்கா சாலையில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
- 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
- மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்க பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள், முதல் பருவத்தேர்வுகள் கடந்த மாதம் (செப்டம்பர்) 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையில் நடைபெற்றது. அதன்பிறகு, மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை தொடங்கியது.
அதன்படி, 9 நாட்கள் காலாண்டு விடுமுறைக்கு பிறகு, தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. காலாண்டு விடுமுறை முடிந்து உற்சாகமாக மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
விரைவில் பருவமழை தொடங்க இருப்பதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கான 2-ம் பருவத்துக்கான பாடப்புத்தகங்களை விரைந்து வழங்கவும் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.