search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவிளையாடல்"

    • வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.
    • இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்தாண்டு தைப்பூச திருவிழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது. 4-ம் நாள் திருவிழாவான இன்று சுவாமி சன்னதியில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னொரு காலத்தில் சிவ பக்தரான வேதபட்டர் வேணுவனம் (நெல்லை) சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரை சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார்.

    இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்கு சிரமம் ஏற்பட்டது. இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லை காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார்.

    அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காக காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே என பதறியபடி நெல் நனைந்து விடக்கூடாது என சுவாமியிடம் வேண்டிய நிலையில் கோவிலுக்கு வந்தார். அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தது.


    இதைப்பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னன் நின்ற சீா் நெடுமாறனிடம் தெரிவித்தார். மன்னரும் இந்த அதிசயத்தை கண்டு வியந்தார். இறைவன் நெல்லுக்கு வேலியிட்டு காத்ததால் வேணுவனம் என்று அழைக்கப்பட்ட இவ்வூா் நெல்வேலி என்றும் திரு அடைமொழியுடன் திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது.

    இந்த திருவிளையாடலை நினைவுபடுத்தும் வகையில் இன்று நண்பகலில் சுவாமி சன்னதியில் மண்டபத்தின் அருகில் நெல்மணிகள் காய வைக்கப்பட்டது போலவும், மழை பெய்தது போலவும் நிகழ்வுகள் நடைபெற்றன. இந்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஓதுவாமூா்த்திகள் பதிகமாக பாடல் பாடினா்.

    தொடா்ந்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கும் வேதபட்டர் மற்றும் பாண்டிய மன்னருக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. இன்று இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகள் ரதவீதி உலா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தனா்.

    • பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு களித்தனர்.
    • பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி துணைமாலை–யம்மன் சமேத திருமேனி–நாதர் சுவாமி கோவிலில் பிட்டுத்திருவிழா வெகு விம–ரிசையாக நடைபெற்றது. வந்தியம்மை என்ற பிட்டு பலகாரம் விற்கும் மூதாட் டிக்கு உதவி செய்ய எண்ணி மனித உருவில் வந்த சிவ–பெருமான், மூதாட்டி தந்த பிட்டை கூலியாக பெற்றுக் கொண்டு வேலை செய்ய ஆற்றங்கரை சென்றார்.

    ஆனால் பிட்டு சாப்பிட்ட மயக்கத்தில் மரத்தடியில் உறங்கிய சிவபெருமானை பாண்டிய மன்னன் பிரம் பால் அடித்த திருவிளையா–டலை உணர்த்துவதே இந்த பிட்டுக்கு மண் சுமந்த பட–லம் ஆகும். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடி–யாக உதவ வருவேன் என் பதை உணர்த்தவும் ஒவ் வொரு ஆண்டும் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தன்று சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா அனைத்து சிவாலயங்களி–லும் விமரிசையாக கொண் டாடப்படுகிறது.

    அந்த வகையில் இந்த திருமேனிநாதர் சுவாமி கோவிலிலும் பிட்டுத்திரு–விழா திருச்சுழி குண்டாற்றில் வெகு விமரிசையாக நடை–பெற்றது. இந்த பிட்டுத் திருவிழாவை நூற்றுக்க–ணக்கான பக்தர்கள் கண்டு களித்து சுவாமியை தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதன் பின்னர், சுவாமி மற்றும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த பிட்டுத் திருவிழாவில், திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர் கள் கலந்து கொண்டு சுவாமி மற்றும் அம்மனைத் தரிசனம் செய்தனர்.

    • பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
    • பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் பெருமை அளவிடற்கரியது, உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக்கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்களின் பரப்பு மொத்தமாக 'விரஜபூமி' என்று அழைக்கப்படுகிறது. வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது. சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன. இந்த 'விரஜ பூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, 'விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு. இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர். உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற போதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபுச் சேர்ந்த வைணவ அடியார்கள், 'பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள். கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள். பெரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர் பாடியான கோகுலம் எல்லாம் 'விரஜ பூமி'யில் உள்ளன. 'பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான். பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன. கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன. யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும். கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி. ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள். தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்குச் சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.
    • திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும்.

    தஞ்சை மாவட்டம் திட்டை கிராமத்தில் அமைந்துள்ளது வசிஷ்டேஸ்வரர் கோவில். இங்கு தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ள குரு பகவானுக்கு வருடம் தோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவில் நாடு முழுவதும் இருந்து ஏராளமாக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த ஆண்டு குரு பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிக்காரர்களும் பலன்பெற வேண்டி லட்சார்ச்சனை மற்றும் பரிகார ஹோமங்கள் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற உள்ளது. ஆதிகல்ப காலத்தில் இறைவனால் படைக்கப்பட்ட பல தலங்கள் பிரளய கால வெள்ளத்தில் மூழ்கிப் பின் தோன்றின.

    ஆனால் அந்த பேரூழிக்காலத்திலும் அழியாத பெருமை உடையது திட்டை ஸ்தலம். கைலாசம் கேதாரம், காசி, ஸ்ரீ சைலம், காஞ்சி. சிதம்பரம் போன்ற சுயம்பு தலங்களில் வரிசையில் இருபத்தி இரண்டாவது சுயம்புத்தலமாக விளங்குவது திட்டை. பிரளய காலத்தில் இவ்வுலகம் முழுவதும் நீரால் சூழப்பட்டது.

    மும்மூர்த்திகளும் மாயை வசப்பட்டு நீர் சூழ்ந்தும், இருள் கவிந்தும், இருந்த இந்தப் பிரமாண்ட உலகத்தைக் கண்டு அஞ்சினர். பரம்பொருளை பலவாறு வேண்டி துதித்தனர். அப்போது பார்வதி பரமேஸ்வரனின் அருளாள் ஊழிப்பெரு வெள்ளத்தின் நடுவில் நீண்ட பரப்பளவுள்ள ஒரு மேட்டுப் பகுதியை கண்டு வியந்தனர்.

    அம்மேட்டுப்பகுதியில் ஜோதிமயமான ஒரு சிவலிங்கம் தரிசனம் அளித்தது. அதனை மும்மூர்த்திகளும் கண்டு அதிசயித்து பூஜித்தனர். இந்த லிங்கத்தினின்று காட்சி தந்த இறைவன் மும்மூர்த்திகளிடம் ஏற்பட்ட மயக்கத்தை அகற்றி அபயமளித்து அவர்களுக்கு படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் அதற்கான வேத, வேதாந்த சாஸ்திர அறிவையும் அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த திருத்தலமே திட்டை ஆகும். இங்கு இறைவன் தானாக தோன்றியதால் தான்தோன்றீஸ்வரர் என அழைக்கப்பட்டார். வசிஷ்டர் இங்கு வந்து தவம் புரிந்து பிரம்ம ஞானிகளில் தலை சிறந்தவர் ஆனார். அதனால் இத்தல இறைவன் வசிஷ்டேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.

    இத்திருக்கோவில் மூலவர் வசிஷ்டேஸ்வரர் சந்நிதியின் விமானத்தில் சந்திர காந்தக்கல், சூரிய காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. இக்கற்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை தம்முள் ஈர்த்து வேதிவினை ஏற்பட்டு 24 நிமிடங்களுக்கு ஒரு சொட்டு நீரை சுவாமியின் மீது சொட்டுகின்றது. இத்தகைய அமைப்பு வேறு எந்த சிவாலயத்திலும் காண முடியாது.

    • திரளான பக்தர்கள் தரிசனம்
    • தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய மிகவும் பழமையான கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜசோழன் இந்த கோவிலை கட்டிஉள்ளார் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

    இந்த தலத்தில் குகன் என்ற முருக கடவுள் ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வர காரணமாயிற்று. இங்குள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் சிலை இந்தப் பகுதியில் அமைந்துஉள்ள மிக உயரமான 5½ அடி உயரம் உடையதாகும். அப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழாவை யொட்டி திருவிளையாடல் காட்சி லீலைகள் நடந்தன.

    சிவபெருமான் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவிளையாடல் காட்சிகளை அரங்கேற்றினார்.

    கருங்குருவிக்கு உபதேசம் அளித்த காட்சி, நாரைக்கு முக்திஅருளியகாட்சி, மாணிக்கம் விற்றருளிய காட்சி, தருமிக்கு பொற்கிழி வழங்கிய காட்சி, உழவா கோட்டை காட்சி, பாறைக்கு அங்கம் வெட்டிய லீலை காட்சி, வளையல் விற்று அருளிய காட்சி, நரியை பரியாக்கிய காட்சி, பிட்டுக்கு மண் சுமந்த காட்சி, விறகு விற்றுஅருளிய காட்சி ஆகிய 10 திருவிளையாடல் காட்சிகளும் நடந்தன. இந்த சிவபெருமானின் திருவிளையாடல் காட்சிகளை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.

    ×