என் மலர்
நீங்கள் தேடியது "மாப்பிள்ளை"
- காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை
- வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள்
நாகர்கோவில் :
மார்த்தாண்டம் தெங்கன் குழி விளை பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 33), கொத்தனார்.
இவர் சரஸ்வதி (21) என்பவரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அன்பழகன்-சரஸ்வதி தம்பதியினர் நாகர்கோவில் வாத்தியார்விளை பகுதியில் வசித்து வந்தனர். சரஸ்வதி உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். வீட்டில் அன்பழகன் மட்டும் இருந்தார்.
நேற்று காலை சரஸ்வதி வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அன்பழகனை பலமுறை அழைத்தும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து ஜன்னல் வழியாக சரஸ்வதி பார்த்த போது அன்பழகன் தூக்கில் பிணமாக தூங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இத னால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து வடசேரி போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் பிணமாக தொங்கிய அன்பழகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப் பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வடசேரி போலீசில் சரஸ்வதி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கிறார்கள். தற்கொலை செய்து கொண்ட அன்பழகன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட் டுள்ளது. சம்பவத்தன்றும் அவர்களுக்கிடைய ஏற்பட்ட தகராறில் சரஸ்வதி வீட்டில் இருந்து அன்பழகன் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் அன்பழ கன் தற்கொலை செய்து இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார்.
- முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார்.
தொட்டியம்:
கரூர் மாவட்டம் தான் தோன்றி மலை கருப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 25) கோவையில் உள்ள ஒரு தனியார் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் கரூர் வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்த கோபிகா (வயது 19) என்பவரை கடந்த 11ந் தேதி காதலித்து திருமணம் செய்தார். கிருஷ்ண மூர்த்திக்கு அந்தப் பெண் தங்கை உறவு முறை என்பதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இருவரையும் எப்படியாவது பிரித்து விட வேண்டும் என்று கோபிகாவின் உறவினர்கள் கங்கணம் கட்டினர்.
பின்னர் உள்ளூர் போலீசார் உதவியுடன் கோபிகாவை பிரித்தனர்.
இருப்பினும் அவர் காதல் கணவருடன் வாழ்வதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து சில தினங்களில் பெற்றோரின் பிடியிலிருந்து தப்பி கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கொண்டார்.
பின்னர் அவர் காதல் மனைவியை கோவைக்கு அழைத்து சென்று குடும்பம் நடத்த தொடங்கினார். இந்நிலையில் ஏற்கனவே நடந்த ஒரு அடிதடி வழக்கு தொடர்பாக திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதி மன்றத்திற்கு கிருஷ்ண மூர்த்தி ஆஜராக வந்தார்.
முன்னதாக மனைவியை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு நீதிமன்றத்திற்கு வந்தார். இதனை மோப்பம் பிடித்துக் கொண்ட கோபிகாவின் உறவினர்கள் மீண்டும் அவர்களை எப்படியாவது பிரித்து விட வேண்டும் என திட்டமிட்டு நீதிமன்றத்தில் இருந்து வீடு திரும்பிய கிருஷ்ண மூர்த்தியை காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து கிருஷ்ண மூர்த்தியின் காதல் மனைவி தொட்டியம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி கரூர் மாவட்டம் ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநாத் (24), அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் (25), கரூர் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த சரவணன் (29), அதே ஊரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, கோபிகாவை கடத்திச் செல்லும் முடிவில் கடத்தல் புள்ளிகள் வந்தனர். ஆனால் கிருஷ்ணமூர்த்தி அவரை தனது பெற்றோர் வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்ததால் வேறு வழியில்லாமல் கிருஷ்ண மூர்த்தியை கடத்தியுள்ளனர்.
கைதான நான்கு பேரும் கோபிகாவின் நெருங்கிய உறவினர்கள் என்றனர்.
தங்கை உறவுமுறை கொண்ட இளம் பெண்ணை காதல் திருமணம் செய்த விவகாரத்தில் புது மாப்பிள்ளை கடத்தப்பட்ட சம்பவம் தொட்டியம் மற்றும் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில்பட்டது.
- திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
திருவட்டார் :
திருவட்டார் அருகே உள்ள வடக்கன்நாடு பகுதியை சேர்ந்தவர் நவீன் (வயது 28), லாரி டிரைவர்.
நேற்று இரவு இவர் வீட்டில் இருந்து பூவன் கோடு நோக்கி தனது இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது சாலையில் நடந்து சென்ற சிறுமியின் கை வாகனத்தின் கண்ணாடியில் பட்டது.
இதனால் நவீன், தனது வாகனத்தை திருப்பிய போது எதிரே வந்த அடையாளம் தெரியாத இரு சக்கர வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் நவீன் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும் உறவினர்களும் சேர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி நவீன் பரிதாபமாக இறந்தார். இவருக்கு திருமணமாகி 8 மாதங்கள் தான் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து அவரது மனைவி ஜெயந்தி கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தின் டிரை வரை போலீசார் தேடி வருகிறார்கள். திரும ணமான 8 மாதத்தில் புது மாப்பிளை விபத்தில் இறந்தது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
- குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1978-ஆம் ஆண்டில், சட்டத் திருத்தம் செய்யப்பட்டு, பெண்களின் குறைந்த பட்ச திருமண வயது 18 எனவும், ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டது. இந்த சட்டத்தினால் குழந்தைத் திருமணங்களை தடுக்க முடியும்.
குழந்தை திருமண தடை சட்டம் அமலில் இருக்கும் நிலையில், கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் 16 வயது சிறுமியுடன் 32 வயதுடைய வாலிபருக்கு திருமணம் நடைபெற பெரியோர்களால் நிச்சயதார்த்தம் ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து அச்சிறுமியின் நிச்சயதார்த்தை நிறுத்தியுள்ளனர்.
பின்னர் பெற்றோருக்கு அறிவுரை கூறியுள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் நிறுத்தப்பட்ட விரக்தியில் இருந்த வாலிபர், அன்று இரவே கொடூரச் செயலை அரங்கேற்றினார். திருமணம் நிறுத்தப்பட்ட கோபத்தில், சிறுமியில் வீட்டிற்கு சென்ற அந்த வாலிபர், சிறுமியை கொலை செய்து தலையை கையோடு எடுத்துச் சென்றுள்ளார்.
வாலிபரின் இந்த கொடூர செயல் குறித்து சிறுமியின் குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குழந்தைத் திருமணம் நிறுத்தப்பட்ட சந்தோஷத்தில் இருந்த சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- உத்தரகாண்டின் ருத்ராபூரில் மணப்பெண் போல் நடித்து ஒரு பெண் பலரை ஏமாற்றியுள்ளார்.
- ஜெயிலில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் உறுதியானது.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் உத்தம்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் அவரின் தாய் உள்பட 7 பேரை உத்தர பிரதேச போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்த பெண் உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்த பல ஆண்களை திருமணம் செய்து, அவர்களிடமிருந்த பணம் மற்றும் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார். இதற்கு அந்த பெண்ணின் தாயும், மற்ற சிலரும் உடந்தையாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், சிறையில் உள்ள அந்தப் பெண்ணுக்கு சமீபத்தில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு எச்.ஐ.வி. இருப்பது உறுதியானது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறை மற்றும் போலீசார் அந்தப் பெண் திருமணம் செய்து ஏமாற்றிய ஆண்களைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, அந்தப் பெண்ணுடன் தொடர்பிலிருந்த 3 மாப்பிள்ளைகளுக்கு எச்.ஐ.வி. இருப்பது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகின்றனர்.
மேலும், இந்தப் பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாரேனும் பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் மருத்துவ உதவியை நாடலாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
உலகை அச்சுறுத்தும் எய்ட்ஸ் நோய்க்கு எதிராக இந்தியா பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக பல்வேறு பிரசாரங்களையும் செய்து வருகிறது.
- மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
- காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் அஞ்சலி (18) என்பவருக்கும் திலீப் (25) என்பவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.
பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகன் திலீப் (25) திடீரென அஞ்சலியின் தாய் மனிஷாவையும், தந்தை சந்தோஷையும் அறைந்தார்.
இதை பார்த்து கோவமான மணப்பெண் போலீசுக்கு போன் செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திலீப், அவரது மூத்த சகோதரர் தீபக், அவரது மாமா மாதா பிரசாத் மற்றும் அவரது தந்தை ராம்கிரிபால் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் உறவினர்கள் மற்றும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு, இரு தரப்பினரும் திருமணத்தை நடத்த ஒப்புக்கொண்டனர். பின்னர் திருமண சடங்குகள் முடிக்கப்பட்டன.
- எனது தோழி ஒரு மருத்துவர். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
- ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) முதலிடம் பெற்ற ஒருவர் திருமணத்திற்காக தனது தோழியிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார் என்று பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டாக்டர் பீனிக்ஸ் என்ற ஐடியில் இருந்து இந்த பதிவு இடப்பட்டுள்ளது. அந்த பதிவில், "சிறுநீரக மருத்துவ படிப்பிற்கான எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் முதல் இடத்தை பெற்ற ஒருவருடன் எனது தோழிக்கு திருமண வரன் பார்க்கப்பட்டது. எனது தோழியும் ஒரு மருத்துவர் தான். அவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.
எய்ம்ஸ் தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர் அனஸ்தீசியா படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற எனது தோழியின் குடும்பத்தினரிடம் ரூ.50 கோடி வரதட்சணை கேட்டுள்ளார். ஒரு மருத்துவருக்குத் தன் சொந்தக் காலில் நிற்க கூட துணிவு இல்லையென்றால் இந்தக் கல்வியால் என்ன பயன்?

ரூ.50 கோடி என்பது எனது தோழியின் பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு. தெலுங்கு சமூகத்தில் அவளை திருமணம் செய்து வைப்பதற்கு வரதட்சணை மற்றும் தங்களின் ஓய்வுக்கால சேமிப்பு முழுவதுமாக தேவை என்று அவளது பெற்றோர்கள் கூறுவதால் எனது தோழி காலையிலிருந்தே அழுது கொண்டிருக்கிறாள். எனது தோழியின் தங்கைக்கு திருமணம் செய்துவைக்கும் போதும் அவளது பெற்றோர்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாக வரதட்சணை முறைக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
- மணமகன் மீது பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
- மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்தியாவில் வரதட்சணை தடைச் சட்டம் 1961 ஆண்டு மே 1 முதல் அமலில் உள்ளது. அதன்படி இந்தியாவில் வரதட்சணை வாங்குவதும் கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும்.
வரதட்சணை தடைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆனாலும் இந்தியாவில் வரதட்சணை கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில், தான் கேட்காமலேயே தனக்கு வரதட்சணை கொடுத்ததாக தனது மனைவியின் குடும்பத்தினர் மீது மணமகனே நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணையில், மணமகன் மீது ஏற்கனவே பெண் வீட்டார் வரதட்சணை கேட்டு தொல்லை செய்வதாக அக்டோபர் 5 ஆம் தேதி போலீசில் புகார் அளித்தது தெரியவந்தது.
மணமகனின் வங்கிக் கணக்கிற்கு சுமார் ரூ.71,500 பணமும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ரூ.25,000 காசோலையாகவும், ரூ.46,500-யை அவரது வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளனர்
இதனால் தன் மீது சுமத்துப்பட்டுள்ள புகாரை திசை திருப்பவே மணமகன் இவ்வாறு வழக்குத் தொடர்ந்துள்ளாரா என்ற சந்தேகம் வரவே, இரு தரப்பினரும் புகார் தொடர்பான ஆதாரத்தை சமர்ப்பித்த பிறகே இது தொடர்பாக முடிவு எடுக்க முடியும் என்று என நீதிமன்றம் தெரிவித்தது.
- கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார்.
- கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை டிசம்பர் 12ந் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
- மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார்.
- குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் மணமகன் தன்னை விட குறைவாக படித்துள்ளதாகக் கூறி மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 17 ஆம் தேதி சுல்தான்பூர் மாவட்டத்தில் 28 வயது பெண்ணுக்கும் 30 வயது இளைஞருக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அந்த இளைஞரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன் என்று மணப்பெண் மறுத்துள்ளார்.
மணமகள் பட்டப்படிப்பு முடித்துள்ள நிலையில், மாப்பிள்ளை 10ம் வகுப்பு தோல்வியடைந்துள்ளார். ஆகவே 10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மணப்பெண் கறாராக தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மணமகளிடம் பல மணிநேரம் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் மணப்பெண் இந்த திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து திருமணம் பாதியில் நின்றதால் வரதட்சனையாக கொடுக்கப்பட்ட நகை, பணம் ஆகியவற்றை மணப்பெண் குடுமபத்தினரிடம் மணமகன் குடும்பத்தினர் திரும்ப ஒப்படைத்தனர்.
- முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
- வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார்.
தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமான கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தமிழ் தெலுங்கில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தியில் தெறி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
இப்படி பிசியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் விரைவில் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
15 ஆண்டுகளாக காதலித்து வரும் இவர்களின் திருமணத்திற்கும் இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர் என்றும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் முதல்முறையாக தனது காதலை கீர்த்தி சுரேஷ் உறுதி செய்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வருங்கால கணவர் ஆண்டனியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "எங்களது 15 வருட காதல் இன்னும் தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.
- ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் சந்தித்த பெண்ணை திருமணம் செய்ய ஊர்வலமாக வந்த மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி அனைவரையும் திருப்பிப் பார்க்க வருகிறது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்தவர் தீபக் குமார். துபாயில் பணிபுரிந்து வரும் தீபக் இன்ஸ்டாகிராமில் அறிமுகமான பஞ்சாபை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் பழகி வந்துள்ளார். கடந்த 3 வருடமாக நேரில் சந்திக்காமல் இன்ஸ்ட்டாகிராமிலேயே சாட்டிங் மூலம் இவர்கள் உறவு வளர்ந்துள்ளது.
கடைசியாக இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இரு வீட்டாரும் போனிலேயே பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். மன்பிரீத் கவுர் ஊரான மோகாவில் ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் வைத்து டிசம்பர் 6 ஆம் தேதி திருமணம் நடப்பதாக இருந்துள்ளது. எனவே தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவுக்கு மாப்பிளை தீபக் குமார் வந்துள்ளார்.

ரோஸ் கார்டன் பேலஸ்க்கு உங்களை கூட்டிவருவதற்காக ஆள் அனுப்பியுள்ளதாகப் பெண் வீட்டார் போனில் தெரிவித்துள்ளனர். ஆனால் பல மணி நேரமாக காத்திருந்தும் யாரும் வராததால் மாப்பிளை வீட்டார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளனர்.
அப்போது ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் மணமகள் மன்பிரீத் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. எனவே நிலைமை என்ன என்பதை உணர்ந்த மாப்பிளை வீட்டார் போலீசுக்கு சென்றுள்ளனர்.
கல்யாண செலவுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.60,000 கொடுத்ததாக மாப்பிள்ளை தீபக் போலீசில் தெரிவித்தார். தான் மணமகளை நேரில் பார்த்ததில்லை என்றும் போட்டோவில் மட்டுமே பார்த்துள்ளதாகவும் தீபக் தெரிவித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிந்த போலீஸ் செல்போன் எண்ணை வைத்து மணமகள் குரூப்பை தேடி வருகிறது.