search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி வீராங்கனைகள்"

    • தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
    • தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

    தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.

    போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பீகார் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலா விஜயகாந்த் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-

    பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில், நமது தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்ற நிலையில், தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.

    விளையாட்டு என்பது அனைவரும் சமமாக இணைந்து திறமையை நிரூபிக்கக்கூடிய மேடை. ஆனால் சக வீராங்கனைகளை, அதிலும் தமிழக மாணவிகளைத் தாக்கியது மிகவும் கண்டிக்கத் தக்க செயல்.விளையாட்டு என்பது வீரத்துடன் சவால்களை எதிர்கொள்வதற்காகவே இருக்க வேண்டும்; ஆனால், கோழைத்தனமாகச் சக வீராங்கனைகளை தாக்குவது என்பது ஒரு தவறான தரம் கெட்ட செயல்.

    தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அந்த மாணவிகள் பத்திரமாகத் தமிழகம் திரும்பத் தமிழக அரசு அனைத்து தேவையான உதவிகளையும் செய்து, அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
    • விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.

    பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    இந்நிலையில் இந்த சம்பவத்தையடுத்து மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துவதாக அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டில் சமத்துவம் இருக்கவேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது.

    தமிழ்நாட்டு பல்கலை. அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வரும் நிலையில், திமுக அரசு உடனடியாக தலையிட்டு அவரை விடுவிக்க வழிவகை செய்யவேண்டும். மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    பஞ்சாப் மாநிலத்தில் தமிழக வீராங்கனைகள் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தாக்குதலுக்கு உள்ளான வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புவதாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதவில் கூறியிருப்பதாவது:-

    உடலில் காயங்களுடன்-மனதில் வேதனைகளுடன் நாளை வரை இரயிலுக்கு காத்திருக்க வேண்டுமா?

    டெல்லி-சென்னை இடையே விமான சேவை இல்லையா?

    இருந்தும் ஏற்பாடு செய்ய மனமில்லையா?

    கடுமையான தாக்குதலுக்கு பின்னரும் இன்று அவர்களை டெல்லியில் தங்க வைப்பது தவறானது!

    விசாரணை என்ற பெயரில் பயிற்சியாளர் அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டுள்ளார்.

    வீராங்கனைகளையும் துன்புறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

    எனவே உடனடியாக அனைத்து வீராங்கனைகளையும் மீட்டு வந்து இங்கு உயரிய மருத்துவர்களை கொண்டு உரிய மருத்துவம் அளிக்க வேண்டும்.

    விமான பயணத்திற்கான கட்டணத்தை கூட நாங்கள் ஏற்பதற்கு தயாராக இருக்கிறோம்!

    மீட்பதற்கு அரசு தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
    • சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலம் பதின்டா நகரில் உள்ள குருகாசி பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியின்போது கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியைச் சேர்ந்த வீராங்கனைகளும், அணியின் பயிற்சியாளரும் தாக்கப்பட்டனர். அதோடு பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

    தமிழ்நாடு- பீகார் இடையிலான போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்டபோது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    மாணவிகள் மற்றும் பயிற்சியாளர் தாக்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அரசியல் கட்சி தலைவர் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கபடி வீராங்கனைகள் (மாணவிகள்) பத்திரமாக உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய துணை முதல்வர் உதயநிதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாணவிகள் அனைவரும் பத்திரமாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக பயிற்சியாளரை கைது செய்தததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி "வீராங்கனைகள் பத்திரமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீராங்கனைகள் டெல்லியில் தங்க வைக்கப்பட்டு, நாளை ரெயில் மூலம் தமிழ்நாடு திரும்புகின்றனர்" என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

    • போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், பயிற்சியாளர் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
    • பஞ்சாப் சென்றுள்ள தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்புடன் உள்ளனர்.

    தமிழகத்தின் 36 வீராங்கனைகள் உட்பட 42 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தேசிய கபடி போட்டியில் பங்கேற்க பஞ்சாப் சென்றுள்ளனர்.

    போட்டியில் விதிகளை மீறியதாக முறையிட்ட தமிழக வீராங்கனைகள், தமிழக பயிற்சியாளர் பாண்டியன் மீது பஞ்சாப் போட்டியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

    போட்டியில் ஒருதலைபட்சமாக புள்ளிகளை வழங்கியதால் பயிற்சியாளர் என்ற முறையில் தமிழக அணி சார்பில் முறையிட்ட போது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. தமிழக பயிற்சியாளர் தாக்கப்பட்டதுடன் கைதும் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலர் மேக்நாத் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

    தமிழக கபடி அணியின் பயிற்சியாளர் பாண்டியன் பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்படவில்லை. பயிற்சியாளர் விசாரணைக்கு மட்டுமே அழைத்து செல்லப்பட்டார்.

    பஞ்சாப் சென்றுள்ள தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்புடன் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் தான் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது.
    • கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வருவது போல் வீடியோ இருந்தது.

    ஷகாரன்பூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தில் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்படும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த 16-ந் தேதி ஷகாரன்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் தான் கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் உணவு பரிமாறப்பட்டது. கழிவறை பகுதியில் இருந்து வீராங்கனைகள் சாப்பாட்டை எடுத்து வருவது போல் வீடியோ இருந்தது.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஷகாரன்பூர் விளையாட்டு அதிகாரி அனிமஷ் சக்சேனாவை மாநில அரசு சஸ்பென்டு செய்துள்ளது.

    ×