என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சுந்தர் பிச்சை"
- அவருடைய பார்வை என்னைத் தூண்டியது.
- இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார்.
பிரபல தொழில் அதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள், தொழில் அதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார். சுந்தர் பிச்சை தனது இரங்கல் செய்தியில் "கூகுளில் ரத்தன் டாடாவுடனான எனது கடைசி சந்திப்பில், வேமோவின் முன்னேற்றம் குறித்துப் பேசினோம், அவருடைய பார்வை என்னைத் தூண்டியது. அவர் ஒரு அசாதாரண வணிகம் மற்றும் மரபை விட்டுச் செல்கிறார்.
இந்தியாவில் நவீன வணிகத் தலைமையை வழி நடத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் கருவியாக இருந்தார். இந்தியாவை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அவரது அன்புக்குரியவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
- சூசன் 2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தார்.
- கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த யூடியூப் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ. சூசன் வோஜ்சிக்கி இன்று காலமானார்.
சூசன் வோஜ்சிக்கி கடந்த 2014-ம் ஆண்டு முதல் யூடியூப் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். உடல்நல பிரச்சனை காரணங்களால் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
சூசன் மரணத்திற்கு கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரது எக்ஸ் பதிவில், "2 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த என் நண்பர் சூசனின் இழப்பு எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் வரலாற்றில் சூசன் முக்கிய பங்கு வகித்துள்ளார்" என்று பதிவிட்டுள்ளார்.
- பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. நீண்ட இடைவெளிக்குப் பின் இந்தியா பெற்றுள்ள இந்த வெற்றியை நாடே கொண்டாடி வருகிறது.
அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் தொழிலதிபர்கள் என இந்திய அணிக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய அணியின் வெற்றிக்குப் பிறகு அடுதடுத்து சுவாரஸ்யமான விஷயங்களும் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில், பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும், இன்று அதிகாலை அவர் நடத்தி வரும் பிளாகில் எழுதி பதிவிட்ட அவர், இந்தியா தென் ஆப்பிரிக்கா மோதிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியை தான் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அதற்கு அவர் தெரிவித்துள்ள காரணம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அதாவது, அவரது பதிவில், 'ஒருவழியாக உற்சாகமும், அச்சமும் நிறைந்த இந்த போட்டி நிறைவடைத்துவிட்டது. இந்த போட்டியை நான் டிவியில் பார்க்கவில்லை. நான் பார்த்தால் இந்தியா தோற்றுவிடும் என்பதாலேயே பார்க்கவில்லை' என்று தெரிவித்துள்ளார்.
இதோபோல எக்ஸ் தளத்தில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தான் போட்டியை பார்த்தால் இந்தியா தோற்றுவித்திடும் என்பதால் நான் போட்டியை பார்க்காமல் தியாகம் செய்தேன் நான் என்ன செய்யட்டும் சுந்தர் என கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சுந்தர் பிச்சை, போட்டியை பார்க்காததற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். மேலும் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார்,
- சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.
உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனம் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு இன்று பிறந்த நாள். ஜூன் 10, 1972 ஆம் ஆண்டு பிறந்த சுந்தர் பிச்சைக்கு இன்று 52 வயதாகிறது.
பிறப்பு மற்றும் கல்வி
சுந்தர் பிச்சை தமிழ் நாட்டில், மதுரை மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை ரகுநாத பிச்சை மற்றும் தாயார் லட்சுமி ஆவார். இவர் சென்னையில் உள்ள சவகர் வித்தியாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பும், வனவாணி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பும் படித்தார். பிறகு ஐ.ஐ.டி கரக்பூரில் உலோகப் பொறியியல் பயின்ற இவர், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில், பொருளறிவியல் பட்டம் பெற்றார்.
வாழ்க்கை
மதுரையில் பிறந்த சுந்தர் பிச்சை தனது வாழ்க்கையில் பெரும் பகுதியை இரண்டு ஊரில் கழித்துள்ளார், ஒன்று சென்னை மற்றொன்று அமெரிக்காவில் லாஸ் ஆல்டோஸ்.
- சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
- சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும்.
புதுடெல்லி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார். ஐ.ஐ.டி. பட்டதாரியான சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
ஆன்ட்ராய்டு இயங்கு தளம், கூகுள் குரோம் போன்ற பல திட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.
2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 2 முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1,800 கோடியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்கு சம்பளம் ரூ.1,869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம்.
சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஏற்றத்தால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும். உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலரே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் அரிதானதாகும்.
கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10 ஆயிரத்து 215 கோடி என ஹூருன் பட்டியல் மதிப்பிடப்பட்டு உள்ளது.
- சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் நேற்று வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
- இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
வாஷிங்டன்:
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது. விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது.
மிகவும் சவாலான இந்தப் பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத் தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதுர்யமாக நடத்தி முடித்தனர். இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், என்னவொரு அருமையான தருணம், இன்று காலை சந்திரயான் 3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள். இந்தியா இன்று முதல் நாடாக நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கி சாதனை படைத்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக தகவல்.
- கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்பு.
அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டு வருகிறார். அதன்படி, நேற்று அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன்ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன், ஏஎம்டி சிஇஓ லிசா சு, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட அமெரிக்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின்போது, பிரதமர் மோடியை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். பின்னர், இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக பிரதமரிடம் பகிர்ந்து கொண்டோம் என சுந்தர் பிச்சை கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், " அமெரிக்காவிற்கு வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது பிரதமர் மோடியை சந்தித்தது பெருமையாக இருந்தது. இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நிதியில் 10 பில்லியன் டாலர்களை கூகுள் முதலீடு செய்வதாக நாங்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டோம். குஜராத்தின் கிப்ட் நகரில் எங்களின் உலகளாவிய ஃபின்டெக் (fintech) செயல்பாட்டு மையத்தை திறப்பதை நாங்கள் அறிவிக்கிறோம்.
டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தொலைநோக்கு அவரது காலத்தை விட முன்னோடியாக இருந்தது. இதனை மற்ற நாடுகள் செய்ய விரும்பும் ஒரு வரைபடமாக நான் இப்போது பார்க்கிறேன்" என்றார்.
- எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது.
- குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.
16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று, 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது.
இந்நிலையில் ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிக்கு கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சிறந்த இறுதிப்போட்டிகளில் இதுவும் ஒன்று. எப்போதும் போல் டாடா ஐபிஎல் சிறப்பாக இருந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்கள்! குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்த ஆண்டு வலுவாக திரும்ப வரும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
- ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் வழங்கப்பட்டு உள்ளது.
கலிபோர்னியா:
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சைக்கு 2022-ல் ஒட்டுமொத்த ஊதியமாக 22.6 கோடி டாலர் (ரூ.1,850 கோடி) வழங்கப்பட்டு உள்ளது.
இது சராசரி ஊழியரின் சம்பளத்தை விட 800 மடங்கு அதிகமாகும் என ஆல்பபெட் பங்கு சந்தையிடம் அளித்த ஆவணங்களில் சுட்டிக் காட்டியுள்ளது. சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்ட மொத்த ஊதியத்தில் 21.8 கோடி டாலர் (ரூ.1,800 கோடி) பங்கு சார்ந்த பரிசுகளும் அடங்கும்.
ஆல்பபெட் நிறுவனம் உலகளவில் 12 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டுள்ளதாக இவ்வாண்டு ஜனவரியில் அறிவித்தது. இது அதன் உலகளாவிய பணியாளர்களில் 6 சதவீதத்துக்கு சமமாகும்.
இந்த நிலையில் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஆண்டில் வாரி வழங்கப்பட்டுள்ள பல கோடி டாலர் சம்பளம் சாதாரண பணியாளர்களுக்கும், தலைமைப் பொறுப்பு வகிப்பவர்களுக்கும் இடையிலான இமாலய அளவிலான ஊதிய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என பணியாளர் கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளுக்கு இடையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தும் விதத்தில் பேர்ட் சாட்போட்டை உருவாக்கும் பணிகளில் ஆல்பபெட் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தி வருகிறது.
- சமீபத்தில் கூகுள் நிறுவனம் உலகளவில் சுமார் 12 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் நிதி சிக்கலில் சிக்கித் தவிப்பதாக தெரிகிறது. ஊழியர்களிடம் மேஜைகளை சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ள கூகுள் வலியுறுத்தி வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் நிறுவனம் காசை மிச்சப்படுத்த முடியும் என சுந்தர் பிச்சை தெரிவித்து இருப்பதாக தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 12 ஆயரம் பேரை பணி நீக்கம் செய்த நிலையில், கூகுள் இந்த நடவடிக்கை மூலம் செலவீனங்களை குறைக்க முயற்சிக்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஆல்-ஹேண்ட்ஸ் சந்திப்பில் பேசிய சுந்தர் பிச்சை, "என்னை பொருத்தவரை அவர்கள் ஒத்துழைப்பு வழங்கி பணத்தை மிச்சப்படுத்த முயற்சிக்கின்றனர். அதே சமயம் சிலவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிலர் எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பர், எப்போதும் மேஜைகள் காலியாகவே உள்ளது. இதை பார்க்க பேய் நகரம் போன்று காட்சியளிக்கும். இது நல்ல அனுபவம் இல்லை," என்று தெரிவித்து இருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு தான், அமெரிக்காவின் நியூ யார்க், சான் ஃபிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில் கூகுள் கிளவுட் பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்கள் தங்களின் சக பணியாளர்களுடன் அலுவலகம் மற்றும் மேஜைகளை பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டனர். தற்போது மேஜைகளை பகிர்ந்து கொள்வது கிளவுட் பிரிவுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், மற்ற குழுக்களை சேர்ந்தவர்களும் இதனை முயற்சிக்கலாம் என கூகுள் சிஇஒ தெரிவித்து இருக்கிறார்.
மேஜை பகிர்வதோடு மட்டுமின்றி ஊழியர்கள் செலவீனங்களில் கவனமாக இருக்கவும், தேவையின்றி பணம் மற்றும் பொருட்களை செலவிட வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். "நிதி தேவைகளை கையாள்வதில் நாம் சிறப்பாக செயலாற்ற வேண்டும். நமக்கான ரியல் எஸ்டேட் செலவீனங்கள் அதிகம் ஆகும். இவை 30 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படும் எனில், இந்த விஷயத்தில் நாம் சரி செய்வது எப்படி என யோசிக்க வேண்டும்," என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
- சந்திப்புக்கு பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
- பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது
புதுடெல்லி:
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பு பற்றி பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சுந்தர் பிச்சை, உங்களை சந்தித்து புதுமை, தொழில்நுட்பம் மற்றும் பல விஷயங்கள் குறித்து விவாதித்ததில் மகிழ்ச்சி. மனித சமுதாய முன்னேற்றம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு உலகம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது முக்கியம்' என கூறி உள்ளார்.
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பிரதமருக்கு நன்றி தெரிவித்து சுந்தர் பிச்சை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியாவின் தொழில்நுட்ப மாற்றம் மிக வேகமாக வளர்ந்து வருவதை பார்க்கிறேன். வருங்காலத்தில் இந்தியாவுடன் தொழில்நுட்ப ரீதியிலான நல்லுறவை எதிர்நோக்குகிறேன். ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதற்கு முழு ஆதரவை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
- கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது.
- கூகுளுடன் இந்தியா- அமெரிக்க வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு சென்று தூதர் தரண்ஜித் சிங்கை சந்தித்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை முதல் முறையாக இந்திய தூதரகத்துக்கு சென்றார். அங்கு இந்திய தூதருடன், இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகள், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது, இந்தியாவின் முன் முயற்சிகளை பாராட்டிய சுந்தர்பிச்சை, கூகுள் நிறுவனம் இந்தியாவை மிகவும் நேர்மறையான கட்டமைப்பில் பார்க்கிறது என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக சுந்தர்பிச்சை கூறும்போது, "இந்தியா மீதான கூகுளின் அர்ப்பணிப்பு குறித்து விவாதிக்க கிடைத்த வாய்ப்பை பாராட்டுகிறேன். இந்தியாவின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கான எங்கள் ஆதரவை தொடர எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இந்திய தூதர் தரண்ஜித் சிங் கூறும்போது, "கூகுளுடன் இந்தியா- அமெரிக்க வர்த்தகம், தொழில்நுட்ப கூட்டாண்மை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது" என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்