search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசி"

    • உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்கின்றனர்.
    • 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை

    உலகம் முழுவதும் அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் பசி, பட்டினியை போக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தான் 1979 ஆம் ஆண்டிலிருந்து உலக உணவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான உலக உணவு தினத்தின் கருப்பொருள் "ஆரோக்கியமான நாளைக்காக இன்றைய பாதுகாப்பான உணவு" என்பதாகும்.

    உலகம் முழுவதும் 73.3 கோடி மக்கள் பசி, பட்டினியை எதிர்கொள்வதாகவும் கிட்டத்தட்ட 280 கோடி மக்களால் சத்தான உணவுகளை வாங்க முடியவில்லை என்று ஐநா சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய்த்தொற்றிற்கு பிறகு இந்த நிலைமை மோசமடைந்துள்ளது.

    உலக உணவு தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், நடப்பு ஆண்டிற்கான உலக பட்டினி குறியீடு அறிக்கையில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளதை நாம் கவனிக்க வேண்டியுள்ளது.

    19 வது உலக பட்டினி குறியீட்டு அறிக்கையான இதில் இந்தியா 105 ஆவது இடத்தில் உள்ளது. அதன்படி தீவிரமான பசி- பட்டினி பிரச்சனைகள் கொண்ட நாடாக இந்தியா வகைப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த அறிக்கையின் மூலம் இந்தியாவில் குழந்தைகளிடையே, ஊட்டச்சத்துக் குறைபாடு பாதிப்பு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. குழந்தை வளர்ச்சி குன்றிய விகிதம் 35.5 சதவீதமாகவும் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகவும் ஊட்டச்சத்து குறைபாடு 13.7 சதவீதமாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.
    • காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.

    உத்தரப் பிரதேசத்தில் பசியால் அழுத தனது குழந்தைகளை தாய் ஆற்றில் மூழ்கடித்து கொன்ற நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் உள்ள பராவுயா கிராமத்தில் பிரியங்கா என்று பெண் தனது நான்கு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த நிலையில் 4 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் வாழ்வாதாரத்துக்கு மிகுந்த சிரமப்பட்டுள்ளார் பிரியங்கா.

     

     

    இந்நிலையில்தான் நேற்று [ஜூன் 27] வியாழக்கிழமை காலை கிராமத்தின் அருகில் உள்ள கேசம்பூர் காட் நதிக்கு குழந்தைகளை குளிக்க அழைத்துச்சென்று தனது 4 வயது குழந்தையையும் 5 வயது குழந்தையையும் ஆற்றில் மூழ்கடித்து தாய் பிரியங்கா கொன்றுள்ளார்.

     

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இரண்டு குழந்தைகளின் உடலை மீட்டனர். மொத்தம் உள்ள 4 குழந்தைகளில் இரண்டு உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு குழந்தைகளில் 6 வயது சிறுவன் ஆற்றில் அருகில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். மேலும் காணாமல் போன ஒன்றரை வயதாகும் நான்காவது குழந்தையை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றார்.

     

    இதற்கிடையில் தாய் பிரியங்காவை போலீசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் காரணம் வெளியாகியுள்ளது. அதாவது, தனது குழந்தைகள் சதா பசியால் அழுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் அவரகள் படும் கஷ்டத்தைப் போக்கவே அவர்களை கொன்றதாக பிரியங்கா வாக்குமூலம் அளித்துள்ளார். 

    • சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.
    • மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சூடான் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இந்த போர் தற்போது வரை குறைய வில்லை . இதனால் மக்கள் பசி, பட்டினியால் வாடி வருகின்றனர்.

    சூடானில் தற்போது சுமார் 49 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். இதில் 18 மில்லியன் மக்கள் உணவு தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு உள்ளனர்,




    உள்நாட்டு போரில் காயம் அடைந்த 160- க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் 60 - க்கும் மேற்பட்ட ஊழியர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

    சூடானில் ஏற்பட்ட சண்டையால் விவசாய பயிர்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது இதனால் மக்கள் உணவைத் தேடி வீட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். மக்கள் இடம் பெயர்வால் அங்கு மலேரியா மற்றும் பிற நோய்கள் பரவுகின்றன.




    மேலும் சூடானுக்கு வரும் சர்வதேச உதவிகள் பட்டினியால் வாடும் பகுதிகளில் உள்ள மக்களை சென்றடைவதை ராணுவம் தடுத்து வருகிறது. சூடான் உள்நாட்டு போரால் மிகப்பெரும் பசி , பட்டினி நிலை உருவாகி உள்ளது.




    உணவு பொருட்கள் அனைத்தும் தீர்ந்து விட்டதால், விவசாயிகள் நடவுக்காக வாங்கிய விதை தானியங்களை சாப்பிட்டுள்ளனர். மக்கள் உயிர் வாழ மண், இலைகளை சாப்பிடும் அவல நிலை தற்போது ஏற்பட்டு உள்ளது.

    • இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை.
    • இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    தமிழ் திரையுலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற 'பசி' திரைப்படத்தின் இயக்குனர் துரை உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 84. இவருக்கு மனைவியும் 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.

    இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு 1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.

    சென்னையின் கூவம் ஆற்றின் கரையோரம் வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. சிறந்த இயக்குனர் , திரைப்படம், நடிகை என்று மூன்று தேசிய விருதுகளோடு மாநில அரசு விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல்வேறு விருதுகளை குவித்த எதார்த்த திரைப்படம். ஜெயபாரதி, கமல்ஹாசன் உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

    இயக்குநர் மட்டுமன்றி கதாசிரியர், தயாரிப்பாளர் என்ற பன்முகத் திறமை கொண்டவர் துரை. அவர் இயக்கிய அவளும் பெண்தானே, ஆசை 60 நாள், பாவத்தின் சம்பளம், ஒரு வீடு ஒரு உலகம், கிளிஞ்சல்கள் உள்ளிட்ட திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவைகளாகும்.

    இயக்குநர் துரை மறைவிற்கு தமிழ் திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்.
    • ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது.

    மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் தேர்தல் பேரணியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார்.

    நடந்து வரும் மக்களவைத் தேர்தலில் அம்ரோஹா தொகுதியின் பாஜக வேட்பாளர் கன்வர் சிங் தன்வாரை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், " அண்டை நாட்டில் (பாகிஸ்தான்) உள்ளவர்கள் பசியுடன் போராடும் போது, இந்தியாவில் 80 கோடி மக்கள் இலவச ரேஷன் பெறுகிறார்கள்" என்று கூறினார்.

    மேலும், " 23- 24 கோடி மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான், 1947-ல் பிரிவினைக்குப் பிறகு உருவானது. இன்று பட்டினியால் வாடுகிறது. இதுவும் ஒரு உதாரணம்.

    பாஜக தனது மக்களவைத் தேர்தல் அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டில் 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

    ஒரு பக்கம் பாகிஸ்தான் இவ்வாறு உள்ளது. மறுபுறம், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படும் என்கிற வாக்குறுதி.

    ஒவ்வொரு திசையிலிருந்தும் ஒரே ஒரு முழக்கம் மட்டுமே கேட்கிறது- 'மீண்டும் மோடி அரசு' என்று.." என்றார்.

    லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவில் மேற்கு உத்தரபிரதேசத்தில் எட்டு தொகுதிகளில் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில், பேரணியில் ஆதித்யநாத் உரையாற்றினார். அம்ரோஹாவில் இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதி நடக்கிறது.

    • 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.
    • கைக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி.

    பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணம் தெரியாமல் பெற்றோரும், குடும்பத்தினரும் திணறுவது உண்டு. பிறந்தது முதல் 6 வாரங்கள் வரை, ஒரு நாளுக்கு 2 முதல் 3 மணி நேரம் வரை குழந்தை அழுவது இயல்பானது தான்.

    பசி, சோர்வு, வயிற்றுவலி, வாயுத்தொல்லை, டயப்பர் ஈரமாவது, அதிக குளிர்ச்சியான அல்லது சூடான வெப்பநிலை ஆகியவற்றின் காரணமாக குழந்தைகள் அழுவார்கள். அவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டுபிடித்து விட்டால், குழந்தைகளை எளிதாக சமாதானப்படுத்த முடியும். அது பற்றிய சில தகவல்கள்.

     கைக்குழந்தைகளுக்கு வலி போன்ற உணர்வுகளை வெளிப்படுத்த அழுகை மட்டுமே ஒரே வழி. குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று வயிற்றுவலி, இது சாதாரணமானது என்றாலும், வலி நீங்கும் வரை குழந்தைகளின் அழுகையை நிறுத்த முடியாது. குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்தபடி அழுதால் அதற்கு வயிற்றுவலி ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தமாகும்.

     அளவுக்கு அதிகமாக (பால் அல்லது திட உணவுகளை குழந்தைக்கு கொடுக்கும் போது வயிற்று உப்புரத்தால் இது போன்று வலி ஏற்படக்கூடும். இதுதவிர, உணவுடன் அதிகப்படியான காற்று குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வலி ஏற்பட்டு குழந்தை அழும். எனவே பாலூட்டியவுடன் குழந்தையை தோளில் சாய்த்தவாறு அதன் முதுகை லேசாக தட்டிக் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு செய்வதால் குழந்தையின் வயிற்றுக்குள் சென்ற காற்று வெளியேறி வலி நீங்கும். சில நேரங்களில் சாப்பிட்ட உணவு ஏற்படுத்தும் ஒவ்வாமை காரணமாகவும் குழந்தை அழக்கூடும். இதையும் கவனிப்பது அவசியமாகும்.

    குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள், தாங்கள் சாப்பிடும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைக்கு நாம் வழங்கும் உணவு, விரைவாக செரிமானம் ஆகி சிறுநீராகவும், மலமாகவும் வெளியேறிவிடும். இதனால், மீண்டும் பசி எடுக்கக்கூடும்.

    குழந்தை அழும்போது தாய் தன் விரலை நன்றாக சுத்தம் செய்து, குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். குழந்தை விரலை சூப்பத்தொடங்கினால், பசியால் அழுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

    குழந்தைகளுக்கு நாம் உடுத்தும் ஆடை, அவர்களின் சருமத்தை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும். இறுக்கமான ஆடைகள், சருமத்திற்கு ஒவ்வாத ஆடை ரகங்கள் குழந்தையின் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது குழந்தைக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தும். இதன் காரணமாகவும் குழந்தை அழக்கூடும். முடிந்தவரை குழந்தைக்கு பருத்தி துணிகளை மட்டுமே அணிவிக்க வேண்டும்.

    குழந்தைக்கு அணிவித்த டயப்பர் முழுவதுமாக ஈரமாகும் வரை காத்திருக்காமல், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதை மாற்ற வேண்டும்.

    குழந்தைகளை படுக்க வைக்கும் இடம், அவர்களின் ஆடைகள், அவர்கள் இருக்கும் அறை என அனைத்து பகுதியையும் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில், சிறு சிறு பூச்சிகள், எறும்புகள் போன்றவை கடிப்பதன் காரணமாகவும் குழந்தைகள் அழக்கூடும்.

    • பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவே உணவு எடுத்துக்கொள்ள முடியும்.
    • உணவு இடைவேளை மிகவும் முக்கியம்.

    பச்சிளம் குழந்தைகளால் மிகக்குறைந்த அளவுதான் உணவு எடுத்துக்கொள்ள முடியும். தாய்ப்பால் கொடுத்த உடனே,குழந்தைக்கு திட உணவு கொடுத்தால் அதனால் சாப்பிட முடியாது. எனவே உணவு இடைவேளை மிகவும் முக்கியம். தாய்ப்பால் கொடுக்கும் நேரத்துக்கும், திட உணவு கொடுக்கும் நேரத்துக்கும் இடைவெளி தேவை.

    அதாவது, காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு நேரத்தில் திட உணவுகளை கொடுக்கலாம். இடைப்பட்ட நேரத்தில், அதாவது, காலையில், முற்பகலில், மாலையில், இரவு தூங்க செல்லும் முன் தாய்ப்பால் கொடுக்கலாம். பசியானாலும் சரி, வயிறு நிறைந்துவிட்டாலும் சரி, குழந்தைகள் சில அசைவுகள் மற்றும் சத்தங்கள் மூலம் நமக்கு உணர்த்தும்.

    சாப்பாட்டை அருகில் கொண்டு போகும்போது வாயை திறக்கும். உணவின் மணம் உணர்ந்தாலே ஆர்வமாகும். சில சத்தங்களை எழுப்பி, கை அசைவுகளை காட்டி, தனக்கு இன்னும் பசிக்கிறது என்பதை உணர்த்தும். உணவு இருக்கும் இடத்தை நோக்கி நகரும் அல்லது கையை காட்டும்.

    வயிறு நிறைந்துவிட்ட நிலையில், குழந்தை உணவை ஏற்காமல், தள்ளிவிடும். உணவு கொடுக்கும்போது வாயை திறக்காமல் அடம்பிடிக்கும். உணவு இருக்கும் திசையில் இருந்து விலகி, தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்ளும். அசைவுகள் மற்றும் சத்தங்களின் மூலம் தனக்கு வயிறு நிறைந்துவிட்டதை உணர்த்தும்.

    திட உணவுகளை கொடுக்க தொடங்கும்போது குழந்தை, புதிய சுவைகளுக்கு பழகுகிறது. அந்த நேரத்தில் கட்டாயப்படுத்தி உணவை ஊட்டுவதை தவிர்க்க வேண்டும். அப்படி வற்புறுத்தி ஊட்ட ஆரம்பித்தால் குழந்தைக்கு உணவின் மீது வெறுப்பு ஏற்படலாம்.

    தனக்கு எவ்வளவு சாப்பாடு வேண்டும் என்பதை குழந்தைகளே தீர்மானிக்கட்டும். நீங்கள் கொண்டு வந்த உணவு முழுவதையும் குழந்தை சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்காகூடாது, நிர்பந்திக்க கூடாது.

    • தி.மு.க.வை எதிர்ப்பவர்கள் தான் உண்மையான அ.தி.மு.க தலைவராக இருக்க முடியும்.
    • சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் காந்தி சாலையில் அறிஞர் அண்ணாவின் 114 -வது பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது‌. கூட்டத்திற்கு நகரச் செயலாளர் மூர்த்தி தலைமை வைத்தார்.

    மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட நிர்வாகிகள் பாலாஜி, கலியபெருமாள், ரயில் பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இரா.காமராஜ் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    பெரியார் சிலைக்கு சென்னையில் மாலை அணிவித்து விட்டு ஓ.பி.எஸ் வரும்போது முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் ரெய்டு நடப்பது அரசு தன் கடமையை செய்கிறது என்று கூறுகிறார்.

    இதை அவர் கூறலாமா?.

    அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு இருக்கிறார்.

    அதேபோன்று நிர்வாகிகள் நாங்களும் எங்கள் கடமையை செய்திருக்கிறோம். சரியான தலைவரை அ.தி.மு.க.விற்கு தலைமையாக தேர்ந்தெடுத்து இருக்கிறோம்.

    காலை உணவு திட்டத்தை எடப்பாடியார் தனது ஆட்சி முடியும் தருவாயில் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    ஆட்சிக்கு வந்திருந்தால் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டிருக்கும்.

    இப்போது ஸ்டாலின் ஐரோப்பாவை பார்த்து ஆஸ்திரேலியாவை பார்த்து நான் ஆரம்பித்தேன் என்று கூறுகிறார்.

    பசியை போக்குவது தான் எனது வாழ்வின் லட்சியம் என்கிறார்.

    உண்மையில் பசியை போக்கியது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தான்.சத்துணவு திட்டம், விலையில்லா அரிசி திட்டம் ஆகியவற்றை கொண்டு மக்களின் பசியை போக்கியவர்கள் இவர்கள் தான்.

    அதில் அவர் பங்கு போட்டுக் கொள்ள முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கட்சி அமைப்பு செயலாளர் ஆசைமணி, தலைமைக் பேச்சாளர் நெத்தியடி நாகையன், மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.

    முடிவில் ஒன்றியச் செயலாளர் செந்தில்வேல் நன்றி கூறினார்.

    ×