என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முன்பு"
- அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்,
- டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும்
நாகர்கோவில் :அரசு போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் நியமனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும், போதிய தொழில்நுட்ப பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் ராணி தோட்டம் பணிமனை முன்பு இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அற்புதராஜ், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் சுவாமி, செந்தில்குமார், நடேசன் உள்பட ஏராளமான தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.
- சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
- வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.
நாகர்கோவில்:
குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை 2-ம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது சாவுக்கு கல்லூரி பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை கைப்பற்றி குலசேகரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மாணவி சுகிர்தாவை தற்கொலைக்கு தூண்டிய தாக பரமசிவம் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கையை வைத்து வருகிறார்கள். இந்த நிலையில் குமரி மாவட் டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ- மாணவிகள் மருத்துவ மாணவி சுகிர்தா சாவுக்கு நீதி கேட்டு இன்று போராட்டம் நடத்துவதாக கூறினார்கள். இதையடுத்து நாகர்கோ வில் கலெக்டர் அலுவல கத்தில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஏராள மான மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்துவதற்காக வந்தனர்.பின்னர் கலெக்டர் அலுவல கம் எதிரே ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் முகமது முபிஸ் தலைமை தாங்கினார். இந்திய மாணவர் சங்க மாவட்ட துணை செயலாளர் சந்துரு,எட்வின்பிரைட், ரெதீஸ், ரகுபதி,மேரி ஸ்டெல்லா பாய் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை மாதர் சங்க மாநில நிர்வாகி உஷா பாசி தொடங்கி வைத்தார்.மருத்துவ மாணவி சுஜிர்தா சாவில் உள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வந்து, சம்பந்தப் பட்டவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப் பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
- கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
சேலம்:
சமூகவிரோதிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தூத்துக்குடி கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ்-க்கு சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில துணைத்தலைவர் நல்லா கவுண்டர் பங்கேற்று கண்டன உரையாற்றினார். கொலையாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் குணசேகரன், மாவட்ட செயலாளர் செல்வம் மாவட்ட பொருளாளர் ஆனந்த் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
நாமக்கல்:
கொல்லிமலையில் உள்ள, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் கோரிக்கைளை வலியுறுத்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், கொல்லிமலை சேளூர்நாடு, வெள்ளக்கல் ஆறு முதல் ஊர்முடிப்பட்டி கிராமம் வரை உள்ள சாலை மிக மோசமான நிலையில், குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இச்சாலையை விரைந்து சீரமைத்து தரவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.
தொடர்ந்து சாலை அமைக்க வலியுறுத்தி கிராம மக்கள் தங்களது ரேசன் கார்டுகளை திருப்பி அளிக்க முற்பட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய, மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, கொல்லிமலைப் பகுதியில் சாலைகளை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதையேற்று மலைவாழ் மக்கள் கலைந்து சென்றனர்.
- இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
- கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன்.
சேலம்:
சேலம் களரம்பட்டி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் இன்று காலை சேலம் டவுன் மகளிர் போலீஸ் நிலையம் வந்தார். அப்போது திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கூறும் போது:-
கடந்த 26-ந் தேதி தனது மகளை ஒரு வாலிபர் கடத்திச் சென்று தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் நிலை யத்தில புகார் அளித்தேன். இதையடுத்து போலீசார் வாலிபரை பிடித்து விசாரித்து நடவடிக்கை எடுத்தனர். ஆனால் கைது நடவடிக்கை எடுக்கவில்லை. அவரை விட்டு விட்டனர்.
இதனிடையே தனது மகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயன்றார். தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு காரணமான வாலிபர் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
- சாலை மறியலில் ஈடுபட்டு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர்.
சேலம்:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. மற்றும் அமலாக்கத்துறையினர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதிகளில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் பைரோஸ்கான் தலைமையில் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர் . ஆனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் குண்டுகட்டாக தூக்கி சென்று 9 பேரை கைது செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்