என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாடப்பிரிவுகள்"
- பெற்றோரும் பங்கேற்றதால் பரபரப்பு
- வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.
நாகர்கோவில் :
தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் கடந்த 19-ந்தேதி வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் பிளஸ்-1 வகுப்புகளில் சேர்ந்து வருகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் பிளஸ்-1 மாணவ-மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
குமரி மாவட்டத்திலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான பள்ளிகள் தங்கள் பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவு களை ஒதுக்கி வருகின்றனர்.
அதற்கு பிறகு காலியாக உள்ள இடங்கள், வேறு பள்ளிகளில் இருந்து வரும் மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்பட்டு வருகிறது. மாணவ-மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடப்பிரிவுக்கு உரிய கட்டணங்களை செலுத்தி பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
நாகர்கோவில் கவிமணி அரசு பள்ளியிலும் பிளஸ்-1 மாணவிகள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை பிளஸ்-1 சேர்க்கைக்காக ஏராளமான மாணவிகள், தங்கள் பெற்றோருடன் பள்ளிக்கு வந்தனர். அப்போது சில மாணவிகளுக்கு அவர்கள் விரும்பி கேட்ட பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் கேட்டனர். அவர்கள் கொடுத்த விளக்கத்தை ஏற்காத 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கள் பெற்றோருடன், பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறுவயது முதல் ஒரே பள்ளியில் படித்த தங்களுக்கு விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போராட்டம் குறித்து மாணவிகள் கூறுகையில், நாங்கள் சிறுவயது முதல் இந்த பள்ளியில் தான் படித்து வருகிறோம். தற்போது பிளஸ்-1 படிப்புக்கு விருப்ப பாடத்தை கேட்டு நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தோம்.
அந்த பிரிவில் சேர்வதற்காக இன்று பெற்றோரை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு வந்தோம். ஆனால் நாங்கள் விரும்பும் பாடப்பிரிவுகள் ஒதுக்கப்படாதது தெரியவந்தது. எங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், வேறு பள்ளிகளில் இருந்து வந்தவர்களுக்கு கொடுத்திருப்பது வேதனை அளிக்கிறது. அவர்களும், எங்கள் அளவிற்கு தான் மதிப்பெண்களை எடுத்துள்ளனர்.
எனவே எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, விரும்பும் பாடப்பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என்றனர். மாணவிகளின் இந்தப் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியில் கலந்தாய்வு 2 நாட்கள் நடைபெற உள்ளது.
- தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும்.
கடலூர்:
சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் 2022-23-ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பரிவுகளுக்கு அரசு கலைக் கல்லூரிகளில் கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் ஒவ்வொரு பாடப்பரிவிலும் கூடுதலாக 20 சதவீத இடங்களை அதிகரித்து, மாணவர்கள் சேர்க்கை நடத்த அரசு அனுமதித்துள்ளது. அதனடிப்படையிலும் பல்கலைக் கழக அனுமதி பெற்று கூடுதலாக ஏற்படுத்தப்பட்ட இடங்கள் மற்றும் ஏற்கனவே நிரப்பப்படாத பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுகான காலி இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான இறுதி கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் 26 -ந்தேதி மற்றும் 27- ந்தேதி ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது.
கலந்தாய்வு தேதி மற்றும் விபரம்: 26.09.2022- பாடப்பிரிவுகள் பி.எஸ்.சி. கணிதம் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி, புள்ளியியல், இயற்பியல், பொது வேதியியல், தொழில் வேதியியல், சுழற்சி & 2 கணினி அறிவியல் சுழற்சி-1 & 2, பி.சி.ஏ. கணினி பயன்பாட்டியல், தாவரவியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. விலங்கியல் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி. 27-9-2022 கலந்தாய்வு: B.A.தமிழ், B.A,ஆங்கிலம் கழற்சி-1 & ×2} பி.ஏ. பொருளியல் - தமிழ்வழி மற்றும் ஆங்கில வழி பி.காம் , சுழற்சி-1 & -2 மற்றும் பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல். இணைய வழியில் விண்ணப்பித்தவர்கள் காலை 10 மணிக்கு கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்பவர்கள் தங்கள் அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ். சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களின் நகல் 5 பிரதிகள் நிழற்படம் 5 பிரதிகள் மற்றும் 2 எடுத்து. வரவேண்டும். தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் சேர்க்கை கட்டணம் அன்றே செலுத்த வேண்டும். இணைய வழியில் விண்ணப்பித்தவர்களுக்கு மட்டும் இனச்சுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் .மேலும் காலை 10.30 மணிக்கு மேல் வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கல்லூரி முதல்வர் சாந்தி தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்