என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செயலாளர் ஆய்வு"
- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
- நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.
திருச்செங்கோடு:
திருச்செங்கோட்டில் பல்வேறு பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, திருச்செங்கோடு தாசில்தார் அலுவலகத்தில் பயோ மெட்ரிக் கருவிகள் வைப்பு அறையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
இந்த ஆய்வின்போது முகாமிற்கு தேவையான கருவிகள் உள்ளனவா என்பது குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக எடுத்துரைத்து நிவர்த்தி செய்ய வேண்டும் என கட்டுப்பாட்டு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
ஆய்வு
மேலும், சட்டையம்புதூரில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்ப பதிவு மாதிரி முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டு முகாமில் அமைக்கப்பட்டுள்ள தன்னார்வலர் உதவி மையம், விண்ணப்ப பதிவு மையம், விண்ணப்ப பதிவு செய்யும் தன்னார்வலர்களின் பணிகள், விண்ணப்ப பதிவு நடைமுறைகள், பொதுமக்கள் கொண்டுவர வேண்டிய ஆவணங்கள் ஆகியவைகள் குறித்து நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அடிப்படை வசதிகள்
இந்த ஆய்வின் போது பொதுமக்களின் விண்ணப்பங்களை பதிவு செய்யும் போது அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்ட வசதிகளையும் உறுதி செய்து கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
பின்னர் திருச்செங்கோடு நகராட்சியில் சூரியம்பாளையம் நியாய விலை கடை, ராஜா கவுண்டம்பாளையம் நகராட்சி தொடக்கப்பள்ளி, திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் ஆண்டிப்பாளையம், அணிமூர் கிராம ஊராட்சி சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம் அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு மேற்கொண்டார்கள்.
மேலும் திருச்செங்கோடு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் தமிழ்நாடு மின்னாளுமை முகமையின் இரண்டு இ - சேவை மையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மையத்தில் வழங்கப்படும் சான்றிதழ்கள் குறித்து பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் .செல்வகுமரன், முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுகந்தி, இ-சேவை மாவட்ட மேலாளர் சுந்தரராஜ், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் .ஜெயராமராஜா, தாசில்தார் பச்சமுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், .கஜேந்திரபூபதி, அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- வாய்க்கால் புனரமைப்பு பணிகளை நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
- விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
அம்மாபேட்டை:
உலக வங்கி உதவியுடன் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் அம்மாபேட்டை அருகே கருங்காடு மேட்டூர் வலது கரை வாய்க்கால் புனரமைப்பு பணி, அந்தியூர், ஆப்பக்கூடல் ஏரி புணரமைப்பு பணிகளை தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
அப்போது வலது கரை வாய்க்கால் பாசன விவசாயி கள் கால்வாய் புனரமைப்பு பணிகள் நல்ல முறையில் விவசாயிகளுக்கு பயன் அளிப்பதாகவும்,
வாய்க்கா லின் இருபுறமும் கான்கிரீட் தளம் அமைத்த தால் கால்வாயி லிருந்து நீர் கசிவால் வேளாண் பயிர்கள் சேதம் ஆவது தடுக்கப்பட்டி ருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தொடர்ந்து விவசாயிகளிடம் கலந்துரையாடியவர் விவசாயிகளிடம் என்னென்ன பயிர்கள் எந்தெந்த சமயங்களில் பயிர் செய்துவருகிறீர்கள் என்றும், எந்த காலகட்டத்தில் மேட்டூர் வலது கரை வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது,
எத்தனை மாதங்கள் வரை தண்ணீர் செல்கிறது? திறக்கப்படக்கூடிய தண்ணீர் தங்கு தடை இன்றி அறுவடை சமயம் வரை விவசாயத்திற்கு கிடைக்கி றதா? என கேட்டறிந்தார்.
இதில் நீர் மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், பவானிசாகர் அணைக்கோட்ட செயற்பொறியாளர் அருளழகன், செயற்பொறியாளர் சிவக்கு மார், உதவி செயற்பொ றியாளர் சாமிநாதன், பவானி உபகோட்ட உதவி செயற்பொறியாளர் இளங்கோ, உதவி பொறியா ளர்கள் கவுதமன், தமிழ்பா ரத், சுலைமான் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மதுரை பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை அரசு செயலாளர் பார்வையிட்டார்.
- மதுரை மாவட்டத்தில் 26 பள்ளிக்கூடங்களுக்கு நெல்பேட்டை சமையல் கூடத்தில் இருந்து, காலை உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் 26 பள்ளிக்கூடங்களுக்கு நெல்பேட்டை சமையல் கூடத்தில் இருந்து, காலை உணவு தயாரித்து அனுப்பி வைக்கப்படுகிறது.
மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மை செயலாளருமான சந்திரமோகன், இன்று நெல்பேட்டை மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு செய்தார்.
அங்கு அவர் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கான காலை சிற்றுண்டி தயாரிக்கப்படுவதை பார்வையிட்டார்.
பின்னர் அரசு செயலாளர் சந்திரமோகன் ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார். அங்கு காலை உணவுத் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு உணவு வழங்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அவருடன் கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன், கூடுதல் கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்