search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவாலயம்"

    • சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.
    • இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    தமிழ்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழமையான சிவாலயங்கள் இருக்கின்றன.

    இவற்றில் 276 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் என்ற சிறப்பை பெற்றவை.

    இந்த பழம்பெரும் சிவத்தலங்களில் மகத்துவமும் தனித்துவமும் நிறைந்தது உத்தரகோசமங்கை எனும் திருத்தலமாகும்.

    இந்த திருத்தலம் ராமநாதபுரத்துக்கு மிக, மிக அருகில் உள்ளது.

    சிவத்தலங்களில் பாடல் பெற்ற முதல் தலம் இந்த தலம்தான்.

    இதன்மூலம் இந்த தலமே தமிழ்நாட்டின் முதல் சிவாலயம் என்பதை உறுதிபடுத்துகிறது.

    சமயக்குறவர்களில் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தம் வாழ்நாளில் பெரும்பகுதியை இத்தலத்தில் கழித்தார்.

    அவர் தன் பாடலில், "சிவன் உண்பதும், உறங்குவதும் உத்தரகோசமங்கை தலத்தில்தான்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஓம் எனும் பிரணவ மந்திரத்தை பார்வதி தேவிக்கு சிவபெருமான் இத்தலத்தில் வைத்துதான் ரகசியமாக சொல்லி கொடுத்தார் என்பார்கள்.

    அதுபோல பார்வதிக்கு நாட்டியக்கலையை ஈசன் இங்கு ரகசியமாக சொல்லிக் கொடுத்தார் என்பார்கள்.

    'மண் தோன்றிய போதே மங்கை தோன்றியது' என்பார்கள்.

    உலகிலேயே முதலில் தோன்றிய சிவன் கோவில் இது என்று கூறப்படுகிறது.

    ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் அறியப்படாத காலத்தில் இருந்த சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே இங்கு கிரகங்களாக உள்ளது என்பதில் இருந்தே, இந்த ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை அறியலாம்.

    சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் இதுவாகும். அதனால் இந்த ஊருக்கு "உத்தரகோசமங்கை" என்ற பெயர் தோன்றியது என்று சொல்கிறார்கள்.

    அதாவது உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை.

    மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது என்கிறார்கள்.

    ஆனால் இத்தல பெயர் விளக்கத்துக்கு வேறொன்றும் சொல்லப்படுகிறது. உத்திரம் என்றால் உபதேசம்.

    கோசம் என்றால் ரகசியம். மங்கை என்றால் பார்வதி என்று பொருள்.

    பார்வதிதேவிக்கு ஈசன் ரகசியமாக வேதத்தை உபதேசம் செய்த இடம் என்ற அர்த்தத்தில் இத்தலம் உத்தரகோச மங்கை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது என்கிறார்கள்.

    இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக, இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.

    அந்த இலந்தை மரமே இவ்வாலயத்தின் தலவிருட்சமாக விளங்குகிறது.

    மங்கள நாதரின் உடனுறை அம்பிகையின் திருநாமம் மங்களேஸ்வரி என்பதாகும்.

    மாணிக்கவாசகர் இத் தலத்தில் சிவலிங்க வடிவிலும், நின்ற கோலத்திலும் காட்சி தருகிறார்.

    'நீத்தல் விண்ணப்பம்' என்னும் திருவாசகப் பகுதி இத்தலத்தில் பாடப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார் மாணிக்கவாசகர்.

    உலகிலேயே மிகச்சிறந்த சிவ பக்தனைத்தான் திருமணம் முடிப்பேன் என்று காத்திருந்தாள் மண்டோதரி.

    இதனால் அவளுக்கு நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருந்தது.

    பின்பு இத்தல ஈசனையும், அம்பாளையும் மண்டோதரி வழிபட்டாள்.

    அதன்பிறகே ராவணனை கரம் பிடித்தாள்.

    மேலும் ராவணன் மண்டோதரி திருமணம் இத்தலத்திலேயே நடைபெற்றது என்று கூறப்படுகிறது.

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார்.

    பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபா ராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திரு ளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வ ரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்த னர். இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகஸ்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்தலிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்தி கை மாத பிரதோஷத்தை யொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது
    • சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவிலில் ஆனி மாத மகா சனி பிரதோஷ வழிபாடு நேற்றுமாலை நடந்தது.

    இதையொட்டி மாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார்.

    இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர்.

    இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில் மற்றும் பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஆனி மாத மகா சனி பிரதோசத்தையொட்டி நேற்றுமாலை சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும்.
    • சிவாலயங்கள் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த திட்டையில் வசிஷ்டேஸ்வரர் கோவில் உள்ளது.

    மிகவும்பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் குருபகவான் தனி சன்னதியில் ராஜகுருவாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 20 பேர் வந்தனர்.

    இதில் 8 பெண்கள், 12 ஆண்கள் அடங்குவர். இவர்கள் ஜப்பான் நாட்டை சேர்ந்த தகாஈஹி எனப்படும் பாலகும்பமுனி என்பவரது தலைமையில் வந்தனர்.

    அவர்கள் குருசன்னதிக்கு எதிரே ருத்ர யாகம் நடத்தினர்.

    இதில் கோவில் சிவாச்சாரியார் சுவாமிநாதன், நாகை ராமநாத சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர்.

    தமிழ் மொழியின் சிறப்புகள் மேலும் பரவ வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த யாகத்தை நடத்தினர்.

    யாகம் தொடங்கி முடியும் வரை ஜப்பான்நாட்டினர் அதன் அருகே அமர்ந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் புனித நீர் அடங்கிய கடங்களை மங்கள வாத்தியம் முழங்க கோவிலுக்குள் ஊர்வலமாக எடுத்துச் சென்று, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.

    இதே போல் அவர்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்கள் மற்றும் முருகனின் அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து ஜப்பான் நாட்டை சேர்ந்த சுப்பிரமணியன் கூறுகையில், நான் ஜப்பான் நாட்டில் கடந்த 35 ஆண்டுகளாக வசித்து வருகிறேன்.

    அங்கு ஒத்தஹோமா பல்கலைக்கழகத்திலும், ஆசியன் நூலகத்திலும், ஆசியன் வாலைண்டர்ஸ் சென்டர் என்ற பெயரிலும் தமிழ் மொழியை கற்று தருகிறேன்.

    என்னிடம் சுமார் 15 ஆயிரம் பேர் தமிழ் மொழியை கற்று வருகின்றனர்.

    நான் தமிழ்மொழியை கற்றவர்களை இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்துள்ளேன்.

    உலகில் மூத்த மொழியாக உள்ள தமிழ் மொழியில் இருந்து தான், ஜப்பான் மொழி தோன்றியதாக ஜப்பானிய நாட்டவர்கள் கருதுகின்றனர்.

    அதற்கான ஒற்றுமை தமிழ் மொழியின் ஓசைகளிலிருந்து ஜப்பான் மொழியின் ஓசையும் ஒற்றுமையாக உள்ளது.

    ஜப்பான் நாட்டில் சித்தர்களையும், முருகன், சிவன் பெயர்களை அந்நாட்டுக்கே உரிய மொழியில் பெயர்களை வைத்து அழைக்கின்றனர்.

    தற்போது சிலர் தங்களது பெயரையே தமிழ் சித்தர்களின் பெயரை வைத்து அழைக்கின்றனர்.

    தமிழ் மொழியையும், பண்பாடு, கலாச்சாரத்தை கற்க ஜப்பான் நாட்டினர் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகின்றனர்.

    அதே போல் அவர்களது ஆன்மிகத்தே டலும் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகள், முக்கியமான சிவாலயங்களில் வழிபடுவதோடு இல்லாமல், சிறப்பு யாகங்களையும் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தற்போது திட்டை கோவிலில் குரு பகவானுக்கு சிறப்பு யாகம், அபிஷேகம் நடத்தியுள்ளோம்.

    குரு பார்த்தால் கோடி நன்மை எண்பார்கள், அதே போல் தமிழ் மொழியின் சிறப்பை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும், தமிழ் மொழியை ஜப்பான் நாட்டில் அதிகமானோர் கற்க வேண்டும், உலக அமைதிக்காகவும், அனைவரும் நலமுடன் வாழ வேண்டி இந்த யாகம் நடத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது.
    • ஏற்பாடுகளை மகா சிவராத்திரி கமிட்டி, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    அத்தூர்:

    முக்காணி நதிக்கரை ராமபரமேஸ்வரர் சமேத பர்வதவர்த்தினி அம்பாள் கோவிலில் மகா சிவராத்திரி தினமான இன்று இரவு முழுவதும் நான்கு கால பூஜைகள் நடைபெற இருக்கிறது. மகா சிவராத்திரி முதலாம் கால பூஜை இரவு 9.30 மணிக்கு தொடங்கி, 2-ம் காலம் இரவு 12.30 மணிக்கும், 3-ம் காலம் 2.30 மணிக்கும் 4-ம் 04.30 மணிக்கும் மஹா சிவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை முக்காணி ராம பரமேஸ்வரர்- பர்வத வர்த்தினி அம்பாள் கோவில் மகா சிவராத்திரி கமிட்டி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். 

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • பக்தர்களுக்கு 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநா தீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது.

    இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சா மிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வர ருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜா மணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெருமா னுக்கு சிறப்பு அபிஷே கங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலை சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர் கள் பேரவையினர் செய்து இருந்தனர். இதே போல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகா னந்தபுரம் சக்கர தீர்த்த காசி விசா லாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன் பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் மார்கழி மாத பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் பொற்றையடி வைகுண்ட பதியில் 1800 அடி உயர மருந்துவாழ்மலை அமைந்து உள்ளது. இந்த மலையில் ஜோதிலிங்கேஸ்வரர் உடனுறை ஸ்ரீபர்வத வர்த்தினி அம்மன் திருக்கோ வில் உள்ளது.

    இந்த கோவிலில் மார்கழி மாத பிரதோஷம் நடைபெற்றது. இதை யொட்டி மாலை 4.30 மணிக்குநந்தீஸ்வரருக்கும் மூலவரான ஜோதி லிங்கேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மாலை 6 மணிக்கு அலங்கார தீபாரா தனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம்செய்தனர். பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், பால் பாயாசம், வெண்பொங்கல் கொண்டக்கடலை, எள்ளு, உளுந்து, பஞ்சாமிர்தம், சாம்பார் சாதம் ஆகிய 9 வகையான பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

    • எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்
    • ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000ஆண்டுகள்பழமைவாய்ந்தகோவில்ஆகும்.

    இந்த கோவிலில்பு ரட்டாசிமாதபிரதோஷ வழிபாடு நேற்று நடந்தது.

    இதையொட்டிமாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் ஆகிய 13வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.

    இந்த அபிஷேகங்களை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார். பின்னர் 5.30மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது.

    பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்துஇருந்தனர். இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வ நாதர் கோவில், பஞ்சலிங்க புரம்பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணு மாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12சிவாலயங்களிலும் பிரதோசத்தையொட்டிசிறப்புஅபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×