search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமி சாவு"

    • சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன்.
    • பூஜை அறையில் விளக்கு ஏற்றினார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சோம சமுத்திரத்தை சேர்ந்தவர் மாதவன். இவரது மகள் சாதனா (வயது 11). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜனவரி 27-ந் தேதி சாதனா வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றிய போது அவரது பாவாடையில் தீப்பிடித்துக் கொண்டது. இதனால் உடலில் தீக்காயம் ஏற்பட்ட நிலைமையில் அவரை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து முதல் உதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்து அங்கு சிகிச்சை பலனின்றி மூன்றரை மாதங்களுக்குப் பிறகு அவர் பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மணல் மேலே சரிந்து விழுந்ததால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த மோசவாடியைச் சேர்ந்தவர் வடிவேல் (43), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (37). இவர்களுக்கு சாருலதா (18). சர்மி (வயது 9) என 2 மகள்கள் உள்ளனர்.

    சர்மி, கரிப்பூர் யூனியன் நடுநிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி யில், மற்றொருவரின் வீடு கட்டுமானப் பணி நடந்துவருகிறது. அந்த வீட்டுக்கான செப்டிக்டேங்க் அமைப்பதற்காக 10 அடி ஆழம் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் சிறுமி அந்த வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது, எதிர் பாராதவிதமாக மண் சரிந்ததில், செப்டிக் டேங்க் கட்டுவதற்காக தோண்டிய பள்ளத்தில் விழுந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத் தினர் அங்கு ஓடிவந்து பார்த்தனர். அதற் குள்ளாக சர்மி மீது மண் சரிந்து உயிருக்கு போராடிக் கொண் டிருந்தார். அவரை மீட்பதற்காக பொதுமக்கள் முயன்றனர். ஆனால் சிறுமி மண்ணுக்குள் முழுமையாக புதைந்துவிட்டார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு தீயணைப் புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக தீயணைப்புத்துறையினர் விரைந்துவந்து, சரிந்து கிடந்த மண்ணை அப்புறப்படுத்தி சர்மி இறந்த நிலையில் மீட்டனர். பின்னர் இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சபுஜா குமாரி குச்சியை எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.
    • இதில் குச்சி உடைந்து தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு:

    பீகார் மாநிலம், ஹிசுவா பகுதியை சேர்ந்தவர் அனூப் மாஞ்சி (43). இவர் ஈரோடு மாவட்டம் குப்பக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி அங்குள்ள பிளாஸ்டிக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் அனூப்மாஞ்சி சம்பவத்தன்று பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை பார்த்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அவரது மகள் சபுஜா குமாரி (12) விளையாடி கொண்டிருந்துள்ளார்.

    அப்போது சபுஜா குமாரி கையில் வைத்திருந்த மரக் குச்சியை அங்கு இயங்கி கொண்டிருந்த எந்திரத்தின் சக்கரத்தில் உள்ள பெல்டில் குத்தியதாக தெரிகிறது.

    இதில் குச்சி உடைந்து சபுஜா குமாரியின் தாடையில் பட்டு காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மயங்கி விழுந்த சிறுமியை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் சபுஜா குமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்மாயில் மூழ்கி 8 வயது சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள தண்டியனேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தமிழ்செல்வி. இவர்களுக்கு 8 வயதில் பிரீத்தி என்ற மகள் இருந்தாள்.

    இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பிரீத்தி அதே பகுதியை சேர்ந்த அன்பழகி என்ற சிறுமியுடன் தண்டியனேந்தல் கண்மாய்க்கு சென்றார். தண்ணீரை பார்த்ததும் 2 பேரும் கண்மாயில் இறங்கி விளையாடியதாக கூறப்படுகிறது.

    விளையாட்டின் மீதான ஆர்வத்தால் பிரீத்தி ஆழமான பகுதிக்கு சென்று சிக்கினாள். சிறிது நேரத்தில் மூச்சுத்திணறிய அவர் கண்மாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மல்லாங்கிணறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முன்னதாக பிரீத்தியின் உடலை பார்த்து அவளது பெற்றோர் மற்றும் உறவி னர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 

    • பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.
    • சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள அரச குலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு (வயது 33). விவசாயியான இவருக்கு மனைவி மற்றும் 3 வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.சம்பவத்தன்று தோட்டத்தில் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க ராமு தனது மனைவி மற்றும் மகளுடன் சென்றுள்ளார்.

    அங்கு பூச்சிக்கொல்லி மருந்தை தண்ணீர் கலந்து ராமுவும் அவரது மனைவி யும் அதனை பயிர்களுக்கு தெளிக்க சென்று விட்டனர். காலி பாட்டிலை அப்புறப்படுத்தாமல் ராமு அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டதாக தெரி கிறது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி பூச்சிக்கொல்லி மருந்தின் காலி பாட்டிலை எடுத்து அதில் தண்ணீரை ஊற்றி குடித்ததாக தெரி கிறது.

    சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிய மகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமு உடனே காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிறு சிறுமியின் உடல் நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சஞ்சனா பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்றோர் அஜாக்கிர தையாக இருந்ததால் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×