என் மலர்
நீங்கள் தேடியது "போலீஸ் வாகனம்"
- மேலும் ஒருவர் தலைமறைவு
- சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
நாகர்கோவில்:
கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்வின் (வயது 24).
இவர் கருங்கல் பஸ் நிலையம் அருகே உள்ள வேன் ஸ்டாண்டில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை அஸ்வின் அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது போலீஸ் வாகனத்தில் வந்த ஒரு கும்பல் அஸ்வினை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றது.
இந்த கும்பல் மீது அஸ்வினுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அஸ்வின் போலீஸ் வாகனத்தையும் அதிலிருந்த கும்பலையும் செல்போனில் படம்பிடித்தார். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து போலீஸ் வாகனத்தில் தப்பி சென்று விட்டது. நடந்த சம்பவம் குறித்து அஸ்வின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
அஸ்வின் செல்போனில் பதிவு செய்திருந்த அந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அஸ்வினிடம் பணம் பறித்த கும்பல் பயன்படுத்தியது குலசேகரம் போலீஸ் நிலைய வாகனம் என்பது தெரிய வந்தது. குலசேகரம் போலீஸ் நிலையத்தில் உள்ள வாகனத்தை பழுது நீக்குவதற்காக ஒர்க் ஷாப் ஒன்றில் விட்டு இருந்தனர்.
வேலை முடிந்த பிறகு அந்த வாகனத்தை அங்கு நிறுத்தி இருந்தனர். அந்த வாகனத்தை சிலர் எடுத்து செல்வது போன்ற காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் போலீஸ் வாகனத்தை எடுத்துச் சென்றது காஞ்சிரக்கோடு பகுதியைச் சேர்ந்த போஸ்கோ டைசிங் (38), ரூபன் (38), விஷ்ணு (27), கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஹிட்லர் (45)என்பது தெரியவந்தது. இவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 4 பேரையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது. டி.எஸ்.பி. தங்கராமன் தலைமையிலான போலீசார் இது தொடர்பாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் போஸ்கோ டைசிங், ரூபன், விஷ்ணு ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் போலீஸ் வாகனத்தை அந்த பகுதியில் இருந்து எடுத்து சென்று கருங்கல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றதாகவும் திரும்பி வரும் வழியில் அஸ்வினிடம் பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது.
தலைமறைவாகியுள்ள ஹிட்லரை தேடி வருகி றார்கள். போலீஸ் வாகனத்தில் சென்று வாலிபரி டம் பணம் பறித்த சம்ப வம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
- வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.
- போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பாவோடு அருகே உள்ள சக்கரக்கல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் திருவிழா தொடர்பாக மார்க்சிஸ்ட் மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருந்தபோதிலும் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசார் வாகனத்தில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் மீது யாரோ மர்மநபர்கள் குண்டுகளை வீசினர்.
ஆனால் போலீஸ் வாகனத்துக்கு அருகில் விழுந்து குண்டுகள் வெடித்தன. இதுகுறித்து வெடிகுண்டு கண்டறியும் பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் சோதனை செய்தனர். மேலும் சம்பவ இடத்தில் கிடந்த வெடிபொருட்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.
அப்போது போலீஸ் வாகனம் மீது வீசப்பட்டது ஐஸ்கிரீம் குண்டுகள் என்பது தெரியவந்தது. போலீஸ் வாகனம் மீது வெடிகுண்டுகள் வீசியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது.
- சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டேராடூன்:
ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நர்சிங் அதிகாரியை கைது செய்ய போலீஸ் வாகனம் அம்மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு வந்தது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சியடைந்தனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் வாகனம் செல்ல வழி செய்தனர். இச்சம்பவம் செவ்வாய்கிழமை நடந்த நிலையில் இதுதொடர்பான வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ஆக்கிரமித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான முழு விவரம் வருமாறு:-
எய்ம்ஸ் ஆபரேஷன் தியேட்டரில் பணிபுரியும் நர்சிங் அதிகாரி சதீஷ் குமார் மீது எய்ம்ஸ் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் செய்தார். இதுதொடர்பாக வழக்கு மட்டுமே போலீசார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சதீஷ் குமாரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், அவர் பணிபுரியும் மருத்துவமனையின் 6-வது மாடியில் உள்ள வார்டுக்கு போலீசார் வாகனத்துடன் நுழைந்தனர். இருபுறமும் படுக்கைகளில் நோயாளிகள் வரிசையாக படுத்து இருந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் நுழைந்த போலீஸ் வாகனத்தை கண்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்தனர். இதையடுத்து போலீஸ் வாகனம் செல்ல வழி சீர்செய்யப்பட்டது. 6-வது மாடிக்கு சென்ற போலீசார் சதீஷ் குமாரை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர்.
இச்சம்பவங்கள் தொடர்பாக 26 வினாடிகள் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
மேலும் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதற்கு உத்தரகாண்ட் மாநில மகளிர் ஆணையம் கண்டம் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
The cops drove their car inside AIIMS Rishikesh.pic.twitter.com/rZDkCvHipM
— Divya Gandotra Tandon (@divya_gandotra) May 22, 2024
- இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார்.
- இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மத்தியபிரதேச மாநிலத்தில் காவலர்களின் வாகனங்களை முந்தி சென்றதற்காக தலித் தூய்மை பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரோகித் வால்மீகி புகார் அளித்துள்ளளார். அந்த புகாரில், "வேலை முடிந்து பைக்கில் வீட்டிற்கு செல்லும்போது போலீஸ் மற்றும் பணியாளர்களின் வாகனங்களை முந்தி சென்றேன். இதனையடுத்து, கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக என்னை மிரட்டி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று தாக்கினார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருவதாக காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார்.
- இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் கோட்வாரில் இளைஞர் ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குடி போதையில் இருந்த இளைஞர் தனது பைக் மூலம் பல வாகனங்கள் மீது மோதியுள்ளார். இதனால் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் வாகனத்தில் ஏற்றியுள்ளனர். அப்போது போலீசாரிடம் பிரச்சனை செய்த இளைஞர் வாகனத்தின் கண்ணாடியை உடைத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது.
- ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
புதுச்சேரி:
புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கிளை சிறைச்சாலையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் சிறையில் இருந்த தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் புதுவை காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளின் வழக்குகள் காரைக்கால் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதனால், கைதிகளை அவ்வப்போது ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புடன் புதுவை சிறையில் இருந்து காரைக்கால் நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம்.
கைதிகளை அழைத்து செல்லும் போலீஸ் வாகனத்தின் சீட் சேதமடைந்தும், வாகனத்தின் உள்ளே உள்ள நடைபாதையில் பெரிய ஓட்டையும் உள்ளது. இது தொடர்பான ஒரு வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.
இது குறித்து போலீசாரிடம் கேட்டதற்கு, கைதிகளை ஏற்றி செல்லும் பல வாகனங்களின் நிலை இதுதான். இது பற்றி காவல் வாகன அதிகாரியிடம் புகார் தெரிவித்தால் முடிந்தால் இருக்கும் வாகனத்தில் எஸ்கார்ட் பணிக்கு சென்று வாருங்கள் இல்லை என்றால் செல்ல வேண்டாம் என கூறி வருவதாக வேதனை தெரிவித்தனர்.
போலீஸ் துறையை நவீனப்படுத்த பல கோடி ஒதுக்கீடு, 1000 போலீசார் நியமனம் என அடிக்கடி ஆட்சியாளர் கூறி வருகிறார்கள். ஆனால் அடித்தளம் பலமாக இல்லை என்பதை சுட்டி காட்டியும் சீரமைப்பதில்லை என சமூக வலைதளத்தில் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
- அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது.
- போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தமிழ்வாளன் மாயகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் கடலூரில் இருந்து இந்த பாதுகாப்பு பணிக்காக கோவை நோக்கி நேற்று மாலை போலீஸ் வாகனத்தில் சுமார் 16 போலீசார் குழு உடன் சென்றனர். போலீஸ் வாகனத்தை மோகன் (வயது 27) என்பவர் ஓட்டி சென்றார்.
இன்று அதிகாலை அவிநாசி பாலம் அருகே போலீஸ் வாகனம் சென்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் போலீஸ் வாகனம் முன்பகுதி பலத்த சேதமானது. போலீஸ் வாகனத்தில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசாரம் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த அவிநாசி போலீஸ் டிஎஸ்பி எஸ் பி மற்றும் போலீஸார்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த போலீசர்களை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.