search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாழன் கிரகம்"

    • 4-வது மிகப்பெரிய நிலவு யுரோப்பா என்று அழைக்கப்படுகிறது.
    • யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

    பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ முடியுமா என்று ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் வியாழன் கிரகத்தின் நிலவுக்கு விண்கலத்தை அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா அனுப்பியுள்ளது. சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் (ஜுபிட்டர்) கிரகத்தை 95 நிலவுகள் சுற்றி வருகின்றன.


    இதில் 4-வது மிகப்பெரிய நிலவு யுரோப்பா என்று அழைக்கப்படுகிறது. யுரோப்பா நிலவில் 15 முதல் 25 கி.மீ. தடிமன் கொண்ட பனிக்கட்டி படலம் உள்ளது.

    இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்புத் தண்ணீர் கடல் உள்ளது. அந்த தண்ணீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.

    சுமார் 6 ஆயிரம் கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030-ம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன.
    • கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது.

    வாஷிங்டன்:

    சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளாக வியாழன் உள்ளது. பூமியை போல் 1300 மடங்கு பெரியதாகும். வியாழன் ஒரு வாயுக்கோள் ஆகும். இதன் வளிமண்டலம் பெறும்பாலும் ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்களால் ஆனது. இதைச்சுற்றி தூசித் துகள்களால் ஆன வளையங்கள் உள்ளன.

    வியாழன் கிரகத்தில் நிறங்கள் அடிக்கடி மாறி வருகின்றன. நகரும் மற்றும் மாறக்கூடிய வண்ணங்களின் பட்டைகளை விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

    வியாழன் கிரகத்தில் மாறி வரும் கோடுக்கான காரணம் குறித்து தீவிர ஆராய்ச்சிகள் நடந்தன.

    இந்த நிலையில் இங்கிலாந்தின் சீட்ஸ் பல்கலைக் கழகத்தை சேர்ந்த வானியலாளர்கள் கூறும்போது, வியாழன் கிரகத்தின் காந்த புலத்தில் அதன் உட்புறத்தில் ஆழமாக உற்பத்தி செய்யப்படும் அலைகளால் நிறங்கள் மாறுபாடு ஏற்படலாம். இது கிரகத்தின் மேற்பரப்பில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் கீழே நிகழ்கிறது. ஒவ்வொரு நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கும் நிறங்கள் மாறுகின்றன. கோடுகளின் நிறங்கள் மாறலாம் அல்லது சில நேரங்களில் முழு வானிலை முறையும் சிறிது சிறிதாக மாறுகிறது. அது ஏன் ஒளி நிகழ்கிறது என்பது மர்மமாக உள்ளது.

    பூமிக்கு நிலஅதிர்வியல் மற்றும் சூரியனுக்கும் ஹீரியோ சிஸ்மலாஹி செய்வது போல், வியாழனில் மறைந்திருக்கும் ஆழமான உட்புறத்தை ஆய்வு செய்ய முடியும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது.
    • 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும்.

    பிரஞ்சு கயானா:

    சூரிய குடும்பத்தில் மிகப்பெரிய கோளாக வியாழன் உள்ளது. இது பூமியை போல் 1,300 மடங்கு பெரியது. தூசித் துகள்களால் ஆன வளையங்களை கொண்ட வாயுக்களின் பனி நிலவில் உயிர்கள் வாழலாம் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

    இதற்கிடையே வியாழன் கிரகத்தின் மூன்று பெரிய நிலவுகளில் உயிர்கள் வாழ உள்ளதா என்று ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் முடிவு செய்து அதற்கான பணியில் ஈடுபட்டது.

    அதன்படி ஜூஸ் மிஷன் என்று பெயரிடப்பட்ட இந்த ஆய்வுக்காக இன்று ஏரியன்-5 ராக்கெட் ஏவப் படுகிறது. பிரெஞ்ச் கயானாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய நேரப்படி இன்று மாலை 5.45 மணிக்கு ராக்கெட் ஏவப்படுகிறது.

    ராக்கெட் ஏவப்பட்ட ஒரு நிமிடத்தில் அதிலிருந்து விண்கலம் பிரியும். அது 8 ஆண்டுகள் பயணம் செய்து 2031-ம் ஆண்டு வியாழன் கிரகத்தை சென்றடையும். பின்னர் வியாழன் கிரகம் மற்றும் காலிஸ்டோ, யூரோபா, கேனிமீட் ஆகிய மூன்று பெரிய நிலவுகளை கண்காணிக்கும்.

    குறிப்பாக வியாழனின் நிலவில் புதையுண்ட கடல்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும் இந்த விண்கலம், வியாழனின் வளிமண்டலம், அமைப்பு, பனிக்கட்டி ஓடுகள், கலவைகள் மேற்பரப்புகள் மற்றும் பரந்த வியாழன் கிரகத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்தி ஆய்வு செய்யும். வியாழனில் பல மாதங்கள் சுற்றும் விண்கலம் இறுதியாக கேனிமீட் நிலவின் சுற்றுப்பாதையை அடையும். விண்கல் 10 சோலார் பேனல்களால் இயக்கப்படும். அதி நவீன கருவிகள், வியாழனின் நிலவுகளின் மேற்பரப்பு மற்றும் நிலப்பரப்பை ஆராய்வதற்கு ஒரு ரேடார் ஒலிப்பான் உள்ளிட்டவை உள்ளன. ஆய்வில் குறிப்பாக கேனிமீட் நிலவில் உயிர்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளதா என்று தீவிரமாக சோதனை செய்யப்படும்.

    இதுகுறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் கூறும்போது, சூரிய குடும்பத்தில் உயிர்கள் தோற்றம் நமது பூமிக்கு தனித்தன்மை வாய்ந்ததா? அல்லது சூரிய குடும்பத்தில் அல்லது அதற்கு அப்பால் வேறு எங்காவது நிகழுமா? என்று ஆய்வு செய்யப்படும் என தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது.
    • சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக வியாழன் வந்துள்ளது.

    வாஷிங்டன்:

    சூரிய குடும்பத்தில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய 8 கோள் உள்ளது. மேலும் 5 குறுங்கோள்களும் உள்ளன.

    ஒவ்வொரு கோள்களுக்கும் நிலவுகள் உள்ளது. பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ளது. சனி கிரகத்துக்கு 83 நிலவுகள் இருக்கிறது. அதேபோல் வியாழனுக்கு 80 நிலவும், யுரேனுக்கு 27, நெப்டியூனுக்கு 14, செவ்வாய் கிரகத்துக்கு இரண்டு நிலவுகள் உள்ளன. வெள்ளி மற்றும் புதன் ஆகிய கிரகங்களுக்கு நிலவு கிடையாது.

    இந்த நிலையில் வியாழன் கிரகத்தை சுற்றி 12 புதிய நிலவுகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதனால் வியாழன் கிரகத்தின் நிலவுகள் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் கொண்ட கிரகமாக வியாழன் வந்துள்ளது. சனி கிரகம் உறுதிப்படுத்தப்பட்ட 83 நிலவுகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.

    இது தொடர்பாக விஞ்ஞானி ஸ்காட் ஷெப்பர்ட் கூறும்போது, 2021 மற்றும் 2022-ம் ஆண்டில் ஹவாய் மற்றும் சிலியில் தொலைநோக்கிகளை பயன்படுத்தி இந்த புதிய நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதிய நிலவுகள் 0.6 மைல் முதல் 2 மைல் அளவில் இருக்கும்.

    எதிர்காலத்தில் இந்த வெளிப்புற நிலவுகளில் ஒன்றை நெருக்கமாக படம் பிடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன். வியாழன் மற்றும் சனி ஆகியவை சிறிய நிலவுகளால் நிரம்பி உள்ளன என்றார்.

    • பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
    • பொதுமக்கள் பாராட்டு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பட்டதாரியான இவர் சிறுவயதில் முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்.

    இந்த நிலையில் ரூ.3 லட்சம் செலவில் அதிநவீன டெலஸ்கோப் வாங்கி 58 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை படம் பிடித்து காண்பித்தார்.

    மேலும் வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வீட்டின் மாடியில் டெலஸ்கோப் வைத்து காண்பித்தார்.

    மேலும் மோயகன்ராஜ் இத்தகைய வானிலை ஆராய்ச்சி செய்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக செய்து வரும் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    ×