search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ் மோதி"

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.
    • ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக வேலை செய்பவர் ராஜா என்கிற ரங்கசாமி (41). இவருக்கு திருமணம் ஆகி 2 மகள்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு ரங்கசாமி வேலை முடித்து விட்டு சொந்த வேலை காரணமாக நம்பியூர் மேடை அருகே ரோட்டின் வலது பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக ரங்கசாமி மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட ரங்கசாமி சம்பவ ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அம்மாபேட்டை:

    அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை கேட், விநாயகா நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயகுமார் (29) பி.எஸ்சி. அக்ரி படித்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது வெல்டிங் பட்டறை வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை 7.45 மணியளவில் வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் மொண்டிபாளையம்-சிங்கம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    மேட்டூர் மெயின் ரோட்டில் இணைய முயன்ற போது மேட்டூரில் இருந்து பவானி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விஜயகுமார் பஸ் சக்கரத்துக்கு அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். விஜயகுமார் உடலை அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர்.
    • திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    புதுவை நகர பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 65). இவரது மனைவி அம்பிகா (60). இருவரும் மோட்டார் சைக்கிளில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சென்றனர். அப்போது திண்டிவனம் அடுத்த தீவனூர் அருகே சென்றபோது, சாலையில் இருந்த விநாயகர் கோவிலை கண்டனர். அங்கு சென்று சாமி கும்பிட மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையை கடந்தனர்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் இவர்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வெங்கடாசலம், மனைவி கண்முன்னே துடி துடித்து உயிரிழந்தார். லேசான காயங்களுடன் உயிர்தப்பிய அம்பிகாவை, அவ்வழியே சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ரோசனை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடாசலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
    • விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    சீர்காழி:

    கும்பகோணத்திலிருந்து சிதம்பரம் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

    எருக்கூர் தூய சிந்தாத்திரை மாதா ஆலயம் அருகே சென்ற போது புத்தூரிலிருந்து சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற புத்தூர் மேல தெருவை சேர்ந்த சிவபாலன்(வயது 38) என்பவர் காருக்குள்ளேயே உடல் நசுங்கி இறந்தார்.

    காரில் பயணம் செய்த புத்துரை சேர்ந்த சக்தி வேல்(28), பாலமுருகன்(27) ஆகிய இருவரும் சிறு காயத்துடன் உயிர் தப்பினர. அரசு பஸ் சாலை ஓரம் சென்று நின்றது.

    இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் இறந்த சிவபாலன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    விபத்தில் இறந்த சிவபாலன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தநிலையில் புத்தூருக்கு வந்து ஒரு மாத காலம் ஆகிறது.

    இவருக்கும் ஓவியா (32) என்பவருக்கும் திருமணம் நடைபெற்று 3 வருடம் ஆன நிலையில் 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    சத்தியமங்கலம்,

    சத்தியமங்கலம் அருகே உள்ள தொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்க சாமி (வயது 60). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் ரங்கசாமி நேற்று இரவு வேலைக்கு சென்றார். இதையடுத்து அவர் வேலை முடிந்து இன்று காலை 5.45 மணிக்கு வீட்டுக்கு மோட்டார் சைக்கி ளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது சத்திய மங்கலத்தில் இருந்து பவானிசாகருக்கு ஒரு அரசு டவுன் பஸ் சென்று கொண்டு இருந்தது.

    தொடர்ந்து அவர் சத்திய மங்கலம் பவானிசாகர் ரோட்டில் வந்தார். அப்போது அந்த அரசு டவுன் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார்.

    இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ரங்கசாமி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் மீண்டும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

    இது குறித்து பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கரமாக மோதியது.
    • இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    சேலம்:

    கோவையில் இருந்து சேலம் நோக்கி இன்று காலை ஒரு அரசுப் பேருந்து வந்தது. காலை 6.30 மணி அளவில் சேலம் 3 ரோடு ஜவகர் மில் எதிரில் வந்தபோது அங்கு ஒரு ஷெட்டில் நிறுத்தி இருந்த கண்டெய்னர் மற்றும் பேருந்துகள் விபத்தில் சிக்கியதால் அதை மீட்பதற்காக பயன்ப டுத்தப்படும் கிரேன் சாலையின் குறுக்கே வந்து திருவகவுண்டனூர் பைபாஸ் சாலையை நோக்கி திரும்பியது.

    அப்போது எதிர்பாராத விதமாக அரசுப் பேருந்து அந்த கிரேன் மீது பயங்கர மாக மோதியது.இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.இந்த விபத்தில் பஸ்சின் முன் பகுதியில் அமர்ந்திருந்த கண்டக்டர் கோவிந்தராஜ் மற்றும் டிரைவர் ஜோதி வெங்கடேசன் (50 ) உள்பட 10-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.இதுகுறித்து தகவலறிந்த பள்ளப்பட்டி போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.மேலும் கிரேனை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த டிரைவர் சந்தன ராஜ் (48 ) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.சாலையின் குறுக்கே கிரேன் வருவதை அறிந்த அரசு பேருந்து ஓட்டு நர் துரிதமாக செயல்பட்டு பஸ்சை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    ×